மெர்ஸியின் மதிப்பு என்ன தெரியுமா ?

போராடும் பார்சிலோனா அணி

 மெர்ஸியின் மதிப்பு என்ன தெரியுமா ?
Back 32 Twitter Google Twitter Facebook

கால்பந்தாட்ட உலகின் ஜாம்பவான் என்றால் மெர்சி என்பதை எல்லோரும் அறிவர் . இவர் தமது 16 ஆவது வயதில் இருந்தே பார்சிலோனா அணிக்காக விளையாடி வருகிறார் 

கடந்த நவம்பர் மாதம் பார்சிலோனா அணி மெர்சியை தமது அணியில் தக்க வைத்து கொள்ள 843 மில்லியன் அமெரிக்க டாலருக்கு ஒப்பந்தத்தை புதுப்பித்துக் கொண்டது.

கடந்த ஆகஸ்ட் மாதம் பார்சிலோனா  அணியில் விளையாடிய இன்னும்பொரு நட்சத்திர வீரர் நெய்மார் 200 மில்லியன் டாலர் அமெரிக்க டாலருக்கு  பரிஸ்  சென்ட் ஜெர்மன் அணிக்கு விலை போனதுவும் இதற்கான ஒரு காரணமாக கருதப்படுகின்றது .  வேறு எந்த அணியும் மெஸ்சியை நாடிவிடக் கூடாது என்பதற்காக இவ்வளவு பெரிய தொகையை நிர்ணயித்தது பார்சிலோனா அணி . 


இந்நிலையில்தான் ஸ்பெயின் தலைமையில் இயங்கி வந்த கேடலோனியா பிராந்தியத்தில் தனி நாடு கோரிக்கை எழுந்தது. இதற்கான வாக்கெடுப்பில் கேடலோனியா பிரிவதற்காக ஆதரவாக அதிக அளவில் வாக்களிக்கப்பட்டது. இதனால் ஸ்பெயினி்ல் இருந்து கேடலோனியா எப்போது வேண்டுமானாலும் பிரிய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 

கேடலோனியா பிராந்தியத்தில்தான் பார்சிலோனா கிளப் உள்ளது. இதனால் பார்சிலோனா லா லிகா தொடரில் விளையாட சாத்தியமில்லை. பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாட்டில் நடைபெறும் லீக் உடன் இணையலாம். 

மெஸ்சி தனது ஒப்பந்தத்தில் லா லிகாவில் விளையாடினால் மட்டும்தான் இந்த ஒப்பந்தம் செல்லும். பார்சிலோனா வேறு நாட்டு லீக்கில் இணைந்தால் ஒப்பந்தம் கட்டுப்படுத்தாது என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளதாக என்று உள்ளூர் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

இந்த செய்தியின்படி பார்த்தால் ஒருவேளை கேடலோனியா பரிந்து பார்சிலோனா வேறு நாட்டு லீக்கில் விளையாடினால் மெஸ்சி எந்தவித நிபந்தனையும் இல்லாமல் ப்ரீ டிரான்ஸ்பர் மூலம் வேறு அணிக்குச் செல்லலாம். 


இப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அது பார்சிலோனா கிளப்பிற்கு பெரிய இழப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது 

Back 32 Twitter Google Twitter Facebook