இலங்கைக்கு வரும் சுற்றுலா பிரயாணிகள் இதை கவனிக்கவும்

இலங்கைக்கு வரும் சுற்றுலா பிரயாணிகள்  இதை கவனிக்கவும்
Back 51 Twitter Google Twitter Facebook

உலக வரைபடத்தில் பௌதீக ரீதியிலும்  காலநிலையில் அழகிய நாடு இலங்கை என்பது மறுக்க முடியாத உண்மை. இலங்கை சுற்றுலா துறைக்கென பெயர் போன நாடு . பல உலக சஞ்சாரிகளின் பிரயாண லிஸ்டில் கண்டிப்பாக இலங்கைக்கு இடம் உண்டு.

இலங்கைக்கு முதன் முதலில் வருகை தர இருக்கும் பிற நாட்டவர்கள் கருத்தில் கொள்ள வேண்டிய விடயங்களை இங்கு காணலாம். இது உங்கள் பயணத்தை இலகுவாக்க உதவியாக இருக்கும்.

 முன் ஏற்பாடு .

இது இலங்கைக்கு மட்டுமல்ல நீங்கள் எந்தவொரு வெளிநாட்டுக்கு செல்ல தயாராகும் முன் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய விடயம் ஆகும். அதாவது நாட்டின் வரைபடம், பிரதான மற்றும் அடிப்படை விடயங்கள், அடிப்படை சட்ட விதிகள், குடிவரவு சட்டங்கள் என்பன பற்றிய அடிப்படை விடயங்கள் அறிந்து வைத்து கொள்வது சாலச் சிறந்தது ஆகும்.

மொழி அறிவு 

இலங்கையின் பிரதான பேச்சு மொழி சிங்களம் எனினும் இங்கு வசிக்கும் பலருக்கு சரளமாக  ஆங்கிலம்  பேச வரும் ஆயினும்சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் சில அடிப்படை வார்த்தைகளை தெரிந்து வைத்து கொள்வது மிகவும் உபயோகமானது ஆகும் 

நாணய அலகு 

இலங்கையில் புழக்கத்தில் இருக்கும் நாணய அலகு ரூபாய் ஆகும் (LKR) அண்மையில்  நாணய புழக்கம் தொடர்பில் சில சட்ட வரையறைகள் அறிமுகப்படுத்தப்பட்டது. அவ்வாறே நாணய தாள்கள் குற்றிகள் தொடர்பில் அவதானத்தில் இருப்பது அவசியம் ஆகும்.

காலநிலை பற்றிய தெளிவு 

இலங்கையின் ஸீதோஷ்ன காலநிலை பலரையும் கவர்ந்தது. அதிக வெயில், குளிர், மழை என்பன இங்கு எப்போதுமே  சீராக  இருப்பது இலங்கைக்கான தனி சிறப்பாகும். என்றாலும் இலங்கையில் நிலவக்கூடிய பருவ பெயர்ச்சி கால  நிலைகளையும்  எந்தெந்த காலங்களில் மழை , வெயில் நிலவும் என்பன தொடர்பில் அடிப்படையாக தெரிந்து வைத்துக்கொல்வது சிறந்தது ஆகும் 

வீசா பற்றிய அறிவுறுத்தல்கள்.

நீங்கள் எந்த நாட்டவர் என்றாலும் இலங்கைக்கு உள்  நுழைவதற்கான அனுமதி விசா பற்றி கண்டிப்பாக தெரிந்து வைத்து இருக்க வேண்டும். இதற்கென இலங்கை அரசாங்கத்தினால் பிரத்யேகமாக http://eta.gov.lk/slvisa/ என்ற தளம் செயல்பட்டு வருகின்றது. அதில் நீங்கள் பின் பற்ற வேண்டிய நடை முறைகள், இலங்கையில் தங்குவதற்கான கால எல்லை, கட்டண விபரம் மற்றும் அது சம்பந்தமான சகல அறிவுறுத்தல்களை வழங்கப்பட்டுள்ளது.


முக்கிய நகரங்கள் 

இலங்கையின் தலை நகரம் கொழும்பு. அது போல் இலங்கையில் காணப்படும் சில முக்கிய நகரங்கள் பற்றி அறிந்து வைத்து கொள்வது அவசியம். புராதன இடங்கள், இயற்கை அழகு  மிக்க பிரதேசங்கள், அந்த இடங்களின் சிறப்புக்கள் என்பன பற்றி அடிப்படை அளவில் தெரிந்து வைத்து இருக்க தவறாதீர்கள் . அவ்வாறே யானைகள் சரணாலயம், விலங்குகள் சரணாலயம் , அரச கொட்டைகள், அருவிகள், கடற்கரை மலைப்பிரதேசம் போன்று ஏராளமான விடயங்கள் அமைந்துள்ள இடங்களை அறிந்து வைத்து கொள்ளுங்கள் 


உணவு பழக்க வழக்கம்.

இங்குள்ள உணவு பழக்க வழக்கம் பெரும்பாலும் தெற்காசிய நாடுகளை ஒத்ததாகவே அமைந்து உள்ளது அவ்வாறே ஆடை அணிகலன்களும் இதன் அடிப்படையிலேயே அமைந்துள்ளது.அத்துடன் கடல் உணவுகள் , கைவினை பொருட்கள் என்பன இங்கு மலிவாக கிடைக்கும் என்பதை கருத்திற் கொள்க 

என்ன வாங்கலாம்?
இலங்கைக்கு வந்தால் அரிதாக கிடைக்க கூடிய பொருள்களில் மிக முக்கிய இடம் வகிப்பது தேயிலை. இலங்கை தேயிலைக்கு உலகளாவிய ரீதியில் பெரும் வரவேற்பு உள்ளது. அவ்வாறே கைவினை பொருட்கள், கைத்தறி ஆடைகள் , வாசனை திரவியங்கள் என்பன கூட சுற்றுலா பிரயாணிகளை கவர்ந்தவை ஆகும். 
 

Back 51 Twitter Google Twitter Facebook