எதிரியை சமாளிக்க இலகுவான வழிகள்

வாழ்க்கையிலும் தொழிலிலும் வெற்றிபெற 12 யுக்திகள்

எதிரியை சமாளிக்க இலகுவான வழிகள்
Back 131 Twitter Google Twitter Facebook

நாம் எந்த துறையை சார்ந்து இருந்தாலும் அதில் கண்டிப்பாக எதிராளியாகவும், போட்டியாளராகவும் ஒருவர் இருக்கத்தான் செய்வார்கள். அவ்வாறு இருக்கும் பட்சத்திலேயே அந்த துறையில் சிறந்து விளங்கவும், தரமான வெளிப்படுத்தல்களை நிரூபிக்கவும் முடிகின்றது.ஏன் என்றால் இவ்வகை போட்டியாளர் ஒருவர் இருந்தால் தான் நம்மால் சிறந்த சேவைகளை வழங்கும் கட்டாயத்திற்கு ஆளாவோம் .

"கீரை கடைக்கும்  எதிர் கடை வேண்டும் " என்ற பழமொழி உண்மையே. இவ்வாறு  எதிராளி இருக்கும் பட்சத்தில் எம்மை நாம் திறம்பட மெருகேற்றிக்கொள்ளலாம் என்பது உண்மையே.

இவ்வாறு எமக்கு போட்டியாக வருபவரை அல்லது வரும் விடயங்களை பின்வரும் யுக்திகளை கொண்டு சமாளிக்கலாம்.

 1.  போட்டியை சமாளிக்க முதலில் உங்களின் பலம் மற்றும் பலவீனங்களை ஆராய வேண்டும்.அதேபோல  உங்கள் போட்டியாளரின் பலம் மற்றும் பலவீனங்களை ஆராய வேண்டும்.இவ்வாறு ஆராயும் பட்சத்தில் நமது போட்டிகள் இலகுவாக சமாளிக்கப்படுகின்றது.
 2. தரம் மற்றும் நேர்மையில் பின்வாங்க கூடாது. சரியானவற்றை எப்படி செய்தாலும் அவற்றை நேர்மையாக செய்வதால் நாம் நமது சேவை வழங்களில் முன்னணி வகிப்போம் என்பது உறுதி. 
 3. புதிய யுக்திகள்,தொழில்நுட்பங்களை எமது முயற்சிக்கு ஈடுபடுத்த தவறக்கூடாது.அவ்வாறே எமது சேவை பெருநர்களுக்கும் அதுபற்றிய விழிப்புணர்வை வழங்கிட வேண்டும்
 4. சேவைகளை,மற்றும் வெளிப்படுத்தல்களை மேற்கொள்ளும்போது எமது தனித்துவம் பேணப்படல்  வேண்டும்.அடுத்தவரை விட நாம் எவ்வாறு தனித்துவத்துடன் விளங்குகின்றோம் என்பதில் தாம் நாம் முக்கியத்துவம் பெறுவோம்.
 5. எமது சேவைகள்,அல்லது செயல்களில் குறைகள் காணப்படுமிடத்து யாராவது அதனை சுட்டி காட்டினால்  கட்டாயம் அதனை திருத்திக்கொள்ள தயங்க கூடாது.அவ்வாறே அந்த தவறினை எவ்வாறு ஈடு செய்வது என்பதை கேட்டு அறிந்திடவும் தயங்கிட கூடாது.
 6. எமது சேவை மற்றும் செயல்களில் தரத்தினை எந்த வகையிலும் குறைத்துக்கொள்ள கூடாது,மாறாக மேலும் மெருகேற்றிக்கொள்ள வேண்டும் .
 7. கற்றுக்கொள்ளும் திறனை அதிகப்படுத்திக்கொள்ளல் அவசியம்.எமக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்ற மமதை மட்டும் இருக்கவே கூடாது.மாறாக எம்மைவிட சிறியவராயினும் அவரின் ஆலோசனைகளை செவிமடுப்பதால் நாம் எந்த வகையிலும் குறைந்து விட போவது இல்லை.அவர்களின் அறிவுரை கூட நமது வெற்றிக்கு ஒரு வழியாக இருக்கும்  
 8. தொழிலில் நமது போட்டியாளர்கள் மிளிர்வதற்கான காரணம் என்னவென்று ஆராயும் அதே பட்சத்தில் அதற்காக அவர்கள் பயன்படுத்தும் பிரதான யுக்திகள் பற்றிய தெளிவும் இருக்க வேண்டும்.இது மிகவும் முக்கியம் வாய்ந்தது ஆகும் .
 9. வருங்காலத்தில் உங்கள் தொழிற்துறையில் எவ்வகையான மாற்றங்களை கொண்டு வரலாம் என்பதனை தூர நோக்குடன் ஆராய்ந்து கொள்வது நல்லது.இவ்வகை முற்போக்கான சிந்தனைகள் நமது வளர்ச்சிக்கு நீண்டகால ஸ்திரத்தன்மையை தோற்றுவிக்கும் .
 10. எமது சேவை வழங்கலை பாதிக்கும் விடயங்கள் எவை என்பன பற்றி ஒரு அறிவூட்டல் கட்டாயம் இருக்க வேண்டும். அவ்வாறு நாம் பின்தங்கி இருக்கும் விடயங்களை சீர்தூக்கிப் பார்ப்பதுடன் அதனை சரிசெய்துகொள்வது எப்படி என்பதை ஆராய்ந்து அவற்றை  சீர்படுத்திக்கொள்ள தவற கூடாது.
 11. உடல் வலிமை ,மற்றும் மனதில் ஸ்திரத்தன்மை கட்டாயமானது.ஏதேனும் ஒரு சிறு தோல்வியை நாம் சந்திக்க நேரும் பட்சத்தில் அதனை எப்படி சரிசெய்து,அடுத்த வெற்றியை நோக்கி நகர்வது என்பதை பற்றி சிந்திக்க வேண்டுமே தவிர அந்த தோல்வியை கண்டு துவண்டு விழகூடாது 
 12. சுறுசுறுப்பாகவும், எந்தவொரு செயலை செய்வதாயினும் அதில் இருந்து பின் வாங்கிடாமல் இருக்கவும் வேண்டும்.மாறாக தயக்கத்தை வெளிக்காட்டும் பட்சத்தில் நாம் எவ்வகை திறமைசாலியாக இருந்தாலும் பின்வாங்கிட நேரிடும் 
Back 131 Twitter Google Twitter Facebook