நாணயத்தில் தலையும் வாலும் வந்தது எப்படி

நாடுகளின் சார்பில் ஹெட் , ட்டெய்ல்ஸ் என்று அழைக்கப்பட காரணம் இதுதான்

நாணயத்தில் தலையும் வாலும்  வந்தது எப்படி
Back 87 Twitter Google Twitter Facebook

நாணயத்தில் காணப்படும் இரு பக்கங்களை நாம் பல நூற்றாண்டு காலமாக பூ மற்றும் தலை (Head  and  Tails) என்று  வருகின்றோம் . ஆயினும் அதற்கான காரணம் என்ன என்று இதுவரை யாரும் அறிந்தது இல்லை . ஒவ்வொரு நாடுகளின் சார்பில் எவ்வாறு இந்த சொற் பிரயோகம் வழமைக்கு வந்தது என்று பார்க்கலாம் .


பெரும்பாலும் இந்த சொல் வழக்கு ரோம மொழி பிரயோகத்தில் இருந்து வந்தது என கூறுகின்றனர் .  இதற்கு முதல் நாணய அலகுகளை முதலில் வழக்கத்திற்கு கொண்டு வந்தது கிரேக்க மற்றும் ரோம நாடுகளுக்கே இவ்வகை நாணய அலகுகள் பழக்கத்திற்கு வந்தது. எனவே அங்குள்ள பேச்சு வழக்கின் படி ஹெட் , ட்டெய்ல்ஸ்  என்ற வழக்கமும் வந்து இருக்கலாம் என்று அறியப்படுகின்றது.

ஆதி காலத்தில் ரோம  நாணயங்களில் அந்த நாட்டை ஆண்ட  அரசன் மற்றும் ஆட்சியாளர்களின் உருவம் பொறிக்கப்படும் வழமை காணப்பட்டது. எனவே இந்த ஹெட் ,ட்டெய்ல்ஸ்  வழக்கம் வந்திருக்கும் 

 பிரிட்டனிலும் வெகு காலாமாக அரசரின் படத்தை நாணயங்களில் பொரிக்கும் வழக்கம் கொண்டிருந்து வருகிறார்கள். மேலும், ஒரு பக்கத்தில் ஆட்சியாளர் படமும், மறுப்பக்கத்தில் வேறு ஏதனும் இலட்சினை அல்லது வேறு உருவ படமும் பொரித்து வைத்திருப்பார்கள்.
 ஆனால், இவர்கள் அப்வர்ஸ் (ஹெட்ஸ் - தலை), ரிவர்ஸ் (டெயில் - பூ) என்று கூறும் வழக்கம் கொண்டிருந்தனர். 


பொதுவாகவே ஒருப்பக்கம் ஒரு நபரின் தலை இருப்பதால் அதை ஹெட்ஸ் என்றும். தலையின் மறுமுனை வால் என்பதால் டெயில் என்றும் கூறும் பழக்கம் காலப்போக்கில் வந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. 

பிரிட்டிஷ் பத்து பென்ஸ் நாணயத்தில் பறைசாற்றும் சிங்கத்தின் வால் அச்சிடப்பட்டிருந்தது. இதன் காரணமாக ஒருபுறம் இருந்த ஆட்சியாளரின் தலையை ஹெட்ஸ் என்றும். மறுபுறம் இருந்த சிங்கத்தின் வால் பகுதியை டெயில் என்றும் கூறும் பழக்கம் வந்திருக்கலாம் என்ற கருத்தும் பொதுவாக காணப்படுகிறது.


மேற்கு ஆசியா பகுதியில் இருந்த லிடியா எனும் பண்டையக் காலத்து அரசாட்சி பகுதியில் எப்போதுமே ஒருபுற நாணயத்தின் பகுதியில் அரசரின் படமும், மறுபுறம் நாணயத்தின் பகுதியில் விலங்குகளின் படமும் பதிக்கும் பழக்கமிருந்தது. இதுவே காலப்போக்கில் கிரேக்கம் மற்றும் ரோம நாடுகளில் பின்பற்றப்பட்டதாக அறியப்படுகிறது. ஒருவேளை அரசரின் முகத்தை ஹெட்ஸ் என்றும், மிருகத்திற்கு வால் இருப்பதால் டெயில் என்றும் பின்னாட்களில் கூற துவங்கியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. 


உலகின் பல நாடுகளில் இந்த ஹெட்ஸ் மற்றும் டெயில் என்று நாணயத்தின் இரு பக்கங்களை கூறி அழைக்கும் பழக்கம் இருக்கையில். இத்தாலியில் மற்றும் நாணயத்தின் இரு பக்கங்களை ஹெட்ஸ் மற்றும் ஹார்ட்ஸ் என்று கூறி அழைக்கிறார்கள். 

கேரி சிம்சன் எனும் நியூயார்க் பல்கலைகழக விரிவுரையாளர் என்ன கூறுகிறார் எனில், பொதுவாகவே பண்டையக் காலத்து நாணயங்களில் ஒருபுறம் ஆட்சியாளர்கள் / அரசர்களின் புகைப்படமும் மறுபுறம் வேறு ஏதனும் புகைப்படமும் பதிக்கப்பட்டிருக்கும். ஆனால், பெரும்பாலும் கோட் ஆப் ஆர்ம்ஸில் இருக்கும் நோபல் பறவையின் படம் பதிக்கப்பட்டிருக்கும். அதற்கு டெயில் இருந்தது. அதை தான் ஹெட்ஸ் மற்றும் டெயில் என்று கூற துவங்கியிருக்கலாம். என்று பதில் கூறியுள்ளார். 

 இதுப்போக பலர் கூறும் பொதுவான கருத்தாக இருப்பது. அரசர்களின் முகம் பதிக்கப்பட்ட காரணத்தால் ஒரு புறத்தை ஹெட்ஸ் என்றும், தலையின் மறுமுனையாக வாலை கருதுவதால் டெயில் என்றும் கூறியிருக்கலாம் என்று கருத்து பகிர்ந்துள்ளனர். இது சாதராணமாக வந்து ஒரு சொல்லாடலாக கூட இருக்கலாம். ஏனெனில், பெரும்பாலான நாணயங்களின் ஒரு புறம் அரசர்களின் தலை இருந்தாலும். மறுபுறத்தில் வெவ்வேறு சித்திரம், படம், விலங்குகளின் படம், சில இலச்சினைகள் தான் இடம்பெற்றிறுக்கின்றன என காரணம் கூறுகிறார்கள்.
 

Back 87 Twitter Google Twitter Facebook