சொந்த வியாபாரம் ஒன்றினை தொடங்குவதற்கு தயக்கம் கொண்டவரா நீங்கள்

தொடக்கநிலை வணிகத்திற்காக சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனைக்கான 6 குறிப்புகள் 
சொந்த வியாபாரம் ஒன்றினை தொடங்குவதற்கு தயக்கம் கொண்டவரா நீங்கள்

இந்த காலத்தில் பலரும் சுயதொழில் அல்லது கூட்டு தொழில்களை ஆரம்பித்து செய்வதற்கென விருப்பம் உள்ளவர்களாகவே உள்ளார்கள். அதாவது ஏற்கனவே உள்ள பழைய தொழில் நிலைகளை தவிர்த்து புதிது புதிதாக தொழில் புத்துருவாக்கத்தினையே பலரும் நாட்டம் கொண்டுள்ளனர்.

எந்தவொரு முயற்சியும் ஆரம்பிப்பதற்கு முதல் அனைவருக்கும் மிகுந்த அச்சநிலையே இருக்கும். தொழிலாகட்டும், கல்வி நிலையாகட்டும், அனைத்து விடயங்களையும் புதிதாகத்தொடங்குவதை எல்லோரும் மிகுந்த அச்சம் கொண்டே அணுகுவார்கள். 

வணிகவியலை பொறுத்தவகையில் இது விதிவிலக்கு அல்ல. தொடக்கநிலை வணிகங்கள் தொடர்ந்தும் வேண்டும் என்றால் அதற்க்கு சந்தைப்படுத்தலும் விற்பனையும் வினைத்திறன் மிக்கதாக அமையவேண்டியது அவசியம் ஆகும். அவ்வாறு சிறந்த விற்பனை சந்தைப்படுத்தல் முறைகளை தொடக்கநிலை வணிகத்திற்கு அமைத்துக்கொள்ள பின்வரும் யுக்திகளை கடைபிடிக்கலாம்.

1.நன்மைகளை பெற்றுக்கொள்ள ஒப்பீடுகளை அணுகாதீர்கள்.

விற்பனை என்பது இலாபத்தினை மட்டுமே எதிர்பார்த்து செய்யப்படுவது. விற்பனைகளின் போது ஒப்பீடுகளை நாமே பரிந்துரைத்தோமானால் இலாபமீட்டுதல் என்பதே நமது கைமீறி சென்றுவிடும் அபாயத்தினையே கொண்டிருக்கும்.
எமது விற்பனை சந்தைப்படுத்தல் தொடர்பில் நாம் தனித்துவமான வழங்குநர்களாக இருக்கும் பட்சத்தில் எமது விற்பனை இலாபகரமானதாக இருக்கும். 

2. உங்கள் வாடிக்கையாளர்களுக்கு செவிமடுங்கள். 

அனைத்து வணிகவியலுக்குமான இலக்கு வாடிக்கையாளர்களே. வாடிக்கையாளர்களின் விருப்பு வெறுப்புக்களை அறிந்து அவற்றுக்கு ஏற்ப நமது விற்பனையை மேம்படுத்துவது சிறந்த விற்பனை பெறுபேறுகளை பெற்றுக்கொள்ளும் யுக்தி ஆகும். எமது விற்பனை தொடர்பில் எமது நுகர்வோர் கொண்டுள்ள கருத்துக்கள், மற்றும் எண்ணங்களை அறிந்து அவர்களிடமிருந்து நேரடியாக பெற்றுக்கொள்வதன் மூலம் அவர்களுக்கான தேவையை நிறைவாக பூர்த்தி செய்து கொள்வதுடன் அவர்களின் திருப்தி நிலை அதிகப்படுத்துமானால் எமது விற்பனை இலாப நிலையம் அதிகமாக்கும் என்பதில் ஐயமில்லை 

3. பொருள்களை தயார் நிலைக்கு முன்னரே சந்தைப்படுத்துக.

இந்தக்கால விநியோக சந்தைப்படுத்தல் முறையின் யுக்தி பொருட்கள் முழுமை பெறுவதற்கு முன்னமே சந்தைப்படுத்தலினை மேற்கொள்வதாகும். குறித்த பொருள் பற்றிய எதிர்பார்ப்பினை அதிகப்படுத்தும்போது அந்த பொருளினை கண்டிப்பாக வாங்க வேண்டும் என்ற ஆர்வம் நுகர்வோருக்கு கண்டிப்பாக எழும். அவ்வாறே பொருளுக்கான கேள்வி நிலையினை அதன் ஆரம்ப நிலைக்கு முன்னமே நாம் உருவாக்கிக்கொள்ள இது உதவியாக அமையும்.

4. விற்பனை எல்லைக்கு அப்பால் சந்தைப்படுத்தலை திட்டமிடுங்கள். 

பொருட்களுக்கான விற்பனையை எல்லை என்பது குறிப்பிட்ட வலையமைக்கு உட்பட்டதாக மட்டும் திட்டமிட கூடாது. பரந்துபட்ட ரீதியில் சந்தைப்படுத்தலை மேற்கொள்ளும்போது கண்டிப்பாக எதிர்பார்த்த நுகர்வோரைவிட அதிகமானோரை எமது பொருள் சென்றடையும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள் இதற்கான பிற மூலங்கள், விற்பனை வழிகள், சந்தைப்படுத்தல் முறைமைகள், சமூக வலையமைப்பு கருவிகள், இணையவழி மேம்படுத்தல்கள் போன்றவற்றை பயன்படுத்திக்கொள்ளலாம்.

5. வேகமான சோதனையே வேகமான தோல்வி.

சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை என்பது குறுக்கியகாலத்தில் எப்பொழுதும் இலாபத்தினை பெற்றுத்தராது. மிகநீண்டகால செயற்பாடுகளின் பின்னரே மக்களுக்கு பொருட்கள் சேவைகள்பற்றி அரிதாய் சென்று அடைவது மட்டுமன்றி பல காலமாக உங்களின் விளம்பரம் காணப்படும்போது மட்டுமே தொடர்ந்தும் பொருட்களுக்கான கேள்வி நிலை அதிகப்படுத்தப்படும் என்பதில் ஐயமில்லை. அவ்வாறே தொடர்ந்தும் உங்கள் பொருள் பற்றிய அறிவுறுத்தலே உங்கள் பொருளுக்கான கொள்வனவினை நுகர்வோருக்கு மேலும் உந்துதலை தரும்.

6. பல கோணங்களில் இருந்தும் விளம்பரம் செய்வது சிறந்தது.

ஒரே பொருளுக்கு பலவகையான வழிகளிலும், முறைகளிலும் விளம்பரப்படுத்தலை மேம்படுத்துவது சிறந்த யுக்தியாகும். ஒரேமாதிரியான விளம்பரப்படுத்தல் மூலம் நுகர்வோர் சலிப்படைந்து விடவும் வாய்ப்புள்ளது. அவ்வாறே ஒரே பொருளுக்கான பல்வகை முறையிலான தெளிவுபடுத்தல் மக்களை பலமுறைகளிலும் சென்றடைவதனால் கண்டிப்பாக நுகர்வோரின் கொள்வனவு நிலையை அதிகப்படுத்தும் 

Article By TamilFeed Media, Canada
1722 Visits

Share this article with your friends.

More Suggestions | Business