நீங்கள் எதிர்பார்த்த விற்பனையினை உங்கள் வலைத்தளம் தரவில்லையா.

உங்கள் வியாபார வளர்ச்சிக்கு உகந்ததாக்க உங்களின் இணையத்தினை மாற்றிக்கொள்ள வேண்டுமா?

ஒரு உயர்தரம்மிக்க, செயல்திறமைமிக்க விற்பனை இணையத்தளம் என்பது 24 மணி நேரமும் இயங்கிடக்கூடிய விற்பனை முகவராக செயல்பட வேண்டும் என்பது ஐதீகம். அன்றாட நடவடிக்கைகளின் போது மனிதனுக்கு ஏற்படக்கூடிய ஒய்வு, உறக்கம், விளையாட்டு போன்ற இதர பிற காரணிகளில் நாம் ஈடுபடும் நேரத்திலும் கூட நமக்கு இணையாக விற்பனை விநியோகம் மற்றும் வருவாய் என்பனவற்றினை மட்டுமே கருத்திக்கொள்ளும் இயந்திரமுறைமையிலான செயற்றப்பாடுகளை செய்துகொள்வதில் இணையத்தளம் இயங்கிட வேண்டும். 

வணிகம் தொடர்ப்பான அனைத்துவித விடயங்களுக்கும் உகந்ததாக அனைத்து விடயங்களையும் உங்கள் வலைத்தளம் செய்துகொள்ளுமாயின் அதன் மூலமுங்களுக்கான இலாபம் உழைத்தல் என்பது உறுதியாக்கப்படும் என்பதில் ஐயமில்லை. மாறாக உங்கள் வலைத்தளத்தினை விற்பனைக்கு உகந்ததாக நீங்கள் மேம்படுத்திக்கொள்ளவில்லை என்றால் அது வெறுமனே இயக்கநிலையற்ற இயந்திரமாகவே கருதப்படும்.

பொதுவாக இலங்கையை பொறுத்தவகையில் உள்ளூர் சந்தை விரிவாக்கம் தொடர்பில் 97% சதவீதமான விற்பனைகள் இணையமயப்படுத்தப்பட்டுவிட்டன. ஆயினும் அவை அனைத்திலும் இருந்து இலாபமீட்டுதல் என்பது ஒப்பீட்டளவில் குறைவானதாகவே உள்ளது. இதற்கான காரணமாக கருதப்படுவது உங்களின் வலைத்தளம் விற்பனை விநியோக விடயங்களுக்கு ஏதுவாக அமையவில்லை அல்லது விற்பனை தொடர்பில் சரியான முகவராக செயற்படவில்லை என்ற குறையே ஆகும்.

உங்களின் இணையத்தளத்தின் மூலம் உயரிய இலாபத்தினை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால் அது அனைத்து விடயங்களையும் உள்ளடக்கிய குறைகளின்றி முழுமைபெற்ற இணையத்தளமாகவே இருக்க வேண்டும் என்பது அவசியம் ஆகும்.

பிரபல HARDCORE CLOSER நிறுவகத்தின் நிர்வாக இயக்குனர் ரேயன் ஸ்ட்டேவ்மண் அடிக்கடி கூறும் விடயும் யாதெனில் "எந்தவொரு வணிகத்தினதும் முன்னேற்ற நிலைக்கும், தோல்வி நிலைக்கும் பக்கபலமாக இருப்பது அந்த வணிகத்தின் விற்பனை முகவரின் செயற்பாடு ஆகும்". அந்த வணிகத்தை முன்னோக்கி வழி நடத்துவதும், அல்லது முடக்கமடைய செய்து இழுத்து மூடுவதும் விற்பனையாளரின் கையிலேயே இருக்கின்றது. இது உங்கள் வலைத்தளத்திற்கு பொருந்தும் வகையில் உபயோகித்தோமானால் சிறந்த பெறுபேறுகளை உங்கள் வணிகம் பெரும் என்பதில் ஐயமில்லை.

சிறந்த இணையம் என்பது சிறந்த விற்பனையாளருக்கு ஒப்பானது. தரவுகளை சேகரித்துக்கொள்வதன் மூலம் வியாபாரத்தின் விருத்திக்கு அனைத்து வகையிலும் சிறந்த பெறுபேற்றினை பெற்றுக்கொடுக்க உதவுவதே இவ்வகை இணையத்தளத்தின் பண்பு. 

உகந்த இணையமாக உங்களின் இணையம் மாறிட வேண்டும் எனின் பின்வரும் இரண்டு விடயங்களை கண்டிப்பாக கருத்தில் கொள்ள வேண்டும்.


தரவுகளை திரட்டுதல். 

பொதுவாக இணைய ஆய்வாளர்களின் கருத்தின் படி விற்பனை இணையங்களின் வருகையாளர்கள் அந்த இணையத்தளத்தில் செலவிடும் நேரம் என்பது மிகவும் குறைவானதாகவே இருக்கும். அதற்கான காரணமென்பது குறிப்பிட்ட இணையம் அனைத்து தரவுகளையும் கொண்டிருக்கவில்லை என அறியலாம். எனவே இணையத்தளத்திற்கு வருகைதருபவர்கள் தமக்கு வேண்டிய அனைத்தையும் ஒரே இடத்தில் பெற்றுக்கொள்வார் எனின் மேலும் மேலும் இந்த இணையத்திற்கு தொடர்ந்தும் வருகை தருவதுடன் எமது விற்பனையினை மேம்படுத்தி கொள்ளவு முடிகின்றது.

உயர் மாற்றீடு இணையமாக மாறுவது. 

ஒவ்வொரு இணையத்தளத்தின் முதன்மை காரணிகளை வணிக உரிமையாளர்கள் அறிந்துவைத்திருக்க வேண்டியது அவசியமானது. மாறாக இணையத்தின் முதன்மை காரணிகளை அறிந்திடாத பட்சத்தில் சிறந்த மாற்றீடு இணையத்தளமாக உங்களின் இணையத்தளத்தின் மேம்படுத்திக்கொள்ள முடியாது. எனவே இணையத்தினை மேம்படுத்தும் பொழுது இந்த முதன்மை காரணிகளை அறிந்து வைத்திருத்தல் அவசியமானது.

பெரும்பாலும் இணையங்கள் மக்களை அணுகிட பல்வேறு ஊடகங்களின் பங்களிப்பினை நாடுகின்றது. சமூக வலைத்தளங்கள்,மின்னஞ்சல் அணுகுமுறைகள் போன்ற விடயங்களே இவ்வாறு முதன்மை காரணிகளாக கருதலாம், இவை தொடர்பான அறிவுறுத்தல்களை இணையத்தளத்தினை மேம்படுத்திக்கொள்ளும் போது கண்டிப்பாக கருத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

Article By TamilFeed Media, Canada
1585 Visits

Share this article with your friends.

More Suggestions | Business