வீடுகளில் விரயமாகும் மின்சாரத்தை கட்டுப்படுத்த 10 வழிகள் 

பாவனையை விட வீண் விரயங்களே  மின் கட்டண அதிகரிப்பிற்கு காரணம்.

மின்சாரம் எனும் வளமானது இன்றைய காலகட்டத்தில் மனிதனின் அத்தியாவசிய தேவைக்குள் ஒன்றாகி விட்டது. கிடைத்தற்கரிய கனிய வளங்களை கொண்டு மிக பெரிய செயல்முறைக்குப்பின் நமக்கு மின்சாரமாக கிடைக்க கூடிய இந்த வளமானது பெறுமதி கூடியதும் அழிந்து வரக்கூடியதும் ஆகும்.

அன்றாட வாழ்வில் மின்சாரம் இல்லாமல் எம்மால் ஒரு நிமிடம் க்கூட இருக்க முடியாத நிலைமைக்கு நாம் தள்ளப்பட்டு வருகின்றோம், எவ்வாறு ஒரு மனிதனுக்கு உணவு, உடை, உறையுள் என்பன அத்தியாவசியம் ஆகின்றதோ இவை மூன்றுக்கும் அடிப்படை தேவையாக மின்சாரமே கருதப்பட்டு வருகின்றது.

பெறுமதி வாய்ந்த இந்த மின்சாரம் எனும் சொத்து பெரும்பாலும் உபயோகிக்கப்படுவதை விட வீணடிக்கப்படுவதே காணக்கூடியதாக இருக்கின்றது. உலகளாவிய ரீதியில் பயன்படுத்தப்படும் மொத்த மின்சாரத்தில் 35% சதவீதம் வீணடிக்கப்படுவதாக ஆய்வு தகவல்கள் அறியத்தருகின்றது. இது அண்ணளவாக ஆண்டுக்கு $1368.36(அமெரிக்க டாலர்கள்) ஆகும் என கணக்கிடப்பட்டுள்ளது.

மின்சார சேமிப்பது செயல்திறன் மிக்க சக்தி வலுவினை சேமிப்பது மட்டுமல்ல, அது நம்மிடமிருந்து வீணாக செலவழிக்கப்படும் பணத்தினையும் சேமிக்கும் யுக்தியாகும்.

மின்சார சேமிப்பினை எளிய முறையின் அமைத்துக்கொள்ள முதலில் நாம் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய மின்னியல் பொருட்கள் பற்றியும், அதன் பாவனைகள் முறைகள் பற்றியும் அறிந்து வைத்திருப்பது மிகவும் அவசியமானதாகும். இதன் மூலமே விரயமாக்கப்படும் மின்சாரத்தினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ஓரளவேனும் முடியும் என்பதை அறிவீர்களா?


1. தகுந்த ஆடைகளை தேர்ந்தெடுத்து அணியுங்கள்.

குளிர்கால காலநிலைக்கு ஏற்றது போல கம்பளியால் வடிவமைக்கப்பட்ட ஆடைகளை ,போர்வைகள் என்பனவற்றை அதிகபட்சமாக பயன்படுத்தவும்.இதன்மூலம் உடலின் வெப்பநிலை வெளியேற்றப்படும் அளவானது குறைவாகவே இருக்கும்.
அவ்வாறே மேஜை விரிப்புகளுக்கும், நாற்காலி என்பனவற்றுக்கு கம்பளியிலான போர்வைகளை விரித்தும் இருப்பது வெப்பக்கடத்தலை கட்டுப்படுத்தும் வகையில் அமைந்துவிடும் . இதனால் குளிர்காலநிலையில் பயன்படுத்தக்கூடிய மின்சார சூடேற்றியின் (Heater) பாவனை அளவினை கட்டுப்படுத்திக்கொள்ள இலகுவாக இருக்கும்.

2.மின்பாவனை மூலமான வெப்பத்தை தக்கவைப்பதை குறைத்துக்கொள்ளுங்கள் 

மேலைத்தேய குளிர் பிரதேசங்களில் நிலவும் அதிகபட்ச குளிர் நிலைக்கு ஏற்ப அங்கு வீடுகளுக்கு வெப்ப சீர்நிலை கருவியான தெர்மோஸ்டாட் (Thermostat) அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றது.இதற்காக உபயோகிக்கப்படும் மின்சாரத்தின் அளவானது மிகவும் அதிகம் ஆகும். நீங்கள் பயன்படுத்தும் தெர்மோசேட் உபகரண வெப்ப நிலையை 1 பாகை செல்ஸியஸாக குறைக்கும் போது குறைந்தபட்சம் 60 யூரோ பெறுமதியான மின் அலகு சேமிக்கப்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. எனவே குளிர் காலத்தில் நீங்கள் பயன்படுத்தும் தெர்மோஸ்டேட்டினை 18 - 20 பாகை செல்ஸியஸ் வெப்பநிலைக்கு கட்டுப்படுத்திக்கொள்ளுங்கள் .வெப்பநிலையானது 26 பாகை செல்ஷியஸிற்கு அதிகமாகும்போது அதற்கான மின் பாவனை அளவும் அதிகரிக்கப்படுகிறது. 

3. மின் சூடேற்றி (Water Heater ) குளியலை தவிர்த்திடுங்கள் 

குளிர் பிரதேசங்கள் ஆகினும் குளிப்பதற்கு பயன்படுத்த கூடிய நீர் சூடேற்றியின் அளவை குறைத்து பாவிப்பது மிகவும் நல்லது. பொதுவாக இவ்வகை மின்னியல் பொருட்களுக்கே அதிகபட்சமான மின்சாரம் செலவழிக்கப்படும் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
பெரும்பாலும் சூடான வெப்பநிலை கொண்ட நாடுகளிலும் வீடுகளின் குளியலறைகளில் மின் சூடேற்றி பயன்படுத்துவது ஒரு ஆடம்பர செயலாகவே மாறிவிட்டது. மின் சூடேற்றியில் குளிப்பது கூட ஆடம்பரமாக கருதுபவர்கள் நம்மத்தியில் உலா வருகின்றனர். ஆயினும் அதிக வெப்பத்தை கடத்தும் பட்சத்தில் மின் பாவனைஅலகுகள் அதிகமாகவே காணப்படும் என்பதால் நீங்கள் பயன்படுத்தும் வெப்ப சூடேற்றியின் வெப்பநிலை அளவினை குறைத்து பயன்படுத்துங்கள். சூடான காலநிலைகளில் பயன்படுத்தாமல் விடுவதும் நல்லது.

4. உபகரணங்களின் காத்திருப்பு நிலையை (POWER STANDBY) அகற்றிடுங்கள் 

பொதுவாக நாம் பயன்படுத்தும் கையடக்க தொலைபேசி மற்றும் மடிக்கணினி என்பவற்றின் காத்திருப்பு நிலையினை நாம் வீண் விரயம் செய்கிறோம். பயன்படுத்தி முடித்த பின்னரும் அவற்றினை துண்டிக்காமலும் , அப்படியே விட்டு விடுகின்றோம். இதன் காரணமாகவும் மின் வீண் விரயம் செய்யப்பட்டுவதுடன் குறிப்பிட்ட மின்னியல் உபகரணம் வேகமாக பழுதடைந்து விடுகின்றது. எனவே உபகரணங்களை பயன்படுத்தாத்தாவிடத்து அவற்றை ,உபகரண இணைப்பை துண்டித்து அல்லது அனைத்து விடுவது நல்லது . 

5. துணிகளை பாதியில்உலர்த்தினால் போதும் 

ஆடைகளை துவைத்தபின் உலர்த்த பயன்படுத்தும் நேரத்தினை குறைத்துக்கொள்வது நல்லது. ஈரமான ஆடைகளை அதிகநேரம் மின் பாவனையின் மூலம் உயர்த்திட அவசியம் இல்லை . அவ்வாறே மின் அழுத்தியினை (Electric Iron) பயன்படுத்தும்போது அதிக ஈரமான துணிகளை தேய்க்காமல் இருப்பது நல்லது.ஈரமான ஆடைகளை மின் அழுத்தி கொண்டு தேய்க்கும் போது நீண்டநேரம் தேய்க்க நேரிடும் அதேநேரம் மின் பாவனை அலகுகளும் அதிகளவில் செலவாகும்.

6. இலகுவான ஆடைகளை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

மிகவும் பாரமான கம்பளி போர்வைகள் மற்றும் ஆடைகளை பயன்படுத்துவது குளிர் பிரதேசங்களுக்கு ஏற்றது எனினும் அதனை பயன்படுத்திய பின் பராமரிப்பது மிகவும் சிரமமானது. இவ்வகை ஆடைகளை சலவை இ��ந்திரம் கொண்டு துவைக்கும் போதும், மின் அழுத்தி கொண்டு தேய்க்கும் போதும் அதிகபட்ச மின்சாரம் செலவாகும். எனவே இவ்வகை ஆடைகளை அதிகமாகவும் அடிக்கடியும் பயன்படுத்துவதை தவிர்த்து கொள்ளுங்கள். 

7. குளிர்பதனப்பெட்டி மற்றும் நுண்ணலை அடுப்பு பாவனை கட்டுப்பாடு 

குளிர்சாதன பெட்டிகளுக்குள் உணவுகளை கேட்டு போகாமல் வைத்திட பயன்படுத்தும்போது மிகவும் சூடான உணவுகளை வைப்பதை தவிர்த்துக்கொள்ளவும். அவ்வாறே அளவு குறைந்த உணவு பதார்த்தங்களை குளிர்சாதன பெட்டியில் வைப்பது வீண் வேலையே .

நுண்ணலை அடுப்புகளை(Microwave oven) குறைந்தபட்சமாக பயன்படுத்துங்கள். உணவுகளை சொடேற்றிக்கொள்ள சாதாரண அடுப்புகளை பயன்படுத்துவது நல்லது. அவ்வாறே அவற்றிற்காக மிகவும் கனமான பாத்திரங்களை பயன்படுத்துவதை தவிர்த்துக்கொள்வது நல்லது.

8. பாத்திரங்களின் பயன்பாடு.

மின்னியல் அடுப்புகளில் பயன்படுத்தும் பாத்திரங்கள் தொடர்பில் மிகவும் அவதானம் தேவை. குறைந்த அளவிலான உணவை சமைக்க பெரிய கனமான பாத்திரங்களை பயன்படுத்த கூடாது. அவ்வாறே இலகுவில் வெப்பத்தை கடத்த கூடிய பாத்திரங்களாக பயன்படுத்துவது சிறந்தது.

9. நேர பராமரிப்பு 

பொதுவாக பகல் நேரங்களில் மின் விளக்குகளை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது வீடுகளில் இரவு நேர மின் பாவனைகள் அதிகம் என்பது ஆய்வின் மூலம் அறியப்படுகின்றது. எனவே ஆடைகளை துவைப்பது, மின் அழுத்தி பயன்படுத்துவது , மற்றும் மின்னியல் பொருட்களை இரவில் பாவிப்பதை குறைத்துக்கொள்வது மின்சாரத்தினை மட்டுமல்ல அதரென செலவிடும் பணத்தினை சேமிக்கவும் உதவிடும்.

10. சூரிய கலன்களை பாவித்தல்.

இப்போது வீடுகளிலும் அலுவலகங்களிலும் சூரிய கலன்களை அதிகபட்சமாக பொருத்தி வருவதை காணக்கூடியதாக உள்ளது. இதன் மூலம் மின் பாவனை குறைக்கப்படுகின்றது. அவ்வாறே நாம் வீடுகளில் பாவிக்கும் மின் குமிழ்களை வலு சேமிப்பு மின் குமிழ்களாக (ENERGY SAVER ) உபயோகிப்பது நல்லது.

Article By TamilFeed Media, Canada
10816 Visits

Share this article with your friends.

More Suggestions | Lifestyle