தாழ்வு மனப்பான்மை

தன்னைப்பற்றி தாழ்வு மனப்பான்மை கொண்ட ஒருத்தன் கடவுளை வேண்டி தவமிருந்தான் அவன் முன்னே கடவுள் தோன்றினார்.

அவன் கடவுளிடம் என்னை ஏன் இப்படிப் படைத்தீர்கள் என் வாழ்க்கையின் மதிப்பு தான் என்ன?ன்னு கேட்டான்.

கடவுள் அவனிடம் ஒரு சிகப்பு கல்லைக் கொடுத்து இதன் மதிப்பை அறிந்து வா ஆனா விற்கக்கூடாது ன்னாரு.

அவன் அந்தக் கல்லை ஒரு ஆரஞ்சு பழ வியாபாரியிடம் காண்பித்ததற்கு, அக்கல்லுக்கு பதில் ஒரு டஜன் ஆரஞ்சு பழங்கள் கொடுப்பதா கூறினான்.

அதையே ஒரு உருளைக்கிழங்கு வியாபாரியிடம் கேட்டதற்கு ஒரு மூட்டை கிழங்கு தருவதாக சொன்னான்.

நகைக்கடையில் காண்பித்ததற்கு 50, 000 பொற்காசுகள் தருவதாக சொல்லவே, இவன் மறுத்து, மீண்டும் அந்த கல்லை எடுத்துக்கொண்டு ஆபரண கற்கள் வியாபாரியிடம் காண்பித்து அதன் மதிப்பைக் கேட்டான்.

அக்கல்லை வாங்கி பலமுறை பரிசோதிச்சிட்டு ''இந்த அருமையான மாணிக்க கல் உனக்கு எங்கே கிடைத்தது? ஒட்டு மொத்த உலகத்தையே விற்றுக் கொடுத்தாலும் இந்த கல்லுக்கு ஈடு இணை இல்லை'' னாரு.

குழப்பமடைந்த நம் நண்பன் கடவுளை பார்த்து நடந்ததை எல்லாம் கூறினான்.

அதற்கு கடவுள் சொன்னார். ''பார்த்தாயா, ஒரே கல்லுக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு மதிப்பு கொடுத்தனர். ஆனால், கடைசியாக அந்தக்கல்லின் உண்மையான மதிப்பை ஒருவர் தான் சொன்னார். அதே போல் உன்னை ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி குறைத்து மதிப்பீடு செய்வர் அதற்கெல்லாம் கவலைப்படாதே! உன் உண்மையான மதிப்பை அறிபவரை விரைவில் கண்டறிவாய், மனம் தளராதே''ன்னு கூறி மறைஞ்சாரு.

கடவுளின் படைப்பில் ஒவ்வொருவரும் அபூர்வமானவரே! தாழ்வு மனப்பாண்மைங்கறது கூடாது! நம்மைப்பற்றி உயர்ந்த எண்ணம் நமக்கு முதலில் வேண்டும். ஒவ்வொருவரும் ஒரு விதத்தில் சிறப்பு மிக்கவரே!! உங்களுக்கு நிகர் நீங்களே! யாரும் உங்களுக்கு இணை கிடையாது!

Article By TamilFeed Media, Canada
4102 Visits

Share this article with your friends.

More Suggestions | Stories