குரங்கும் குருவியும்

நல்ல மழை பெய்துக் கொண்டிருந்தது.குளிரில் நடுங்கியபடி குரங்கு ஒன்று மரத்தடியில் ஒதுங்கி நின்றது.

மரத்தில் கூடுகட்டிக் கொண்டு , அதில் இருந்த குருவி தலையை வெளியே நீட்டி குரங்கைப்பார்த்து..'குரங்காரே! இப்படி மழை காலத்தில் மழையில் நனைகிறீர்.வெயில் காலத்தில் வெயிலில் வாடுகிறீர்.இதையெல்லாம் தடுக்க ஒரு வீடு கட்டிக் கொள்ளக் கூடாதா? கைகள் இல்லாத நானே கூடு கட்டிக் கொண்டுள்ளேன்.இரு கைகள் உள்ள நீங்கள் ஏன் சோம்பேறி போல் திரிந்து, பின் அவதிப் படுகிறீர்கள்' என்றது.


குருவியின் அறிவுரையைக் கேட்ட குரங்கிற்கு கோபம் வந்தது.உடனே மரத்தில் ஏறி குருவியின் கூட்டைக் கலைத்தது. 'எனக்கு வீடு கட்டிக் கொள்ள சோம்பேறித்தனம் தான்.ஆனால் கூட்டை பிய்ப்பதற்கு அல்ல.இப்போது கூடின்றி நீயும் அல்லல் படு' என்று சொல்லிச் சென்றது.


முட்டாள்களுக்கு அறிவுரை சொல்வது நமக்கு தான் ஆபத்து 

Article By TamilFeed Media, Canada
21425 Visits

Share this article with your friends.

More Suggestions | Stories