பொறாமை கூடாது.

ஒரு காட்டில் பல மிருகங்கள் மிகுந்த ஒற்றுமையுடன் வசித்து வந்தன.

அங்கே வசித்த ஒரு மயில் மட்டும் மற்ற விலங்குகளை பார்த்து எப்போதும் பொறாமை எண்ணத்துடன் இருந்தது.

அது சிங்கத்தை பார்த்து வலிமையானது என்றும், புலியை பார்த்து நன்றாக ஓடக்கூடியது என்றும், யானையை பார்த்து உருவத்தில் பெரியது என்றும் அவற்றின் குணங்களை தம்முடன் ஒப்பிட்டு பொறாமையுடன் இருந்து வந்தது.

இந்த நிலையில் ஒருநாள் காட்டில் பெரும் மழை வருவதற்கான காலநிலை தோன்றவே, அந்த மயிலும் தமது அழகிய தோகையை விரித்து ஆட தொடங்கியது.அவ்வாறே தமது குரலில் பாடவும் செய்தது.

அடுத்த கணமே தமது கீச்சிடும் குரல் நன்றாக இல்லை என எண்ணி கவலை கொண்டது.

இதனை கவனித்த மைனா ஒன்று மயிலை சமாதானம் செய்ய, மயிலும் தமது கவலைகளை மைனாவிடம் கூற தொடங்கியது. 

 மயிலின் பொறாமை எண்ணங்களை கேட்ட மைனா மயிலை பார்த்து "நீ எவ்வளவு அழகானவன் என்பது உனக்கு தெரியுமா? அதை நினைத்து நீ எப்போதாவது சந்தோசப்பட்டதுண்டா? " என்று மயிலை பார்த்து கேட்டது.

மயில் சிறிதுநேரம் யோசித்துவிட்டு இல்லை என்று பதில் சொன்னது.

இதனைக் கேட்டு சிரித்த மைனா, “உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு சிறப்பம்சம் இருக்கும்.அவற்றினை இனம்கண்டு அதனை மேம்படுத்த வேண்டுமே தவிர, எது நம்மிடம் இல்லையோ அதை எண்ணி வருத்தப்படவோ அல்லது பொறாமைப்படவோ கூடாது." என்று அறிவுரை கூறியது.

தாம் செய்த தவற்றினை எண்ணி மனம் வருந்திய மயில், மைனாவிற்கு நன்றி சொல்லி சென்றது.

Article By TamilFeed Media, Canada
5303 Visits

Share this article with your friends.

More Suggestions | Stories