வழித்தேடல்

நகைச்சுவை சிறுகதை.

சங்கரின் மனைவி கமலா "லாப்ரடார் " வகை நாயொன்றை வளர்த்து வந்தாள் 

ஆனால் சங்கருக்கு அந்த நாயை கண்டாலே பிடிக்கவில்லை.கமலா இல்லாத சமயம் அந்த நாயை அடித்து திட்டுவதே சங்கரின் வேலை.

ஒருநாள் கோபம் தலைக்கேற சங்கர் கமலாவின் செல்லப்பிராணி பப்பியை தமது காரில் அழைத்துக்கொண்டு தமது இருப்பிடத்திற்கு கொஞ்சம் தள்ளி விட்டுவிட்டு வந்துவிட்டார்.

ஆனால் சங்கர் வீட்டிற்கு செல்வதற்கு முன்னமே பப்பி வீட்டிற்கு சென்று சங்கர் வரும்வரை காத்திருந்தது.

கோபத்தின் உச்சிக்கே சென்ற சங்கர் பலமுறை பல்வேறு இடங்களில் பப்பியை கமலாவுக்கே தெரியாமல் விட்டு விட்டு வந்தாலும் அந்த பப்பியும் எப்படியாவது வீட்டுக்கு வந்துவிடுகின்றது.

ஒருநாள் தமது காரில் பயணம் செய்துகொண்டிருந்த சங்கர் வழி தவறிப்போய் வீட்டுக்கு செல்வது எப்படி என்று தெரியாமல் நாடு வீதியில் ஸ்தம்பித்து விட்டான்.

கமலாவுக்கு தொலைபேசியை எடுத்து வழி தவறிய விடயத்தை சங்கர் விபரித்தான்.

கமலா சற்றும் தயங்காமல் சங்கரிடம் " ஏங்க நான் நம்ம பப்பிகிட்டே தொலைபேசியை கொடுக்கிறேன் அதுதான் எங்க கொண்டு விட்டாலும் சரியா வீட்டை தேடி வருது. நீங்க அதுகிட்டவே வழி கேளுங்க " என்று சொல்லிவிட்டு தொலைபேசியை வைத்துவிட்டாள்.

அப்போதுதான் சங்கரின் தவறு அவனுக்கு புரிந்தது.

Article By TamilFeed Media, Canada
7904 Visits

Share this article with your friends.

More Suggestions | Stories