விஜய நந்தசிறி 1944 - 2016

சிங்கள சினிமாவின் அழியா சொத்து என வர்ணிக்கப்படும் பிரலபல கலைஞரும் நடிகருமான விஜய நந்தசிறி நேற்று முன்தினம் இயற்கை எய்தினார்.

விஜய நந்தசிறி 1944 - 2016
Back 1019 Twitter Google Twitter Facebook

சிங்கள சினிமாவின் அழியா சொத்து என வர்ணிக்கப்படும் பிரலபல கலைஞரும் நடிகருமான விஜய நந்தசிறி நேற்று முன்தினம் இயற்கை எய்தினார். 1944 ஆம் ஆண்டு பிறந்த விஜய நந்தசிறி, பல திரைப்படம், தொலைக்காட்சி நாடகம், மேடை நாடகம், தொகுப்பாளர் என பல துறைகளிலும் தமது ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளார்.

இலங்கை நாடகத் துறையில் சிறந்த படைப்புக்களை தனது நடிப்புத் திறமையினால் மெருகூட்டிய விஜய நந்தசிறி காலப்போக்கில் திரைப்படத்திற்கும் சின்னத்திரைக்கும் அளப்பரிய பங்காற்றினார். குறிப்பாக பேராசிரியர் எதிரிவீர சரத்சந்திர அவர்களின் மனமே, சிங்கபாகு, மகாசார மற்றும் ரத்னாவலீ போன்ற படைப்புக்களும் தயானந்த குணவர்த்தனவின் நரிபேனா, ஜசயா மற்றும் லெஞ்சினா உள்ளிட்ட படைப்புக்களையும் இவர் தனது சிறந்த நடிப்பின் மூலம் மெருகூட்டினார். மேலும் நோனாவருனி மாஹத்துருனி, இயஸ் போஸ், எத்துமா ஆகிய பிரபல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து ரசிகர் மனதில் மனதில் இன்றும் நீங்கா இடம்பிடித்துள்ளார்.

சிங்கள திரைப்படம் மற்றும் நாடகங்களில் நகைச்சுவை கலந்த ஆற்றலை வெளிப்படுத்தும் அவர் சிறந்த குணச்சித்திர நடிகரும் கூட.

இதேவேளை, 'நேதேயோ' எனும் திரைப்படத்தின் மூலம் சிங்கள சினிமாவுக்கு அறிமுகமான விஜய, சந்த இசுறு, சந்தகட பஹன, சிகுறு ஹத்தே, சுஹத கொகா போன்ற பல்வேறு சிங்கள திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இறுதியாக அவர் நடித்த 'சுஹத கொகா' திரைப்படம் நீண்ட நாட்களாக பல தியற்றர்களில் ஓடியது. அத்தோடு சிகுறு ஹத்தே திரைப்படத்தில் தரகராக நடித்த இவருக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டுள்ளமைக் நினைவுகூறத்தக்கது.

மேடை நடிகராக தனது நடிப்பை ஆரம்பித்த விஜய நந்திசிறி, இலங்கை திரையுலகில் ஒரு புதுமையான மற்றும் அற்புதமான நகைச்சுவை கலைஞராக திகழ்ந்து வந்தார். சிங்கள சினிமாவில் எப்படி சிறந்த கலைஞராக திகழ்ந்தாரோ அதே போல் தனது குடும்ப வாழ்கையிலும் அவரது மனைவிக்கு  நல்ல கனவராகவும் பிள்ளைகளுக்கு செல்ல தந்தையாகவும் இருந்துள்ளார்.

விஜய நந்தசிறி அவர்களின் இழப்பினால் துயரத்தில் ஆழ்ந்து போயுள்ள அவரது துணைவி தேவிகா மிஹிராணி அவர்களின் கண்ணீரும் புலம்பல்களும் இதற்கு சிறந்த சான்று.

இருபத்தைந்து ஆண்டு காலமாக தனது ஆளுமையினை மேடையில் அரங்கேற்றிய நாடகக் கலைஞரான விஜய நந்தசிறி யாருமே எதிர்பார்க்காத ஒரு சந்தர்ப்பத்தில் இயற்கையின் விதிப்படி தனது வாழ்க்கைப் பயணத்தை முடித்துக் கொண்டார். 

இயற்கையின் விதிப்படி விஜய நந்தசிறி எனும் மனிதன் உலகை விட்டு மறைந்தாலும் ஒரு சிறந்த கலைஞராக ரசிகர்கள் மத்தியில் இன்றும் வாழ்ந்துக் கொண்டு தான் இருக்கின்றார்....

Back 1019 Twitter Google Twitter Facebook