உலகின் முதல் 10 பணக்கார நாடுகள் இவைதான்

நியூ வேர்ல்ட் வெல்த் என்ற அமைப்பு தனிநபர் சொத்து மதிப்பை அடிப்டையாக வைத்து உலகின் பணக்கார நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

உலகின் முதல் 10 பணக்கார நாடுகள் இவைதான்
Back 973 Twitter Google Twitter Facebook

இதன்படி அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அதன் மொத்த தனிநபர் சொத்து 48,900 பில்லியன் டாலராக உள்ளது. 2-வது இடத்தில் 17,400 பில்லியன் டாலருடன் சீனாவும், 3-வது இடத்தில் ஜப்பானும்  4-வது இடத்தில் இங்கிலாந்தும் 5-வது இடத்தில் ஜெர்மனியும் இடம்பெற்றுள்ளன. 

6-வது இடத்தில் பிரான்ஸ் காணப்படுகின்ற அதேநேரம் இந்தியா 5,600 பில்லியன் டாலர்களுடன் 7வது இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவுக்கு அடுத்தபடியாக கனடா 8-வது இடத்திலும், ஆஸ்திரேலியா 4,500 பில்லியன் டாலருடன் 9-வது இடத்திலும் , இத்தாலி 10-வது இடத்திலும் உள்ளதாக நியூ வேர்ல்ட் வெல்த் (New World Wealth) இன் அறிக்கை தெரிவிக்கின்றது.

இந்த ஆய்வில் ஒவ்வொரு நாட்டு மக்களும் வைத்திருக்கும் பணம், தொழில் முதலீடு, அசையா சொத்துகள் உள்ளிட்டவை அடங்கும் என்றும், அந்தந்த நாட்டு அரசாங்கங்களினால் வழங்கப்படும் நிதியுதவி கணக்கிடப்படவில்லை என்றும் நியூ வேர்ல்ட் வெல்த்(New World Wealth) தெரிவித்துள்ளது.

Source

Back 973 Twitter Google Twitter Facebook