நலன்கள் பெருகும் நவராத்ரி நோன்பு இருக்க தயாரா?

சிவனுக்கு சிவராத்திரி போல் சக்திக்கு நவராத்ரி..... இவ் விரதமானது ஒன்பது ராத்திரிகள் அனுட்டிப்பதால் நவராத்திரி எனக் கொள்ளப்படுகிறது......

நலன்கள் பெருகும் நவராத்ரி நோன்பு இருக்க தயாரா?
Back 2479 Twitter Google Twitter Facebook

ஒன்பது இரவு பொழுதுகள் விரதம் இருப்பதால் அடையும் உச்ச கட்ட பயன்கள்!!!!!!!!!

இவ்விரதம் முப்பெரும் தேவிகளான துர்க்கை, இலக்குமி,சரஸ்வதி  ஆகியோருக்காக அனுட்டிக்கப்படுகிறது.

முதல் மூன்று நாட்கள் வீரத்தின் அடையாளமான துர்க்கைக்காக அனுட்டிக்கப்படுகிறது. இம்மூன்று நாட்கள் விரதம் இருப்பதால் பயங்கள் நீங்கி வீரம் எழுச்சி பெரும் என மரபுகள் கூறுகிறது.

அடுத்த மூன்று நாட்கள் செல்வத்தின் சிறப்பான இலக்குமிக்கு நோன்பு நோட்கின்றனர். இதனால் கவலைகள், கஷ்டங்கள், வறுமைகள் நீங்கி செல்வம் பெருகும்.

இறுதி மூன்று நாட்கள் ஆயகலைகள் அனைத்தையும் தன்னகத்தே கொண்ட சரஸ்வதிக்கு உரிய நாளாகும். இவ்விரதம் இருப்பதால் கல்வி பயிலும் மாணவர்களின் கல்வி வளர்ச்சி அடைந்து மேன்மை அடையும்.

இவ்விரதமானது கட்டாயமாக எல்லோராலும் அனுட்டிக்கபட வேண்டிய விரதமாகும். சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை இவ்விரதம் அனுட்டிக்கலாம். ஒன்பது நாட்களும் விரதம் இருக்க முடியாத சிறுவர்கள் அல்லது மாணவர்கள் கல்விக்கு அதிபதியான சரஸ்வதிக்கான மூன்று நாட்களேனும் விரதம் இருப்பது உகந்தது.

இவ்விரதத்தின் ஒன்பது நாளானது விஜயதசமி ஆகும். இத்தினத்தில் வித்யாரம்பம் செய்தல் சிறப்பானதாகும். அதுமட்டுமல்லாமல் இத்தினத்தில் ஏடு தொடங்குவதால் குழந்தையின் கல்வி ஜானம் சிறப்படையும்.

பத்தாவது நாளில்  ஆயுத பூசை மேட்கொள்ளப்படுகிறது. இத்தினத்தில் கடைகள்.தொழில் புரியும் இடங்களில் பூசைகள் நடாத்தப்படும் . இதனால் தொழில் விருத்தி அடைந்து மேன்மை அடையும்.    

Back 2479 Twitter Google Twitter Facebook