2017 இல் இணையத்தில் வைரலான விடயங்கள்

கடந்த 2017 ஆம் ஆண்டில் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டதும் பலரின் வரவேற்பை பெற்றதுமான விடயங்கள் இதோ

2017 இல் இணையத்தில் வைரலான விடயங்கள்
Back 8647 Twitter Google Twitter Facebook

 

 • ஜல்லிக்கட்டு :

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு எதிரான  தடையை எதிர்த்து இந்தியா , இலங்கை உள்ளிட்ட உலக நாடுகள் அனைத்தும் தமது எதிர்ப்பை முன் வைத்தது. இது உலகளாவிய தமிழர்களை திரும்பி பார்க்கவைத்த   அதே வேளை சர்ச்சைகளை தாண்டிய தமிழரின் ஒற்றுமையை வலுவடைய செய்தது 

 • தெர்மா கோல்  ராஜாவும் இந்திய அரசியல் காமெடிகளும் 

கடல் நீர் ஆவியாவதை தடுக்க தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜா  பாரிய பொருட்ச்செலவில் மதுரை வைகை ஆற்று பிரதேசத்தில் தெர்மோகோல் ஷீட் களை போட்டு செய்த அறிவார்ந்த முயற்சியும் இதனால் பீதியடைந்த தமிழ் மக்கள் அவருக்கு எதிராக சமூக வலை தளங்களில் மீம்ஸ் போட்டு  கலாய்த்ததுமே சிறந்த நகைச்சுவையாக பலராலும் பேசப்பட்டது.

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வின்  மறைவின் பின் பிளவுபட்ட அ .தி .மு.க கட்சியானது பல்வேறு சர்ச்சைகளை எதிர்கொண்டது . அவ்வாறே ஜெயலலிதாவுக்கு பின்னர் முதலமைச்சர் பதவியில் இருந்த ஓ.பன்னீர் செல்வம் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அமர்ந்து செய்த தியானமும். அதன் பின்னரான மாற்றங்களும் முக்கிய இடம் வகிப்பது.

அவ்வாறே ஜெயலலிதாவின் உடன் பிறவா சகோதரியாக கருதப்பட்ட சசிகலா உள்ளிட்டோருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டமையும் அவரும் OPS  ஸ்டைல் இல் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் "அடித்து " சபதம் எடுத்தமையும் வைரல் காட்சியாக பேசப்பட்டது.

 •  நடிகர் கமலின் அரசியல் ஆடுகளம் "பிக் பாஸ் "

ஸ்டார் விஜய் தொலை  காட்ச்சியின் பிரபல நிகழ்ச்சியான "பிக் பாஸ் " தமிழில் நடிகர் கமல் ஹாசனை கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. 100 நாட்களில் பல பிரபலங்களுடன் தினம் தினம் பல சுவாரஸ்யங்களை சுமந்து வந்த இந்த நிகழ்ச்சி கமலின் அரசியல் பேச்சுக்களை பரப்புரை செய்யும் ஊடகமாக பயன்பட்டதுடன் பலரை புகழின் உச்சிக்கு கொண்டும் சென்றது 

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ஓவியா தமது திரைப்படங்களில் நடித்து பெயர் பெற்றதை விட பிக் பாஸ் நிகழ்ச்சியில்  இன்னும் பல  ரசிகர்களை சம்பாதித்து "ஓவியா ஆர் மீ " என்ற தனிப்படையினை தமதாக்கி கொண்டார்.

அவ்வாறே ஜல்லிக்கட்டு நிகழ்வில் பங்கேற்ற ஜூ லி யானா பலரின் வெறுப்பை சம்பாதித்தமை, நடிகர் ஷக்தி பெற்றுக்கொண்ட "ட்ரிகெர்" பட்டம்  , உள்ளிட்டவை இதில் அடங்கும் 

 • அனிதாவின் மரணமும் "நீட் " தேர்வின் எதிர்ப்பு அலைகளும் 

இந்திய மருத்துவ கல்வி முறையில் மத்திய அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட "நீட் " தேர்வு முறைமை காரணமாக மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டமை பலரின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. மட்டுமன்றி தமிழகம் முழுவதுமான எதிர்ப்பாளர்களை முன் கொண்டு சென்றது.

 • வித்யா படுகொலையின் தீர்ப்பு 

புடுங்குடுதீவின் பாடசாலை மாணவி வித்யா 2015 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டு அவரின் வழக்கு விசாரணையின் பின்னர் பல அரசியல் சார்ந்த உள்  விவகாரங்கள் வெளிக்கொண்டுவரப்பட்டது. அதன்படி நீதியரசர் நெடுஞ்செழியன் உள்ளிட்ட 3 நீதியரசர் களின் நேரடி பார்வையின் கீழ் "ட்ரயல்  அட் பார் "முறைமையில் விசாரணை முடக்கப்பட்டு சந்தேக நபர்களுக்கு   மரண தண்டனை விதிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்க நிகழ்வாகும்.

 • 2.O  பாடல்கள் வெளியீடும் ரஜினியின் அரசியல் பிரவேசமும் 

ரஜினியின் அடுத்த படமான 2.O இன்  இசை வெளியீடு   துபாயில் இடம்பெற்றது  பலரை ஆச்சர்யப்பட வைத்தது . அவ்வாறே ரஜினி ரசிகர்களை நேரடியாக சந்தித்து புகைப்படம் எடுக்க அனுமதி தந்தமையும் அதனை தொடர்ந்து ரஜனி அரசியல் கட்சியினை தொடங்கி "ஆன்மிக அரசியலில் " ஈடுபடப்போவதாக அறிவித்தமையும் பேசப்பட்ட விடயம் ஆகும்.

 

 •   "ஜிமிக்கி கம்மல் " நடனம் 

 இந்தியாவின் ஓணம் பண்டிகையை முன்னிட்டு வெளியான கேரள  அழகிகளின் "ஜிமிக்க கம்மல் " நடன வீடியோவை   இதுவரை 16 மில்லியன் பேர் பார்வையிட்டு உள்ளனர். இது பலரின் ஏகோபித்த வரவேற்பை பெற்றதும் அதில் பங்கேற்ற செலின் பிரபலமானதும் அறிந்ததே.

 •  இலங்கை கிரிக்கெட்டுக்கு வந்த சோதனை 

இந்த வருடத்தில் மாத்திரம் 3தடவைகள் தலைவரை மாற்றிக்கொண்டது இலங்கை கிரிக்கெட் சபை அத்துடன் தொடர்தோல்விகளை அதிக பட்சமாக சந்தித்து கிரிக்கெட் ரசிகர்களின் வெறுப்பினை சம்பாதித்து கொண்டது இலங்கை கிரிக்கெட் சபை.

 • மீதொட்டமுள்ள  குப்பைக் கோபுரம் சரிவும் உயிர் பலியும் 

கொழும்பில் மீதொட்டமுள்ள  பிரதேசத்தில் கொட்டப்பட்டு வந்த குப்பை கழிவுகள் மலை போல்  குவிந்து தொடர்ந்து அகற்றப்படாமையால் சரிந்து விழுந்ததில்  20 ற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இறந்தும் பலர் காயங்களுடன் அவதியுற்றமையும் கவலைப்படவைத்த விடயம் எனலாம் .

 •  இலங்கை படஜெட் வாசிப்புக்கு சைக்கிளில் வந்த மகிந்த 

2018 ஆம் ஆண்டின் பட்ஜெட் வாசிப்பு பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வேளை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அவரது கட்சியினரும் ஆதரவாளர்களும் பாராளுமன்றத்திற்கு சைக்கிளில் வருகை தந்தனர். 
இது தற்போதைய அரசியல் முரண்பாடுகளை பிரதி பலிப்பதாக அமைந்தது 

 • முடிவுக்கு வந்த முகாபேயின் ஆட்சி

தென்னாபிரிக்காவின் நெல்சன் மண்டேலாவை போலவே சித்தரிக்கப்பட்டவர் ஜிம்பாவேயின் அதிபர் ரொபர்ட் முகாபே . கடந்த 37 ஆண்டுகளாக வகித்துவந்த தலைமை பதவியை விட்டு விலகிட நேர்ந்த சம்பவம் பலராலும் பேசப்பட்டதே .

 • ரோஹிங்கியா வன்முறையும் இனப்படுகொலைகளும் 

மியன்மாரில் உள்ள ரோஹிங்கியா நகரில் இடம்பெற்ற இனக்கலவரத்தின் பொது பல முஸ்லீம் மக்கள் பாகுபாடின்றி கொடூரமாக கொல்லப்பட்டமையும் அதன் எதிர்பலைகளுமே இந்த ஆண்டின் பாரிய கவலை தரும் செய்தியாக பேசப்பட்டது.

 •  டிரம்பின் கண்களில் விரலை விட்டு ஆட்டிய வட  கொரியா  

கடந்த செப்டெம்பர் மாதம் தமது ஆறாவது அணுவாயுத சோதனை நடத்திய வட  கொரியா, அமெரிக்கா  தந்த அழுத்தங்களை சற்றும் பொருட்படுத்தாமல் " இதுவரை கண்டிராத நெருப்பையும் கோபத்தையும் உலகம் காணப்போவதாக " அந்த நாட்டின் அதிபர்  கிம் சூளுரைத்தமை உலகையே உலுக்கிய செய்தியாகும்.

 • பத்தாண்டுகளின்   பின்னர் பொருளாதார வளர்ச்சி கண்ட உலகம் 

தொழிற்துறை மற்றும் முதலீட்டு வர்த்தகத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி நிலை  எட்டப்பட்டு இருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை தெரிவித்ததை அடுத்து சர்வதேச பொருளாதார வளர்ச்சி வீதம் 3.6% சதவீதமாக காணப்பட்டதுவும் பேசப்பட்ட விடயமாகும்.

 • அரை நூற்றாண்டு கொள்கையை மாற்ற துணிந்த பிரித்தானியா 

பிரித்தானியாவின் 50 ஆண்டுகால பொருளாதார மற்றும் வெளியுறவு கொள்கை மாற்றம் பலரின் பரபரப்பான எதிர்பார்ப்பை தன்பக்கம் இழுத்தது.