2017 இன் உலகின் மோசமான திரைப்படங்கள் இவைதான்

2017 இன் உலகின் மோசமான திரைப்படங்கள்  இவைதான்

பிரபலங்களே மோசமான விருதுகளுக்கு சொந்தக்காரர்கள் என்பது தெரியுமா?

24/01/2018 | Views 1342

சாதாரணமாக கோல்டன் க்ளோப் மற்றும் ஒஸ்கார் என்பன வருடந்தோறும் வெளிவரும் உலகின் சிறந்த திரைப்படங்களுக்கு, அதன் தொழில்நுட்பவியல் கலைஞர்களுக்கு வழங்கப்படுவதை யாவரும் அறிவோம். இவ்வாறே எதிர்மறையாக மோசமான திரைப்படங்கள் (WORSE FILM) மற்றும் அதன் தொழில்நுட்பவியலாளர்களுக்கும் விருதுகள் வழங்கப்படுவதை கேள்விப்பட்டது உண்டா? 

" கோல்டன் ரஸ்பெரி விருதுகள் "(GOLDEN RASPBERRY AWARDS ) என்று கடந்த 38 வருடங்களாக இந்த விருது வழங்கல் நிகழ்வானது அமெரிக்காவில் நடைபெற்று வருகின்றது. இந்த கோல்டன் ராஸ்பெரி அவார்ட் நிறுவனத்தை  பிரபல ஹாலிவுட் நட்சத்திரங்களான ஜான் ஜெ.பி.வில்சன் மற்றும் மோ மர்பி ஆகியோருடன் UCLA  திரைத்துறை பட்டதாரிகளின் சங்கம் சேர்ந்து 1981 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்காவில் நிறுவியதாக அறியப்படுகின்றது.

பல எதிர்ப்புகள் மத்தியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த விருது நிறுவனத்தின் முதலாவது விருது வழங்கல் நிகழ்வானது 1981 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதி இடம்பெற்றது. அப்போது இதனை காண்பதற்கு வெறும் 36 நபர்கள் மட்டுமே வந்திருந்ததாக அறியப்படுகின்றது. காலப்போக்கில் பிபிசி மற்றும் சி என்.என் செய்தி சேவைகள் கண்டறிந்து ஒளிபரப்பியதை அடுத்து இந்த விருது பிரபல்யம் அடைந்தது.

இவர்களின் விருது வழங்கல் நிகழ்வுக்கு தேர்ந்தெடுக்கப்படும் நடிக நடிகைகள் வருகை தருவது இல்லை என்பதே வருந்தத்தக்க விடயம் ஆகும். அது போலவே கடந்த 2000 ஆம் ஆண்டின் பின்னரான மிக மோசமான நடிப்பினை வெளிக்காட்டிய நடிகர் என்ற விருதினை பிரபல நடிகர் எட்டி மர்ப்பி (EDDIE MURPHY) பெற்றுக்கொண்டார். 

அவ்வாறே 38 ஆவது தடவையாக எதிர்வரும் மார்ச் மாதம் 3 ஆம் திகதி அமெரிக்காவில் இடம்பெறவிருக்கும் இந்த "ரஸ்ஸி" விருதுகளுக்கான பரிந்துரைக்கப்பட்டிருக்கும் வேட்பாளர்களின் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது.

அந்த வகையில் அதிகபட்ச ரஸ்ஸி விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கும் திரைப்படமாக "TRANSFORMERS :THE LAST KNIGHT " காணப்படுகின்றது. இது விருதின் 9 பிரிவுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு விருதுக்கான பரிந்துரைப்புகளுக்கு எதிர்வரும் பெப்ரவரி 25 ஆம் திகதி வரை மின்னஞ்சல்  மூலம் வாக்குகளை செலுத்தலாம் என விழா ஏற்பாட்டு குழு அறியத்தந்துள்ளது.

அவ்வாறே கடந்த வருடம் பல எதிர்பார்ப்புக்களுடன் வெளியான "THE MUMMY ","FIFTY SHADES DARKER","BAYWATCH" ஆகிய திரைப்படங்கள் அதிகளவில் விருதுகளுக்கான பரிந்துரை பிரிவுகளில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மோசமான நடிகருக்கான விருதுக்கு பிரபல நடிகர் டாம் க்ரூஸ்(TOM CRUZE) இன் பெயரும் இவ்வருடம் பரிந்துரைக்கப்படும் இருப்பது கவனிக்கத்தக்க விடயம் ஆகும் .

38 ஆவது ரஸ்ஸி  விருதுகளுக்கான பரிந்துரைப்பு  பட்டியல் இதோ !

Worst Picture
Baywatch (Paramount) – Michael Berk, Gregory J. Bonann, Beau Flynn, Ivan Reitman, Douglas Schwartz
The Emoji Movie (Columbia) – Michelle Raimo Kouyate
Fifty Shades Darker (Universal) – Dana Brunetti, Michael De Luca, E. L. James, Marcus Viscidi
The Mummy (Universal) – Sarah Bradshaw, Sean Daniel, Alex Kurtzman, Chris Morgan
Transformers: The Last Knight (Paramount) – Ian Bryce, Lorenzo di Bonaventura, Tom DeSanto, Don Murphy 

Worst Director
Darren Aronofsky – Mother!
Michael Bay – Transformers: The Last Knight
James Foley – Fifty Shades Darker
Alex Kurtzman – The Mummy
Tony Leondis – The Emoji Movie

Worst Actor
Tom Cruise – The Mummy as Nick Morton
Johnny Depp – Pirates of the Caribbean: Dead Men Tell No Tales as Captain Jack Sparrow
Jamie Dornan – Fifty Shades Darker as Christian Grey
Zac Efron – Baywatch as Matt Brody
Mark Wahlberg – Daddy's Home 2 and Transformers: The Last Knight as Dusty Mayron and Cade Yeager

Worst Actress
Katherine Heigl – Unforgettable as Tessa Connover
Dakota Johnson – Fifty Shades Darker as Anastasia "Ana" Steele
Jennifer Lawrence – Mother! as Mother
Tyler Perry – Boo 2! A Madea Halloween as Mabel "Madea" Simmons
Emma Watson – The Circle as Mae Holland

Worst Supporting Actor
Javier Bardem – Mother! and Pirates of the Caribbean: Dead Men Tell No Tales as Him and Captain Armando Salazar
Russell Crowe – The Mummy as Dr. Henry Jekyll
Josh Duhamel – Transformers: The Last Knight as Col. William Lennox
Mel Gibson – Daddy's Home 2 as Kurt Mayron
Anthony Hopkins – Collide and Transformers: The Last Knight as Hagen Kahl and Sir Edmund Burton

Worst Supporting Actress
Kim Basinger – Fifty Shades Darker as Elena Lincoln
Sofia Boutella – The Mummy as Ahmanet
Laura Haddock – Transformers: The Last Knight as Viviane Wembly
Goldie Hawn – Snatched as Linda Middleton
Susan Sarandon – A Bad Moms Christmas as Isis Dunkler

Worst Screen Combo
Any combination of two characters, two sex toys or two sexual positions – Fifty Shades Darker
Any combination of two humans, two robots or two explosions – Transformers: The Last Knight
Any two obnoxious emojis – The Emoji Movie
Johnny Depp & his worn-out drunk routine – Pirates of the Caribbean: Dead Men Tell No Tales
Tyler Perry & either the ratty old dress or worn-out wig – Boo 2! A Madea Halloween

Worst Prequel, Remake, Rip-off or Sequel
Baywatch (Paramount)
Boo 2! A Madea Halloween (Lionsgate)
Fifty Shades Darker (Universal/Focus Features)
The Mummy (Universal)
Transformers: The Last Knight (Paramount)

Worst Screenplay
Baywatch – Damian Shannon, Mark Swift, Jay Scherick, David Ronn, Thomas Lennon and Robert Ben Garant; based on Baywatch by Michael Berk, Douglas Schwartz and Gregory J. Bonann
The Emoji Movie – Tony Leondis, Eric Siegel and Mike White
Fifty Shades Darker – Niall Leonard; based from the novel by E. L. James
The Mummy – David Koepp, Christopher McQuarrie, Dylan Kussman, Jon Spaihts, Alex Kurtzman and Jenny Lumet; based on The Mummy franchise
Transformers: The Last Knight – Art Marcum, Matt Holloway, Ken Nolan and Akiva Goldsman; based on Hasbro's Transformers action figures

உங்கள் வாக்கு எதற்கு?


நீங்கள் செய்திகள் வாசிப்பதில் அதிக நேரம் செலவிடுவது?

Posted by TamilFeed on Friday, May 18, 2018