பசியின்மைக்கு இதுவும் காரணம்

பசியின்மைக்கு இதுவும் காரணம்

உணவின் மீது நாட்டம் இல்லாதது பாரிய பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

02/02/2018 | Views 9791

மனிதனின் அன்றாட தேவைகளில் முதலிடம் வகிப்பது உணவு.மனித உடலை சீராக வைத்திருக்க உணவும் தான் முக்கியம். உயிர்வாழ உணவு இன்றியமையாதது. உடல் கட்டமைப்பினை  வைத்திருக்க நாம் கடைபிடிக்கும் உணவு பழக்க வழக்கம்  வாழ்வியலை மேம்படுத்த உதவுவதாக.

இக்காலகட்டத்தில் அனைவரும் தமது உடல் எடை தொடர்பில் அதீத கவனம் எடுத்து வருகின்றனர். தொப்பை போடுவதும் உடல் எடை அதிகமாக இருப்பதுவும் நம்மவர் மத்தியில் நிலவும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாகும் . இவ்வகை பிரச்சனைகளை கட்டுப்படுத்த உணவு தவிர்ப்பு மற்றும் உணவுக்கட்டுப்பாடு போன்ற விடயங்களில் அனைவரும் முழு ஈடுபாட்டுடன் இருப்பது அறிந்ததே .

உடல் பருமன் அதிகமாக இருப்பவர்கள் சிலருக்கு எப்போது கேட்டாலும் பசி இல்லை என கூறுவார்கள்  இவர்கள் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டாலும் இவர்களின் உடல் எடை குறைவடையாது.மாறாக என்னதான் உணவு தவிர்ப்பில் அதி தீவிரமாக இருந்தாலும் உடலின் எடை கூடிக்கொண்டே தான் போகிறது என்ற குற்றச்சாட்டினையும் முன் வைப்பார்கள் 

 • ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் 

எமது உடல் சீராக இயங்க வலிமை அவசியம் . அது நாம் அன்றாடம் உட்கொள்ளும் உணவின் மூலமே கிடைக்கின்றது.உணவுகளில் சீரான ஊட்டச்சத்து கிடைக்க தவறும் பட்சத்தில் பசியின்மை ஏற்படும். எனவே ஊட்டச்சத்து மிக்க உணவுகளை உட்கொள்ள வேண்டும் அவ்வாறே, எமக்கு உணவில் நாட்டம் இல்லாமல் போவதாலும், பசியின்மை ஏற்பட்டாலும் கண்டிப்பாக வைத்திய ஆலோசனைகளை பெற தவற கூடாது.  

 • மன  அழுத்த காரணிகள் 

அளவுக்கு அதிகமாக மன  அழுத்தம் காணப்பட்டாலும் நமக்கு பசிக்காது.கோபம் மற்றும் கவலை போன்ற உணர்வுகள் மன அழுத்தத்தின் போது வெளிக்காட்டப்படும் . இதன்போது அட்ரலின்  எனும் சுரப்பியானது மூளையில்  சுரக்கப்படும் .மூளையில் அட்ரலின்  சுரப்பதால் இதயத்துடிப்பு அதிகரித்து, உணவு சமிபாடடைவது தாமதமாக்கப்படும் . இதன் காரணமாகவும் பசியின்மை ஏற்பட வாய்ப்புக்கள் உண்டு. 

 • அன்டி பாயாட்டிக்ஸ்(ANTI BIOTICS)இன்  தாக்கம் 

சிற்சில வருத்தங்களுக்கு நாம் உடனடி நிவாரணியாக உள்ளெடுக்கும் அன்டி பாயாட்டிக்ஸ் மருந்துகளால் பசியின்மை ஏற்படும்.அவ்வாறே குருதி உயரழுத்தம் போன்ற நோய்களுக்காக உட்கொள்ளும் மருந்துகளாலும் பசியின்மை ஏற்படும்.

 • எதிர்ப்பு சக்தி குறைவு 

உடலில் நோய் எதிர்ப்புசக்தி குறைவடையும் பட்சத்தில் உடலில் இருந்து சைடோகின்ஸ் எனும் சுரப்பி வெளியாகும் . இது உடலை சோர்வடைய செய்வதுடன் பசியின்மையையும் ஏற்படுத்தும்.

 • கர்ப்பவாதிகளுக்கான அதிக பாதிப்பு.

பேறுகாலத்தில் ஒவ்வொரு கர்ப்பிணி பெண்களுக்கும் குமட்டல் , உணவு ஒவ்வாமை போன்ற விளைவுகள் ஏற்படும் இதன் காரணமாக பசிக்காது. கர்ப்பகாலத்தில் உடலில் ஏற்படக்கூடிய ஹார்மோன் மாற்றமே இதற்கான முக்கிய காரணியாகும் . இதனால் கர்ப்பிணிகள் உடல் வலிமையை இழக்கவும் நேரிடலாம் 

 • தைரோயிட் சுரப்பில் குறைபாடு 

நீங்கள் உட்கொள்ளும் உணவின் கட்டுப்பாட்டாளர் தைரோய்ட் சுரப்பி ஆகும் . இது சரியாக இயங்காது போனால் உடலுக்கு ஊட்டச்சத்து கிடைக்காது.அவ்வாறே உணவு சரிவர செரிமானம் அடைய தவறுவதால் பசியின்மை ஏற்படும் 

 • சிகப்பணுக்கள் குறைபாடு 

குருதியில் காணப்படும் சிகப்பு அணுக்களின் குறையே பசியின்மை பிரச்சினையைஏற்படுத்தும் . உடலுக்கு தேவையான ஆக்சிஜனை கொண்டுள்ள சிகப்பணுக்களின் அளவானது குருதியில் குறைவடையும் பட்சத்தில் பசியின்மை பிரச்சினை ஏற்படும்.

 • புற்றுநோய் சிகிச்சைகள் 

புற்று நோயாளர்களுக்காக சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுவரும் சிகிச்சை முறைகளான கதிர்ப்பாய்ச்சல் மற்றும் கீமோ தெரப்பி என்பன பசியின்மை பிரச்சினையை ஏற்படுத்த கூடியன. இதன் காரணமாக உடல் வறட்சி நிலை (DEHYDRATION) ஏற்பட அதிக வாய்ப்புக்கள் உண்டு.

 • வயது முதிர்ச்சி 

வயது முதிர்தலும் பசியின்மைக்கான காரணியாகும் உடலின் சமிபாட்டு தொகுதி வயது முதிர்ச்சி காரணமாக தமது செயல்பாட்டினை குறைத்துக்கொண்டே வரும்.அத்துடன் சுவை உணரும் தன்மை மற்றும் நுகர்ச்சி தன்மை என்பன குறைவடைந்து கொண்டே வருவதால் பசியின்மை  ஏற்படும்.

 • சர்க்கரை அளவின் மாற்றம் 

உடலில் உள்ள சர்க்கரை அளவில் மாற்றம் ஏற்பட்டாலும் பசிக்காது. அதுபோலவே சர்க்கரை வியாதி காணப்பட்டால் நரம்பு மண்டலத்தில் பாதிப்பு ஏற்படும் . முக்கியமாக  நரம்பானது பாதிக்கப்படும் பட்சத்தில் வயிற்றில் உள்ள தசைகள் கட்டுப்பாட்டை இழந்து பசியின்மையை ஏற்படுத்தும் 

 • வயிற்றில் பூச்சி 

வயிற்றில் பூச்சி இருந்தால் கூட பசியின்மை பிரச்சனை காணப்படும் . இதனையும் தாண்டி வயிற்றுப் போக்கு,குமட்டல், வயிற்று வலி ஆகிய உபாதைகளும் இருக்கும் .இதனால் உடலிலுள்ள நீர்ச்சத்து அதிகளவில் வெளியேறும். இதன் காரணமாக பசியின்மை காணப்படும் 

உங்கள் வாக்கு எதற்கு?


நீங்கள் செய்திகள் வாசிப்பதில் அதிக நேரம் செலவிடுவது?

Posted by TamilFeed on Friday, May 18, 2018