இவ்வகை அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் புற்று நோய் ஏற்படும்  

இவ்வகை அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் புற்று நோய் ஏற்படும்  

சாதாரணமாக தென்படும் சில அறிகுறிகள் புற்றுநோய் ஏற்படுவதை  குறிக்கலாம் .

06/02/2018 | Views 12931

நாகரிக வளர்ச்சியும் , மனிதர்களுக்கு ஏற்படுகின்ற நோய்களின் வகைகளும் இக்காலத்தில் அதிவேகமானது.பிறந்த குழந்தை ஆகட்டும், இளம் வயதினர் ஆகட்டும், சில அபூர்வமான வியாதிகள் அனைத்து வயதினரையும் ஆட்டிப்படைக்கும் நிலையினை கொண்டுள்ளது.உண்ணும் உணவின் அளவுகளை விட தினசரி நாம் எடுத்துக்கொள்ளும் மருந்துகளின் அளவே அதிகமாகிப்போகும் அளவுக்கு மிகவும் மோசமான நிலையினை சந்தித்து வருகின்றோம்.

இன்றைய காலகட்டத்தில் அதிகமாக அனைவரிடமும் காணப்படும் ஒரு நோயாக புற்றுநோய் உள்ளது. இது பல்வேறு ரூபங்களில் ,பல்வேறு விதமாக மக்களை அச்சுறுத்தி வருவதுடன்,உயிர்பலி காவும் கொடிய வல்லமையையும் கொண்டுள்ளது.

ஆரோக்கியமான மனிதனை காண்பது அரிது, அவனது அன்றாட நடவடிக்கைகளில் சிற்சில உபாதைகளை தினமும் எதிர்கொண்டவண்ணமே உள்ளான், அவை பார்ப்பதற்கு சாதாரணமாக தென்பட்டாலும் பின்னர் அவையே பாரிய நோய்க்கான அறிகுறியாக மாறிவிடுவதை அவன் உணர்வதில்லை. 

இவ்வாறு சாதாரண உபாதையாக தென்படக்கூடிய அறிகுறிகள் சில குடல் புற்றுநோய்க்காகவும் இருக்கும் சாத்தியம் உள்ளது. அவற்றை ஆரம்பத்திலேயே கண்டறிந்து கொண்டால் நோயின் பாரிய தாக்கத்தில் இருந்து தற்பாதுகாப்பினை பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வகையான குடல் புற்றுநோய்க்கான அறிகுறிகள் எவை என பார்ப்போம் 

இரத்தக்கசிவு

மலம் வெளியேறும் பொது இரத்தக்கசிவானது தொடர்ந்தும் ஏற்படுமானால் கண்டிப்பாக வைத்தியரை அணுக வேண்டியது அவசியம் ஆகும். இது குடல் புற்று நோய்க்கான அறிகுறியாகும்

அரிப்பு

மலம் வெளியேற்றும் பகுதியில் தொடர்ச்சியான அரிப்பு இருந்தால் மலக்குடல் புற்றுநோய்க்கான ஆரம்ப அறிகுறியாகும்.

கட்டி

ஆசன வாய் பகுதியில் கட்டி இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். சாதாரணமாக மூலவியாதிக்கான முடிச்சுகள் கூட இவ்வகையாக தென்படும் என்பதால் கட்டிகளை இனம் காணும்போது சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல் வைத்தியரை அணுகுவது சிறந்தது. 

வலி

ஆசன வாயில் கடுமையான வலி அல்லது மலம் வெளியேற்றும் பகுதியானது பாரமாக இருக்குமாயின், அதுவும் மலக்குடல் புற்றுநோய்க்கான அறிகுறிகளுள் ஒன்றாகும்.

குடலியக்க மாற்றம்

குடலியக்கம் அல்லது மலம் வெளியேற்றுவதில் அசாதாரண மாற்றங்களை எதிர்கொண்டால் , சற்றும் தாமதிக்காமல் மருத்துவரை உடனே அணுகுங்கள். ஏனெனில் இதுவும் குடல்புற்றுநோய்க்கான ஓர் அறிகுறி

அசாதாரண வெளியேற்றம்

மலப்புழை வழியே அசாதாரணமாக ஏதேனும் வெளியேற்றத்தைக் கண்டால், அதுவும் மலக்குடல் புற்றுநோய் இருப்பதற்கு வாய்ப்புள்ளது என்று அர்த்தம்.

வீங்கிய நிணநீர் முனைகள்

மலப்புழை அல்லது ஆசன வாயில் உள்ள நிணநீர் முனைகள் வீக்கத்துடன் இருந்தால், அது மலக்குடல் புற்றுநோய் உள்ளது என்பதற்கான அறிகுறிகளுள் ஒன்றாகும்.

பொதுவாக மனிதனின் அன்றாட வாழ்வியலில் சிற்சில வலிகள், மற்றும் உபாதைகள் என்பன சாதாரணமாக தென்படக்கூடியவை ஆகும், இவ்வாறு சாதாரணமாக காணப்பட்டாலும் பின்னர் பாரிய பாதிப்பாக உயிர்கொல்லும் அளவுக்கு நம்மை இட்டுச்செல்லவும் மறுப்பது இல்லை.எனவே இவ்வகையான உபாதைகளை இனம்காணும்போது மறக்காமல் வைத்தியரை அணுக தாமதிக்க வேண்டாம் .