இந்திய பயணத்தால் அதிருப்தியை அள்ளிக்கொண்டார் ட்ரூடோ

இந்திய பயணத்தால்  அதிருப்தியை அள்ளிக்கொண்டார் ட்ரூடோ

கனடிய பிரஜைகளின் கனவு நாயகனுக்கு நேர்ந்த இக்கட்டான நிலை

27/02/2018 | Views 256

உலக தலைவர்களின் பட்டியலில் அதிகளவு பெண்கள் மற்றும் இளைஞர்களின் கனவுநாயகனாக சித்தரிக்கப்படுபவர் கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. இவர் தற்பொழுது இந்தியாவிற்கு தமது குடும்பத்தாருடன் சுற்றுலா பயணம் மேற்கொண்டிருப்பதுடன் பல்வேறு செயற்பாடுகளால் ஊடகங்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் தன்பக்கம் ஈர்த்து வைத்திருப்பது அறியப்படுகின்றது.

கனடாவை பொறுத்தவகையில் இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட தெற்காசிய பிராந்திய நாடுகளின் புலம்பெயர்க்குடிகள் ஒப்பீட்டளவில் அதிகளவில் கொண்ட நாடாகும். பூர்வகுடிகள் என்பதை விட புலப்பெயர் குடிகளை அதிகபட்சமாக கொண்டு நாடு எனும் கட்டமைப்பில் முன்னேற்றத்தை கண்ட நாடு கனடா என்பது மிகையல்ல . அவ்வாறான நாட்டில் உள்ள சாதாரன பொதுமகனின் ஆதரவு கூட ட்ரூடோவுக்கு உள்ளது என்பது உண்மை.

ஒப்பீட்டளவில் தமிழ் குடியேறிகள் அதிகளவில் காணப்படும் நாடாக கனடா உள்ளமை அறியப்படவேண்டியதாகும். அவ்வாறே புலப்பெயர் குடிகளின் அதிகபட்ச ஆதிக்கமே அந்த நாட்டின் அரசியல் சமூக கொள்கைகளை கட்டுப்படுத்துவது தெரிந்துகொள்ள வேண்டிய விடயமாகும்.

கனடிய மக்களின் கனவு நாயகனாக கருதப்படும் ஜஸ்டின் ட்ரூடோ கனடாவில் நிகழும் தமிழ் கலாச்சார நிகழ்வுகளுக்கு முன்னுரிமை கொடுத்து வந்தது அறியப்படக்கூடியதாக இருந்தது. இது இவ்வாறு இருக்க அண்மையில் தமது குடும்பத்தாருடன் இவர் மேற்கொண்டிருக்கும் இந்திய பயணமானது வரலாற்று சிறப்புமிக்கதாக மட்டுமன்றி பாரிய உள்விவகார வலையமைப்பினை கொண்டதாகும் என கூறுவதில் ஐயமில்லை .

இலங்கையில் எவ்வாறு சிங்கள மற்றும் தமிழர் இன பிரிவினைவாதம் உள்ளதுவோ இந்தியாவில் கூட சீக்கியர் மற்றும் பிற இனத்தவரின் இனப்பாகுபாடானது பெரிய சர்ச்சைக்குள்ளான விடயமே ஆகும்.

காலிஸ்தானியமும் ட்ரூடோவின் சமாளிப்பும்.

கடந்த காலங்களில் சீக்கியர்களின் பேரினவாத கொள்கைகளின் முன்னணி இயக்கமான காலிஸ்தான் ஒன்றியத்தின்அமைப்பாளர்களையும், கொள்கையியலாளர்களையும் தீவிரவாதிகள் என கொண்டிருப்பதாக இந்திய வம்சாவளியினர் ஒரு பகுதியினர் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். இவர்களுக்கான ஆதரவினை ஜஸ்டின் ட்ரூடோ வழங்குவதாக ஒரு தரப்பினர் குற்றம் சாட்டுகின்றது அறியக்கூடியதாகும். அவ்வாறே கடந்த காலங்களில் கனடிய நாடாளுமன்றத்தில் பேரளவிலான சீக்கியர்கள் காணப்படுவதாக ட்ரூடோ வெளிப்படை தகவலினை கூட அறியத்தந்திருந்தார்.

இவ்வாறு இம்முறை அவரின் இந்திய வருகையின் போது சீக்கியர்களின் பொற்கோயிலுக்கு சென்று வந்தமை, அங்கு மக்களுடன் மக்களாக இணைந்த செயற்பாடு மட்டுமன்றி பஞ்சாப்பிய மாநில முதல்வர் அம்ரிந்தர் சிங்குடனான சந்திப்பின் பின்னர் காலிஸ்தானிய இளைஞர் செயற்பாட்டாளர்கள் 9 பேரை தீவிரவாதிகளாக சித்தரிக்காமை உள்ளிட்ட பேச்சுவார்தைகளானவை பல்வேறு தரப்பினரதும் அதிருப்தி நிலையினை வெளிக்காட்டியவாறு உள்ளன.

பொதுப்படையாக காலிஸ்தானிய சீக்கிய தீவிர கொள்கையாளர்களை பெருவாரியானவர்கள் தீவிரவாதிகள் கண்ணோட்டத்தில் பார்த்து வருவது அனுமானிக்கப்பட்ட விடயமாகும். இதன்காரணம் சீக்கிய காலிஸ்தானியர்கள் அண்மைக்காலத்தில் ஈடுபட்டுவந்த நடவடிக்கைகளால் அவர்கள் தீவிரவாதிகள் என பலராலும் சித்தரிக்கப்படுகின்றமை, அதிலும் குறிப்பாக காலிஸ்தானிய இளைஞர் அமைப்பினை சேர்ந்த 9 பேர் தீவிரவாதிகளாக இனம்காணப்பட்டமை தொடர்பில் பல்வேறு தரப்பினரும் தமது அதிருப்தி விமர்சனங்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்

இது ஒரு புறம் இருக்க இவர்களுக்கு ஆதரவு அளிக்கும் விதமான ட்ரூடோவின் நடவடிக்கைகள் அமைவதாக அரசியல் விமசகர்கள் மற்றும் கனடிய தமிழ் பிரதிநிதிகள் ஊடகங்களில் கருத்து தெரிவித்த வண்ணமிருப்பது அறியப்படுகின்றது.

கனடா பொதுவாக நடுநிலை நாடுகளில் ஒன்று. அப்படி இருக்கும்போது பிரிவினைவாதிகளின் கூட்டங்களில் கலந்து கொள்ளுதல் மற்றும் ஆதரவு காட்டுதல் நாட்டிற்கும் அதன் அரசிற்கும் அழகில்லை. கடந்த 10 வருடங்களாகத்தான் 'காலிஸ்தான்' இயக்கம் அமைதியாக ஓய்வடைந்து இருக்கிறது. இப்பொழுது அதை கிளறிவிடுவதை போன்ற செயலை கனடிய பிரதிநிதி ட்ரூடோ செய்வது அதிருப்தியை ஏற்படுத்துவதாகும் என கருத்து வெளியிடப்படுகின்றது.

இவை ஒரு புறம் இருக்க , இப்பொழுது இந்திய பயணத்தில் அட்வால் என்ற சீக்கியருடன் ட்ரூடோ புகைப்படம் எடுத்துக்கொண்டார். அட்வால் என்பவர் இந்தியாவிலிருந்து கனடாவிற்கு பல ஆண்டுகளுக்கு முன்னால் குடியேறியவர். பஞ்சாபிலிருந்து கனடாவிற்கு வந்திருந்த மந்திரியை கொலை செய்ய முயற்சி செய்ததற்காக 20 வருடங்கள் சிறையில் இருந்தவர் என அறியப்படுகின்றது. எனவே இவ்வகையான நிலைப்பாடுகள் பலருக்கு அதிருப்தி நிலையினை ஏற்படுத்துவது அறியக்கூடியதாக உள்ளது.

வரவேற்பில் பாரபட்சம் காட்டிய மோடி

ஒவ்வொரு நொடிப்பொழுதும் தமது அரசியல் மற்றும் அன்றாட நடவடிக்கைகளை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதை இன்றைய உலக தலைவர்கள் கண்டிப்பானதாக செய்து வருகின்றனர். இந்திய பிரதமர் மோடி ஆகட்டும், கனேடிய பிரதமர் ட்ரூடோ ஆகட்டும்.அவர்களது அனைத்து நடவடிக்கைகளையும் அவரவர்களின் பிரத்யேக சமூக வலைத்தளமான டிவிட்டரில் அவ்வப்போது பதிவிடுவதுடன் தாமும் "டிரெண்டில்" இருப்பதாக காட்டி வருகின்றமை அறியப்பட கூடியதாகும்.

இது இவ்வாறு இருக்க இந்திய பிரதமர் மோடி கைநீட்டிய பிரதமர் வருணியின் பின்னர் அவரது வரவேற்பு குறித்தும், நடவடிக்கைகள் குறித்துமான எதுவித உத்தியோகபூர்வ தரவுகளை தம் சார்பில் தெரிவிப்பதில் தாமதம் காட்டுவதாக இணைய வாசிகள் விசனம் தெரிவித்து வருகின்றனர். அவ்வாறே மற்றைய தலைவர்களை வரவேற்பதை காட்டிலும் ட்ரூடோவின் வரவேற்பில் பாரபட்சம் நிலவுவதாக பலரும் கருத்துக்களை முன்வைத்த வண்ணம் உள்ளனர்.

தமது குடும்பத்தாருடன் சுற்றுலாவாக இந்திய பயணத்தை மேற்கொண்ட ட்ரூடோ இவ்வாறு சர்ச்சைகளுக்குரிய தலைமைகளை சந்தித்தும் , பெரும்தலைமைகளின் அதிருப்தியை பாரபட்சமாக பெற்றும் இருப்பது அவரது வருகையை அடையாளப்படுத்துவதாக அன்றி அவமானப்படுத்தும் செயலாகும் என விமர்சகர்களின் பெருவாரியான கருத்து கணிப்பு தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் புலம்பெயர் தமிழர்களுக்கு மட்டும் எவ்வாறு தமிழ் ஈழம் கனவாக உள்ளதுவோ அவ்வாறே கனடா வாழ் புலம் பெயர்ந்த சீக்கியர்களும் தமது தனி காலிஸ்தானிய கனவு உள்ளது. சீக்கியர்கள் அவர்களது கொள்கைகளில் அதி தீவிரம் காட்டுவது ஆச்சரியப்படுவதற்கு இல்லை. எவ்வாறாயினும் புலம்பெயர்ந்தவர்களின் இவ்வகையான கொள்கை பரப்புகள் அவ்வந்த நாடுகளில் பூர்வீகமாகவும், புலம்பெயராமல் வாழ்த்தபடி எதுவித பாரபட்சமும் இல்லாமல் தமது சாதாரண வாழ்க்கையினை நடத்தி வரும் மக்களிடையே பாதிப்பினை ஏற்படுத்த போவது இல்லை.