புதிய கண்டுபிடிப்பாளர்களை ஊக்குவிக்கும் முயற்சியில் கனேடிய அரசாங்கம்.

புதிய கண்டுபிடிப்பாளர்களை ஊக்குவிக்கும் முயற்சியில் கனேடிய அரசாங்கம்.

கடந்த காலங்களில் இல்லாதவாறு  எதிர்கால சந்ததியினை ஊக்குவிக்கும் முயற்சியிலான பாதீட்டை அமைத்துள்ள கனடிய அரசாங்கம்.

28/02/2018 | Views 277

நிகழ்கால மக்களுக்கு நலத்திட்டம் வழங்கவும், நாட்டு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யவுமென நாடுகளில் உள்ள அரசாங்கங்களின் மூலம் நாட்டின் வரவு செலவு திட்டம் உருவாக்கப்படும். நாட்டுக்கு கிடைக்க கூடிய வருமானங்களை எவ்வாறு மக்கள் பயனடையும் வகையில் செலவிடுவதே என்பன தொடர்பில் சிறந்த திட்டமொன்றை வகுப்பதன் முன்னேற்பாடான வரவு செலவு திட்டமானது தன்னகத்தே கொண்டிருக்கும்.

பொதுவாக வளர்முக  நாடுகளை பொறுத்த வகையில் நாட்டில் உள்ள மக்களுக்கான அடிப்படை தேவைகளை  பூர்த்தி செய்வது, நலத்திட்டங்களை மேற்கொள்வது, செலவினங்களை பட்டியலிடுவது உள்ளிட்டவை முன்னிலை வகிக்கும் விடயங்களாக கருதப்படும். எதிர்கால ஒதுக்கம் மற்றும் செலவினங்களுக்கான பரிந்துரைகள் ஒப்பீட்டளவில் குறைவாகவே இருக்கும் என அறியப்படுகின்றது.

நாட்டின் நிகழ்கால  சந்ததியினரை மட்டும் கருதுவதுடன் நிறுத்தி கொள்ளாமல் எதிர்கால சந்ததியினர் தொடர்பில் கவனம் செலுத்தும் வகையில் செலவினங்கள் மேற்கொள்ளப்படுவது மக்களின் வாழ்கைத்தரமானது எந்தளவிற்கு மேம்பட்டு இருக்கின்றது என்பதை பாறைசாற்றும் விடயமாகும், 

அந்த வகையில் கனடிய அரசாங்கத்தின் 2018 ஆம் ஆண்டுக்கான பாதீடானது  மிகவும் வரவவேற்கப்படவேண்டிய விடயங்களை உள்ளடக்கியிருப்பது அறியப்படுகின்றது.

புத்துருவாக்குதல் முயற்சிக்கு ஊக்கம் 

2018 ஆம் ஆண்டு  கனடிய அரசாங்கத்தின் பாதீட்டில் முன்னர் எப்பொழுதும் இல்லாதவாறு புத்துருவாக்கும் முயற்சிக்கும் அடுத்த தலைமுறையினரின் வளர்ச்சிக்குமென சுமார் $ 4 பில்லியன் கனேடிய டாலரில் நிதி ஒதுக்கப்பட்டு இருப்பதாக  அறியப்படுகின்றது. உயிரியல் சுகாதாரம் ,உலகளாவிய மருத்துவ ஆய்வுகள் போன்ற விடயங்களுக்காக அடுத்த 5 ஆண்டுகளில் சுமார் $1மில்லியனுக்கும் அதிகமான நிதியினை ஒதுக்கம் செய்தும் இருப்பதாக கனடாவிலுள்ள அமைப்பான Gairdner Foundation அறியத்தந்துள்ளது.

சிகரெட் பாவனையாளர்களை குறைக்கும் நடவடிக்கை .

ஆண்டுதோறும் சுமார் 37000 பொதுமக்கள் கனடாவில் புகைபிடித்தல் பழக்கத்தினால் மரணிப்பதாக அறியப்படும் அதே நேரம்  வருடம்தோறும் 1 இலட்சத்து 15 ஆயிரம் மக்கள் பாதிப்பிற்கு உள்ளாவதாக அறியப்படுகின்றது . 

இதனை தடுக்கும் விதமாக சிகரெட் மற்றும் புகையிலை என்பனவற்றின் விலையை 200 கனேடிய டாலர்களால் அதிகரித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறே சிகரெட் மற்றும் மது பாவனைகளுக்கான சுங்க வரி விதிப்பனவிலும் 6% சதவீத அதிகரிப்பினை மேற்கொண்டு இருப்பதுவும் அறியப்படுகின்றது.

வாடகைகளும் வீடமைப்பு திட்டங்களும்.

கனடாவை பொறுத்தவகையில் பாரிய வீடமைப்பு சந்தை நடவடிக்கைகளில் பெயர்போன நாடாக காணப்படுகின்றது. பெரும்பாலும்,நகர்புறமான வான்கூவர் மற்றும் டொராண்டோ உள்ளிட்ட நகர்ப்புறங்களில் வாழும் மக்கள் தொகையினரின் 30% சதவீதத்திற்கு அதிகமானோர் வாடகை வீடுகளிலேயே வசித்து வருகின்றமை அறியப்படுகின்றது.

இவர்களது சம்பாத்தியத்தில் ஒரு பெரும் பங்கினை வீட்டு வாடகைகளுக்கு செலுத்தி வருவதாக அறியப்பட்டுள்ளது. இம்மக்கள் பொதுவாக வாடகைக்கென வீடுகளை நிர்மாணித்து அதன் மூலம் பெறப்படும் வாடகை பணங்களை தமது பேரளவு வருமானத்தினை எட்டும் செயல்களாக செய்து வருகின்றனர்.

அந்தவகையில் வாடகைக் கட்டுமான நிதியுதவி திட்டத்திற்கான நிதி அதிகரிக்கப்பட்டிருப்பதாக அறியப்படுகின்றது. இது கனடா முழுவதும் சுமார் 14000 வீட்டு அலகுகளை நிர்மாணிப்பதற்காக ஒதுக்கப்படவிருப்பதாக அறியப்படுகின்றது.


புறநகர் மற்றும் கிராமிய அபிவிருத்தி நடவடிக்கைகள் .

புறநகர் பிரதேசங்கள் மற்றும் பின்தங்கிய கிராமப்புறங்களுக்கு இணைய வசதிகளை விரிவாக்குத்தற் பொருட்டு சுமார் $100 மில்லியன் கனேடிய டாலர்கள் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதற்காக அறியப்படுகின்றது.

இணையம் மற்றும் தொடர்பாடல்களுக்கு பயன்படுத்த கூடிய தாழ் அலைக்கற்றை செயற்கைகோள் (LEO SATELLITE) பாவனை மற்றும் முயற்சிகளுக்கு மட்டுமன்றி வானியல் செயற்கைகோள் ஆய்வுகளுக்கு இந்த நிதி ஒதுக்கப்படவிருப்பதாக அறியப்படுகின்றது. விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பவியல் முயற்சிகளை விரிவுபடுத்த இந்த நிதி பயன்படுத்தப்படும் என அறியப்படுகின்றது.

பொது பாதுகாப்பு அலுவலர்களின் நலத்திட்டம்.

பொது பாதுகாப்பு தொடர்பில் பணிபுரியும் ஊழியர்களுக்கான நலத்திட்டம் மற்றும் காப்பீடு தொடர்பில் $20 மில்லியன் டாலர்கள் ஒதுக்கப்பட்டு இருப்பதற்காக அறியப்படுகின்றது. 


 கஞ்சா செடிகளை சட்டபூர்வமாக்கும் திட்டம் 

கஞ்சா போதைப்பொருளை தயாரிக்க உதவும் மூலப்பொருளான மரிஜுனா என்றழைக்கப்படும் கஞ்சா செடிகளை சட்டபூர்வமாக்குதல் தொடர்பில் சிறப்பு கவனம்  செலுத்தப்படுவதாக அறியப்படுகின்றது.அதாவது கஞ்சா பொருட்களின் உற்பத்தி வரியினை 10% சதவீதம் கனடிய அரசு அதிகப்படுத்தி இருக்கின்றது.
 பொதுவாக இளைஞர் கையில் போதைப் பொருளும், குற்றவாளிகள் கையில் அதிக இலாபமும் கிடைப்பதாக வரையறை செய்யப்படுகின்றது. இதன் மூலம் மாகாண ரீதியிலான வருமானம்  $100 மில்லியன் டாலர்களாக எட்டப்பட சாத்தியம் இருப்பதாக அறியப்படுகின்றது.