ஆஸ்கார் விழாவில் எதிர்பார்க்கப்பட்டவர்களும் ஏமாற்றம் கொண்டவர்களும்

ஆஸ்கார் விழாவில் எதிர்பார்க்கப்பட்டவர்களும் ஏமாற்றம் கொண்டவர்களும்

90 ஆவது ஆஸ்கார் சுவாரஷ்ய நிகழ்வுகளும்  விருதுகளின் பட்டியலும்

05/03/2018 | Views 215

பலராலும் எதிர்பார்க்கப்பட்ட 90ஆவது சர்வதேச அகாடமி விருதுகள் நேற்றையதினம் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வினை ABC தொலைக்காட்ச்சி நிறுவனம் நேரடி அஞ்சல் செய்ததுடன் நிகழ்வினை பிரபல தொலைக்காட்ச்சி வர்ணனையாளர் ஜிம்மி கிம்மல் தொகுத்து வழங்கினார்.

அறிவிக்கப்பட்டது படி கில்லர்மோ டெல் டோரோ (Guillermo del Toro’s) வின் "தீ க்ஷேப் ஆப் வாட்டர்  “The Shape of Water” திரைப்படம் 13 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட அதேநேரம் சிறந்த திரைப்படம் உள்ளிட்ட 4 விருதுகளை தட்டிச்சென்றது குறிப்பிடத்தக்கது.

அவ்வாறே எதிர்பார்க்கப்பட்டது போல நடிகர் Darkest Hour திரைப்படத்தில்  Winston Churchill கதாபாத்திரத்தில் நடித்த கெர்ரி  ஓல்ட்மன் (GARRY OLDMAN) சிறந்த நடிகருக்கான விருதினை தட்டிச்சென்றார்.  

பலராலும் எதிர்பார்க்கப்பட்ட பிரபல இயக்குனர் கிறிஸ்டோபர் நோலனின் (Christopher Nolan) இன்  இயக்கத்தில் வெளியான Dunkirk திரைப்படத்திற்கு  3 ஒலிக்கலவை  (SOUND MIXING), ஒலித்தொகுப்பு (SOUND EDITING), மற்றும் ஒளித்தொகுப்பு (FILM EDITING) ஆகியவற்றுக்கு அகாடமி விருதுகள் கிடைத்ததே தவிர அதன் இயக்கத்திற்கு கிடைக்காமல் கை  நழுவிப்போனது அவரது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தினை அளித்தது.

இவ்வாறு ஆஸ்கார் அகாடமி விருதுகள் நிகழ்வில் இடம்பெற்ற சில சுவாரஷ்ய தரவுகள் இதோ

  • சிறந்த அசல் திரைக்கதை (BEST ORIGINAL SCREENPLAY)எழுதி ,  விருதினை "Get Out" திரைப்படத்திற்காக பெற்றுக்கொண்ட ஜோர்டான் பீலே (Jordan Peele) இந்த துறைக்கான விருத்தினைப்பெறும் முதல் கறுப்பின அமெரிக்கர் என்ற பெருமையை தாமதாக்கிக்கொண்டார்.
  • நிகழ்வினை தொகுத்து வழங்கிட கூடுதல் தொகுப்பாளராக டேனியலா வேகா (Daniela Vega) அழைக்கப்பட்டு இருந்தார். அகாடமி விருதுகளை தொகுத்து வழங்கிட அழைக்கப்பட்ட முதல் திருநங்கையாக இவர் மிளிர்கிறார்.
  • நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ஜிம்மி கிம்மல் அகாடமி விருதுகள் சிலை தொடர்பில் "குறிப்பிட்டளவேயுள்ள இந்த பெண் (சிலை)க்கு பல ஆண்கள் ஆசைப்படுகிறார்கள் "என்பதுபோல இரட்டை அர்த்த நகைச்சுவையினை கூறி அரங்கினை சிரிப்பில் ஆழ்த்தினார்.

90 ஆவது சர்வதேச ஆஸ்கார் அகாடமி விருதுகளின் பட்டியல் வருமாறு 

•    ACTRESS IN A SUPPORTING ROLE
    Allison Janney, "I, Tonya" *WINNER
•    ACTOR IN A SUPPORTING ROLE
    Sam Rockwell, "Three Billboards Outside Ebbing, Missouri" *WINNER
•    FOREIGN LANGUAGE FILM
    "A Fantastic Woman" *WINNER
•    DOCUMENTARY (SHORT)
    "Heaven is a Traffic Jam on the 405" *WINNER
•    DOCUMENTARY FEATURE
    "Icarus" *WINNER
•    ORIGINAL SONG
    "Remember Me," "Coco" *WINNER
•    ANIMATED FEATURE FILM
    "Coco" *WINNER
•    ADAPTED SCREENPLAY
    "Call Me by Your Name" *WINNER
•    ORIGINAL SCREENPLAY
    "Get Out" *WINNER
•    ACTOR IN A LEADING ROLE
    Gary Oldman, "Darkest Hour" *WINNER
•    ACTRESS IN A LEADING ROLE
    Frances McDormand, "Three Billboards Outside Ebbing, Missouri" *WINNER
•    DIRECTOR
    Guillermo del Toro, "The Shape of Water" *WINNER
•    BEST PICTURE
    "The Shape of Water" *WINNER
•    PRODUCTION DESIGN
    "The Shape of Water" *WINNER
•    CINEMATOGRAPHY
    "Blade Runner 2049" *WINNER
•    COSTUME DESIGN
    "Phantom Thread" *WINNER
•    SOUND EDITING
    "Dunkirk" *WINNER
•    SOUND MIXING
    "Dunkirk" *WINNER
•    ANIMATED SHORT FILM
    "Dear Basketball" *WINNER
•    LIVE ACTION SHORT FILM
    "The Silent Child" *WINNER
•    ORIGINAL SCORE
    "The Shape of Water" *WINNER
•    VISUAL EFFECTS
    "Blade Runner 2049" *WINNER
•    FILM EDITING
    "Dunkirk" *WINNER
•    MAKEUP AND HAIRSTYLING
    "Darkest Hour" *WINNER