இலங்கையில் வலையமைப்பு கட்டுப்பாட்டால் விலைக்குவாங்கப்பட்ட வம்பு VPN 

இலங்கையில் வலையமைப்பு கட்டுப்பாட்டால் விலைக்குவாங்கப்பட்ட வம்பு VPN 

சமூக வலையமைப்பில் ஊறிப்போன இளைஞர்களை ஆட்டிப்படைக்கும் VPN.

09/03/2018 | Views 458

இலங்கையில் இடம்பெற்றுவரும் அசாதாரண சூழ்நிலையின் காரணமாக கடந்த தினங்களில் சமூக வலையமைப்பு தொடர்பாடல் சேவைகள் சில தொலைத்தொடர்பு ஆணையத்தின் உத்தரவின் பேரில் முடக்கப்பட்டது அறிந்ததே.

இதன் காரணமாக அனாமதேய செய்திப்பரவல்கள் தடுக்கப்பட்டு நாட்டில் நிலவும் வீண் கலவரநிலை கட்டுப்படுத்தப்படும் என்ற நல்ல நோக்கிலேயே இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

எவ்வாறாயினும் சமூக வலைத்தள பாவனையில் ஊறிப்போன இலங்கையர்களுக்கு அதனை பாவிக்க முடியாமல் திண்டாடிய அதே நேரம் எவ்வாறாயினும் மாற்று வழிகளிலேனும் FACEBOOK, WHATSAPP, என்பனவற்றை பாவிக்க வேண்டும் என்ற குறிக்கோள் இருந்தது.

இதன் காரணமாக அரசாங்கத்தின் தடை உத்தரவையும் மீறி VPN தொழில் நுட்பத்தினை பயன்படுத்தி சமூக வலைத்தளங்களை இவர்கள் பாவிக்க தொடங்கியது அறியக்கூடியதாக உள்ளது.

  • VPN  என்றால் என்ன?

மெய் நிகர் தனியார் வலையமைப்பு (VIRTUAL PRIVATE NETWORK) என்பது குறைநிலை பாதுகாப்பு வலையமைப்பின் மூலம் செயலிகளை பயன்படுத்தக்கூடிய மறைநிலை நுட்பம் ஆகும். இது பெருநிலை நிறுவனங்கள் தமது கிளை நிறுவனங்களின் தகவல் வளங்களின் பாதுகாப்பு தொடர்பிலும், கண்காணிப்பு தொடர்பிலும் உருவாக்கப்பட்டது ஆகும்.

  • VPN உபயோகிப்பது சரியானதா?

தொலைத்தொடர்புகள் ஊடகங்களில் VPN செயலி பதிவிறக்கப்பட்டு செயற்படுத்தப்படுவது சாதாரணமானது. எனினும் இதன்மூலமாக தனிப்பட்டதரவுகளானவை களவாடப்படும் சாத்தியக்கூறுகள் பெரும்பாலும் காணப்படுவதாக அறியப்படுகின்றது. எனவே தனிப்பட்ட மற்றும் ரகசியம் பேணும் நிலையில் யாரும் இந்த செயலியை பயன்படுத்த அஞ்சுவது அறியப்பட்ட உண்மை ஆகும்.

  • இலங்கையில் VPN  பாவனை .

ஏற்கனவே சில தொலைபேசி இயங்குதளங்களில் செயலியாக VPN இருந்த போதிலும் பலர் அதனை பயன்படுத்தாமல் இருந்தனர். குறைந்த வலையமைப்பு செயற்பாட்டால் அதற்கான அவசியமும் இல்லாது இருந்தது. 

எனினும் அரசாங்கத்தின் சமூகவலைத்தள பாவனை மட்டுப்படுத்தல்நடவடிக்கையின் பின்னர் இந்த VPN இந்த தேவை இணையப்பவனையாளர்களுக்கு இன்றியமையாததாக ஆக்கப்பட்டது. எனவே பலரும் புதிதாக இந்த செயலியை தரவிறக்கம் செய்து வழமைபோலவே சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.

  • VPN பாவனை இலங்கையர்களுக்கு ஆபத்தானதா?

முதலில் நாம் தெளிவுபெறவேண்டிய விடயம் ஒன்று உள்ளது. அதாவது சமூக வலைத்தளங்களும், தொடர்பாடல் செயலிகளும் இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் மூலம் கட்டுப்படுத்தப்பட்டதே தவிர தடை செய்யப்படவில்லை. தனிநபர் வலையமைப்பு  கணக்குகளை காரணமின்றி முடக்குவதானது இங்கு நடைபெறவில்லை. மாறாக பாதுகாப்பு மற்றும் நாட்டின் இறையாண்மையை கருத்திற்கொண்டு மக்களுக்கு பரப்பப்படும் அனாமதேய செய்திப்பரவல்களானவை பெரும்பாலும் சமூக வலைத்தளங்களின் மூலமே கொண்டுசெல்லப்பட்டமை அறிந்தே அவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டமையை அனைவரும் தெளிவுற புரிந்து கொள்ள வேண்டும்.

இலங்கையில் இணையப்பவனையானது அனைத்து தரப்பினராலும் சர்வசாதாரணமாக பெருவாரியாக பயன்படுத்தப்படுவது ஆரோக்கியமானது ஆகும். அதாவது நாட்டில் உள்ள அனைத்த்து தரப்பின் மக்களும் வலைத்தள பாவனையினை மேற்கொள்வது வளர்ச்சி குறிகாட்டியாகவே கருதப்படுவது.

தினசரி நடவடிக்கைகளில் சமூகவலை பாவனையையும், இன்றைய சமூகத்தினரையும் பிரிக்க முடியாமல் போனது ஒருவகையில் பாதகமாகவே அமைந்தது. அதற்கு சிறந்த உதாரணமே தவறாக பரப்பப்பட்ட செய்திகளால் ஏற்பட்ட கலவர நிலை என்பதை மக்கள் உணர வேண்டும்.

  • VPN சட்ட விரோதமானதா?

எவ்வாறாயினும் சமூக வலைத்தளத்தை பாவித்தே தீரவேண்டும் என்ற எண்ணமானது மக்களின் மனநிலையில் ஊறிவிட்டதால் அவற்றிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட மாற்று வழியான VPN அதிகாரம்பூர்வமானது அல்ல. ஆயினும் இது தடைசெய்யப்படட செயலியும்  அல்ல. இதனை பயன்படுத்துவது சட்ட விரோத செயலும் அல்ல.

தனிநபர் தரவுகள் பாதுகாப்பானது இவ்வகை குறைநிலை வலையமைப்பின் மூலம் இலகுவாக களவாடப்படும் என்பது எவ்வாறாயினும் ஆபத்தான நிலை என்பதை விளங்கிக்கொள்ளவேண்டும். 

நாட்டின் பொறுப்புமிக்க பிரஜைகள் என்ற ரீதியில் அரசாங்கமானது ஒரு சட்டத்தினை அல்லது உத்தரவினை பிறப்பிக்கும் பட்சத்தில் அவற்றை மதித்து நடத்தல் மிகவும் அவசியமானது . தனிப்பட்ட அரசியல் விருப்புக்கள் என்பன எல்லாம் கடந்து நாட்டு சட்டதிட்டங்களை மதிப்பது ஒரு பிரஜையின் தலையாய கடமை. அரசாங்கம் ஒரு உத்தரவு பிறப்பித்தது எனில் அது மக்களின் நலனுக்கானது என்பதை முதலில் மக்கள் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம் . இதற்கு மாறாக மாற்று வழியிலேனும் தடைகளை மீறுதல் என்பது தவறான செயலாகும். எனவே பொறுப்புமிக்க பிரஜைகளாக நடந்துகொள்வதை இலங்கையர்கள் உறுதிசெய்துகொள்வது சாலச் சிறந்தது ஆகும்.