வருமானவரி செலுத்த தயாராகும் கனேடியர்கள் 

வருமானவரி செலுத்த தயாராகும் கனேடியர்கள் 

2017 ஆம் ஆண்டுக்கான வருமான வரிவிதிப்பின் அறிவுறுத்தல்கள்.

09/03/2018 | Views 472

அரச வரிகளின் மூலம் அதிகபட்ச நன்மைகளை அடையும் நாடுகளில் கனடாவும் முன்னிலையானது. நாட்டு மக்கள் வரி செலுத்தல் தொடர்பில் சரியான நிலைப்பாட்டை கொண்டிருப்பதன காரணமாக அவர்களுக்கு மீள் கிடைக்கப்படும் நன்மைகளும் அதிகம் என்பதுவும் அறியப்படக்கூடியதானது.

2017 ஆம் ஆண்டுக்கான வருமான வரி விதிப்பு தொடர்பில் கனேடிய அரச இணையத்தளமானது அறிவித்தல்களை வெளியிட்டுள்ளது.

அதன் வகையில் கட்டப்படவேண்டிய வரிப்பணத்தொகைகளை  எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னதாக செலுத்திவிடல் அவசியம் என கனேடிய அரசாங்கம் அறிவித்துள்ளது. 

அவ்வாறே சுயதொழில் புரிவோருக்கான காலக்கெடு ஜூன் மாதம் 15 வரை நீடிக்கப்பட்டும் இருப்பதை உறுதி செய்தது கனடிய அரச இணையத்தளம். எவ்வாறாயினும் குறிப்பிட்ட திகதிகளுக்கு முன்னர் நீங்கள் வரிப்பணத்தினை செலுத்தும் பட்சத்தில் வரி சலுகைகளை பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறியப்படுகின்றது.

வருமானத்தினை விரைவில் மீளப்பெற என்ன செய்யலாம்?

இம்முறை கனடிய வருவாய் முகவர் நிலையமானது மிகவும் வரி வருமான மீள செலுத்தல் நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாக கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனவே விரைவாக நீங்கள் செலுத்தும் வரிப்பணத்திற்கான வருமானங்கள் உங்களுக்கு மிகவிரைவில் கிடைக்கப்பட வாய்ப்புக்கள் அதிகம் என உறுதி செய்யப்பட்டு உள்ளது.

ஆயினும் வரிப்பணத்தினை மீளப்பெறுவதில் தாமதம் ஏற்படின் அது தங்களின் நிலுவைத்தொகை கட்டுப்பணங்களை முழுவதுமாக செலுத்தாத பட்சத்திலேயே ஏற்படும் என்பதை மனதில் கொள்க 

அவ்வாறே நீங்கள் பேரளவு வரிப்பணத்தை செலுத்தவிருக்கும் பட்சத்தில் எதிர்வரும் ஏப்ரல் 30  ஆம் திகதிக்கு முன்னர் பகுதிகளாக கட்டுப்பணம் செலுத்த தொடங்கிவிட்டால் உங்களு=இந்த வரிச்சுமை குறைக்கப்படும் என்பதை நினைவில் கொள்க.

இவ்வருடத்திற்கான சிறப்பியல்புகள் 

  • கல்வி மற்றும் பாடநூல் கடன் - ஜனவரி மாதம் 1 ஆம் திகதி முதல் நடைமுறையாகும் வகையில் கல்வி மற்றும் பாடநூல்களுக்கான  கடன் மீளப்பெறல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
  • குழந்தைகளுக்கானக்கடன் நிலைகள். - நடன வகுப்புகள் மற்றும் நீச்சல் வகுப்புக்களுக்காக பெற்றோரால் செலுத்தப்பட்ட வரிகள் தொடர்பான கடன்கள் விலக்கப்பட்டு உள்ளன. 
  • போக்குவரத்து வரி கடன் - சுரங்க போக்குவரத்து சீட்டுக்களுக்கான வரியை கடன்களை மீளப்பெறலாம்.

கடன் சலுகைக்களுக்கான புதிய நடைமுறைகள்.

  • பராமரிப்பாளர் கடன் சலுகைகள் - நோயாளர்களை பராமரிப்பது உறுதிசெய்யப்பட்டால் கடன் சலுகைகள் இலகுபடுத்தப்படும்.
  • ஊனமுற்றோர் கடன் சலுகைகள்  - சேவைகளை இலகுபடுத்தல் தொடர்பில் செவிலிய பயிற்சியாளர்களை கனேடிய சுகாதார நிருவாகம் உள்வாங்கியுள்ளது.இதன் காரணமாக ஊனமுற்றோர் தொடர்பிலான கடன் சலுகைகள் இலகுபடுத்தப்பட்டுள்ளது.
  • மருத்துவ செலவின கடன் சலுகைகள் -  மகப்பேற்று தொடர்பான கடன் வசதிகளை மீளப்பெறல் தொடர்பில் நடைமுறைகள் இலகுபடுத்தப்பட்டுள்ளதாக அறியப்படுத்தப்பட்டுள்ளதுஅவ்வாறே செயற்கை கருத்தரித்தல் தொடர்பிலான கடன் பெறல் இலகுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நன்றி : GOVERNMENT OF CANADA REVENUE AGENCY