மீண்டும் ஒரு மதக்கலவர நிலை இந்தியாவில் தோன்றும் அபாயம் 

மீண்டும் ஒரு மதக்கலவர நிலை இந்தியாவில் தோன்றும் அபாயம் 

ராமரின் பெயர் சொல்லிய ரத யாத்திரையும் தடை உத்தரவும் 

20/03/2018 | Views 1346

உலகின் தொன்மையான மத  கலாச்சாரங்களை கொண்ட நாடாக இந்தியா கருதப்படுகின்றது. பாரிய சனத்தொகை கொண்ட நாடு என்பதால் இன்னமும் பெயரறியா புதுப்புது மதங்கள், கொள்கைகள் என்பதுகூட தினம் தினம் உருவான நிலையில் மக்களிடையே இன துவேசங்கள், கலவரங்கள் என்பனவும் அதிகரிக்கத்த வண்ணமாகவே உள்ளது.

இன  மற்றும் மதங்களின் கொள்கைகளின் காரணமாக மக்கள் மிகவும் பின்தங்கிய முட்டாள்தனமான நம்பிக்கைகளை பின்பற்றுகின்றதனை இந்தியாவில் அதிகளவில் காணலாம், அவ்வாறே இவ்வகை மத நம்பிக்கைகளின் காரணமாக பாரிய அழிவுகளுக்கு முகம் கொடுத்த நாடுகளில் இந்தியாவுக்கு மிக முக்கிய பங்கும் உள்ளதனை  அறியலாம்.

  • அயோத்தியா வரலாறும் இந்து முஸ்லீம் இனக்கலவரமும்.

இந்துக்களின் வழிபாட்டு தெய்வங்களில் ஒருவரான ராமர் இந்தியாவின் மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அயோத்யா நகரில் பிறந்ததாக அறியப்படுகின்றது. இவருக்கு பல தசாப்தங்களுக்கு முன்னர் அவர் பிறந்த ஜென்ம பூமி என சொல்லப்படும் அயோத்தியில் கோயில் இருந்ததாக வரலாற்று தடயங்கள் உள்ளது என குறிப்பிடப்படுகின்றது. அதன் பின்னர் மொகலாய அரசர் பாபரின் படைத்தலைவர், இங்கிருந்த இராமர் கோயிலை இடித்துவிட்டு அதன் மேல் 1528 ஆண்டளவில் முஸ்லிம் மதத்தவர்களின் வழிபாட்டு தலமான தொழுகைப் பள்ளிவாசல் கட்டி அதற்கு பாப்ரி மசூதி என்று பெயர் சூட்டியதாக வரலாற்று தரவுகள் அறியத்தந்துள்ளன. இவ்விடம் 1528 முதல் 1853 வரை இஸ்லாம் மதத்தவர்களின்  தொழுகைப் பள்ளிவாசலாக இருந்தமை அறியப்படுகின்றது.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் மசூதிக்கு அருகில் இராமர் கோவில் ஒன்றைக் கட்ட வேண்டும் என்று குரல்கள் எழுந்தன. இந்திய விடுதலைக்குப் பிறகு 1948ல் மசூதி இருந்த இடம் பூட்டப்பட்டு 1989 வரை இந்த நிலை தொடர்ந்தது. ஆனால் 1949ல் ராமர் மற்றும் சீதையின் சிலைகள் பாபர் மசூதியினுள் ரகசியமாகக் கொண்டு போய் வைக்கப்பட்டன என்று சொல்லப்படுகின்றது.1980களில் இந்துத்துவ அமைப்புகள் அந்த இடத்தில் இராமருக்கு கோவில் கட்ட வேண்டும் என்று வலியுறுத்தத் தொடங்கின. இப்பிரச்சனை இந்தியாவின் மத்திய தேசிய கட்சியான பாரதீய ஜனதா கட்சியால் (பாஜக) அரசியல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தப்பட்டமை  அறியப்படுகின்றது.

1989ல் அலஹாபாத் நீதிமன்றம் இந்துக்களுக்கு அங்கு பூஜை செய்ய அனுமதி அளித்தது. இதனால் இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே மோதல்கள் நிகழத் தொடங்கின. மசூதியை இடித்து விட்டு அங்கு இராமருக்கு கோவில் கட்ட வேண்டுமென இந்திய சங் பரிவார் அமைப்புகள் நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தின. டிசம்பர் 6, 1992 அன்று கர சேவகர்கள் என்றழைக்கப்படும் இந்துத்துவ அமைப்பின் உறுப்பினர்கள் பாபர் மசூதியை இடித்து விட்டு அங்கு ஒரு சிறு கோவிலை கட்டினர். இதனால் நாடெங்கும் கலவரங்கள் மூண்டன. இந்த பிரச்சனை பாஜக கட்சியின் அரசியல் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்தது. பாபர் மசூதியின் இடிப்பு இன்று வரை இந்து-முஸ்லீம்களிடையே பல மோதல்களையும் சர்ச்சைகளையும் உருவாக்கி வருகிறது. 1993ல் இந்திய அரசு சர்ச்சைக்குரிய 67.7 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்திக் கொண்டது. தற்போது அந்த இடம் யாருக்கு சொந்தம் (அரசுக்கா, இந்துத்வ அமைப்புகளுக்கா அல்லது வக் போர்டு வாரியத்துக்கா), அங்கு யாருக்கு எதைக் கட்டும் உரிமையுள்ளது போன்ற பிரச்சனைகள் ஒரு முக்கிய வழக்காக உத்தர பிரதேச உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தன.

2010ம் ஆண்டு இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. சர்ச்சைக்குரிய இடம் ராமர் பிறந்த இடமே என்றும் இடிபட்ட பாபர் மசூதியின் கும்மட்டம் இருந்த இடம் தான் ராமரின் பிறந்த இடம் என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். சர்ச்சைக்குரிய நிலம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு ஒரு பகுதி ராம ஜன்ம பூமி இயக்கத்துக்கும் (சங் பரிவார் அமைப்பு), ஒரு பகுதி சுன்னி வக்பு வாரியத்துக்கும், மீதமுள்ள பகுதி நிர்மோஹி அகோரா என்ற இந்து அமைப்பிற்கும் வழங்கப்பட்டன. இந்த தீர்ப்பு சட்டத்தின் அடிப்படையில் அமையாமல், மத நம்பிக்கையின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இத்தீர்ப்பை எதிர்த்து இந்திய உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்போவதாக விஷ்வ இந்து பரிஷத், மற்றும் அகில இந்திய இஸ்லாமியத் தனிநபர்ச் சட்ட வாரியம் இரண்டும் அறிவித்தன. இந்து மகாசபை செய்த மேல் முறையீட்டு மனுவைப் ஆராய்ந்த உச்ச நீதிமன்றம், மே 2011ல் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளமை அறியப்படுகின்றது.

  • மீண்டும் துளிர்விட்டு இராமர் கோவில் விவகாரம்.

இந்தியாவின் தேசிய பிரச்சினையாகக்கருதப்படும் இந்த இராமர் கோவில் விவகாரத்தின் தீர்ப்பு இன்னுமிழுபறியான நிலையில் ராமர் கோயில் என்ற அஸ்திரத்தை கையில் எடுத்துக்கொண்டு மீண்டும் ராம ராஜ்ஜிய யாத்திரை என்ற தங்களுக்கு பலம் சேர்த்த பழைய ஆயுதத்தை மீண்டும் கையில் எடுத்துள்ளது விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு.

இந்தியாவின் வட  மாநிலமான மகாராஷ்டிராவின் அயோத்தியாவில் இருந்து தெற்கே தமிழக மாநிலத்தின் இராமேஸ்வரம் வரையில் மேற்குறிப்பிட்ட ரத்த யாத்திரை பயணிப்பதாக அறியப்படும் அதே நேரம் மீண்டும் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமருக்கு கோவில் கட்டுவதற்கென ஆதரவினை திரட்டும் நோக்கில் இந்த அமைப்பு செயல்படுவதாக குற்றம் சாட்டப்பட்டு வருகின்றது.

மதத்தின் போர்வையில் அரசியல் இலாபம் கருதும் சிலரின் செயலால் இந்த விவகாரம் பல்வகை ரீதியில் பிரச்சினைக்கு உட்படுத்தப்பட்டு வருவதனை அறியக்கூடியகாக இருக்கின்றது. தற்போது தென் தமிழகத்தை அடைந்துள்ள இந்த ரத்த யாத்திரையை எதிர்த்து இந்திய தமிழக ஆசியால் கட்சிகளும், பிரமுகர்களும் போராடி வருவத்துடை கைது நடவடிக்கைகளும் இடம்பெற்றதனை காணக்கூடியதாக உள்ளது.

தமிழகத்தில் இதுபோன்ற ரதயாத்திரைக்கு எந்த அரசும் அனுமதி அளித்தது இல்லை. இது மதவாத சக்திகளுக்கு இடம் இல்லாத மண். ஆனால், ஆளும் அ.தி.மு.க. அரசு இப்போது ரதயாத்திரைக்கு அனுமதி அளித்து தமிழகத்தில் மதகலவரத்துக்கு வழிவகுக்கிறது என மேற்படி ரத யாத்திரைக்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சிகள் ஒரே குரலில் வலியுறுத்தி தமது எதிர்ப்பினை காட்டுவதாக அறியப்படுகின்றது.

வடமாநிலங்களில் இந்துத்வாவின் பலமான அமைப்பாகவும், ஏற்கெனவே பாபர் மசூதி இடிக்கப்பட்டதில் முக்கிய பங்காற்றிய விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு ராம் ராஜ்ய யாத்திரை என்ற பெயரில் ரதயாத்திரையை அயோத்தியில் துவங்கியது. இந்த ரதயாத்திரையின் முக்கிய கோரிக்கையாக தற்போது வரை சர்ச்சைக்குரிய விசயமாக கருதப்படும் ராமர் கோயிலை கட்டுவதும், ராம ராஜ்ஜியத்தை அமைத்தல், உலக இந்து தினம் அனுசரித்தல், பள்ளி கல்வியில் ராமாயணத்தை கொண்டுவருதல் போன்ற வலுவான மதச்சார்புச் செயல்திட்டத்தை முன்வைத்து இந்த யாத்திரை துவக்கப்பட்டது என குற்றம் சாட்டப்படுவதனை அறியக்கூடியதாக உள்ளது. 

  • மதக்கிளர்ச்சியை தூண்டும்  ரத யாத்திரை.

இதே போன்று ரத யாத்திரையை முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இந்திய பாரதிய ஜனதா கட்சியின் அரசியல் பிரமுகர் அத்வானி குஜராத்தில் இருந்து அயோத்தி வரை நடத்திய முடிவால் கரசேவகர்களின் கரங்களால் பாபர் மசூதி இடிக்கபட்டது என அறியப்படுகின்றது. இந்திய மதசார்பின்மைக்கே அச்சுறுத்தலாகவும், இந்திய அரசியல் சாசனத்திற்கு சவாலாகவும்  அமைந்தது அந்த யாத்திரை என வரலாற்று தகவல்கள் தெரியப்படுத்துகின்றன. 

அத்வானி நடத்திய அந்த ரதயாத்திரை வடமாநிலங்களில் தாக்கத்தை உண்டுபண்ணியபோதும், தமிழகத்தில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.மேலும், இது போன்று எந்த ரதயாத்திரையும் தமிழகத்தில் நடப்பதற்கு இதுவரை ஆண்ட எந்த அரசாங்கமும், அரசியல் கட்சிகளும்  அனுமதிக்கவில்லை. ஆனால், முதல்முறையாக விஸ்வ ஹிந்து பரிஷத் நடத்தும் ரதயாத்திரைக்கு அ.தி.மு.க அரசு அனுமதி அளித்திருப்பதால் தான் இத்தனை எதிர்ப்புகள் கிளம்பியுள்ளதாக்க அறியப்படுகின்றது.

  • வடக்கின் தாக்கத்திற்கு தலைவணங்காத தமிழகம்.

இந்திய அரசியல் அமைப்பினதும் ஆட்சி முறைகளினதும் கட்டமைப்பை பொறுத்த வகையில் இந்தியாவை ஆளும் மத்திய அரசாங்கத்திடம் இருந்து தமிழக அரசங்களும் ஆட்சி முறைகளும் எப்போதும் தனித்து நின்றே செயல்பட்டு வந்தமை தெரிந்ததே. இதுவரை தென் தமிழகத்தை ஆண்டுவந்த அரசியல் கட்சிகளும், கட்சி தலைமைகளும் வடக்கு மத்திய அரசாங்கத்தின் தலையீடு இல்லாமல் தனித்த ராச்சியமாக் தமிழகத்தை முன்னோக்கி கொண்டு சென்றமை பலரது கண்களையும் உறுத்தும் செயலாக இருந்தமை அறியப்படும் உண்மை ஆகும்.

வடமாநிலங்களில் உள்ளது போன்ற மத உணர்வினால் பாதிக்கப்பட்ட பின் தங்கிய  சமூகமாக தமிழகம் இருந்ததில்லை. அந்த காரணத்தினால் தான் மதச்சார்பு கட்சியான பாரதியிய ஜனதா கட்சியினால் தமிழகத்தில் வலுவாக கால் ஊன்ற முடியாததற்கு காரணமாகவும் அமைந்துவிட்டது. ஆனால், தமிழகத்தில் இரண்டு திராவிட கட்சிகளின் தலைவர்களும் இல்லாத ஒரு வெற்றிடத்தை பார்த்த பிறகே இந்துத்வா அமைப்புகள் தமிழகத்தையும் தங்கள் கேந்திரமாக்க முடிவு எடுத்துள்ளார்கள் என்கிறார்கள் இந்த ரதயாத்திரைக்கு எதிரானவர்கள். 

  • திருநெல்வேலியில் அமலுக்கு வந்த 144 தடை உத்தரவு .

தமிழக எல்லைக்குள் இந்த ரதயாத்திரையை அனுமதிக்க கூடாது என்று தமிழக  அரசியல் பிரமுகர்கள்  சீமான், வேல்முருகன், வைகோ, திருமாவளவன், ஜவாஹிருல்லா, உள்ளிட்ட தலைவர்கள் செங்கோட்டையில் போராட்டம் நடத்த போவதாக அறிவித்தனர். இதனால் பதட்டம் உருவாகும் என்று கருதிய ஆட்சியாளர்கள் திருநெல்வேலி ஆட்சியர் மூலம் மூன்று நாட்களுக்கு திருநெல்வேலியில் 144 தடை உத்தரவை அமல்படுத்தியுள்ளார். சட்டசபையிலும் ரதயாத்திரைக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த நான்கு உறுப்பினர்களின் கோரிக்கை நிராகரிக்கபட்டதால்,அவர்கள் வெளிநடப்பும் செய்துள்ளார்கள் என இந்திய ஊடகங்களின் மூலம் அறியக்கூடியதாக உள்ளது.

  • கைது செய்யப்பட்ட அரசியல் பிரமுகர்கள். 

உச்சநீதிமன்றத்தில் ராமர் கோயில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது அதுவும் குறிப்பாக அந்த வழக்கு விசாரணையை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அரசியல் சாசன அமர்வு தற்போது நடத்திக் கொண்டிருக்கும்போது இப்படி நாடு முழுவதும் ராமர் கோயில் கட்ட ஆதரவு திரட்டுவதற்காக யாத்திரை நடத்துவது உச்சநீதிமன்ற அவமதிப்பு மட்டுமல்ல உச்சநீதிமன்றத்துக்கே அழுத்தம் கொடுக்கும் முயற்சியாகவே எண்ண வேண்டியதாக இருக்கிறது. எனவே இந்த ரதயாத்திரைக்கு தடைவிதிக்க வேண்டும் என தமிழக அரசியல் பிரமுகர்கள் வலியுறுத்தி வருகின்றனர் 

இந்த நிலையில் இடம்பெறும்  ரதயாத்திரைக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொள்ள செல்லும் அரசியல் தலைவர்களை தடுத்து நிறுத்தவும் தமிழக காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக்க அறியப்படுகின்றது. 

மேற்படி ரத்த யாத்திரையை தடுப்பதற்கென நடவடிக்கை எடுக்கும் ரீதியில்  செங்கோட்டை எனும் இடத்தில் போராட்டம் நிகழ்த்தவிருப்பதாக தமிழக அரசியல் பிரமுகர்கள் கூறி வந்தமை அறியப்படுகின்றது. இதன் காரணமாக செங்கோட்டையை  நோக்கி செல்ல இருந்த தமிழர் வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனை இரயில் நிலையத்தில் வைத்து கைது செய்த அதே நேரம், செங்கோட்டை நோக்கிக் காரில் பயணம் மேற்கொண்ட திருமாவளவனும் கைது செய்யப்பட்டுள்ளார் என அறியப்படுகின்றது.

அவ்வாறே நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானையும் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதே நேரம் தமிழக திராவிட முன்னேற்ற கழகத்தின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும் இதன்போது கைது செய்யப்பட்டமை அறியப்படுகின்றது 

தமிழகத்தில் சமூக நல்லிணக்கத்திற்கு சவாலாக இந்த யாத்திரை அமைந்துவிடுமோ என்ற அச்சமும் சிலருக்கு ஏற்படுள்ளது. சமீபத்தில் பெரியாருக்கு எதிரான கருத்துகள், ஆண்டாள் விவகாரம், என பல்வேறு மதபிரச்னைகள் தமிழக அரசியல் களத்தை சூடாக்கிவரும் நிலையில் இந்த ரதயாத்திரை அதற்கு உரமாகிவிடக்கூடாது என்றும் அரசியல் விமர்சகர்களின் கருத்து முன்மொழியப்பட்டு இருப்பதனை காணக்கூடியதாக உள்ளது.

  • கமலின் சாடலும் ஜெயக்குமாரின் கருத்தும். 

மேற்படி ராமராஜ்யம் ரத்தயாத்திரையினை கண்டித்து மக்கள் நீதி மய்யத்தின்  தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தனது சமூக வலைத்தள பதிவில் "சமூக நல்லிணக்கத்திற்காக எழும் நியாயமான குரல்களுக்கு 144 தடை உத்திரவு, கைது. அரசியல் நோக்கத்துடன்  மக்களைப் பிளவுபடுத்தும் ஊர்வலத்திற்கு அனுமதி. மக்கள் மனதைப் பிரதிபலிக்காமல், மாநிலமெங்கும் தேர்வு எழுதக்காத்திருக்கும் மாணவர்களையும் மதியாமல்  யாருக்கோ சாமரம் வீசுகிறது தமிழக அரசு." என்று கடுமையாக விமர்சித்து பதிவிட்டிருப்பதாக அறியப்படுகின்றது 

அவ்வாறே ''கேரளா, மகாராஷ்டிரா மற்றும் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலும் இந்த ரதயாத்திரை சென்றுவந்துள்ளது. அங்கு சென்றபோதெல்லாம் ஏன் இந்த ரதயாத்திரையை அனுமதித்தனர் என்ற கேள்வி கேட்கவில்லை. அவர்கள், அவர்கள் வழியில் போய்க்கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டிற்குள் நுழையும்போது மட்டும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுகிறோம் எனச் சொல்வது ஏற்புடையதாக இல்லை'' என அமைச்சர் ஜெயக்குமார் தமது கருத்தினை முன் வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது 

  • சாதாரண மக்களுக்கும் பாதிப்பு. 

செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், புளியங்குடி உள்ளிட்ட பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பொதுமக்கள் பலர் கைதுசெய்யப்பட்டதாக அறியப்படுகின்றது. கடையநல்லூர் பகுதியில், இஸ்லாமிய மக்கள் சொந்த வேலையாகச் சென்றால்கூட, கைதுசெய்யப்பட்டு வேனில் ஏற்றப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள் என ஊடக தகவல்கள் தெரிவித்துள்ளன. இந்த ரத யாத்திரை காரணமாக, நெல்லை மாவட்டத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் அறியப்படுகின்றன 

மத நல்லிணக்கத்தினை சீர் குலைக்கும் வகையில் இவ்வாறு அரசியல் இலாபம் தேடும் அரசியல் கட்சிகளும்  , அதன் பிரமுகர்களும் நடந்து கொள்ளும் செயல்களின் காரணமாக உண்மையில் பாதிக்கப்பட்டு இருப்பது சாதாரண பொது மக்கள் என்பதனை யாரும் உணர்ந்துல்கொள்ளவில்லை. எவ்வாறாயினும் தமிழகத்தின் நெல்லை மாவட்டத்தில் விதிக்கப்பட்ட 144 தடை உத்தரவானது அமைதி போக்கினை தவிர்த்து மேலும் இன கலவரத்தினையே தூண்டுவதற்கு வழி வகுக்கும் செயலாக அமைக்கப்பட்டு வருகின்றமை தெரியவருகின்றது.