பேஸ்புக் நிறுவனருக்கு ஏற்பட்ட தலைகுனிவு. 

பேஸ்புக் நிறுவனருக்கு ஏற்பட்ட தலைகுனிவு. 

தகவல்கள் திருடப்பட்ட பேஸ்புக்கும் இந்திய அரசியலும் காரணமா?.

22/03/2018 | Views 377

உலகளாவிய ரீதியில் முன்னிலை வகிக்கும் சமூக வலைத்தளமான பேஸ்புக் அதன் பயனர்களின் தனிப்பயன் கவரப்பட்டமையை ஒப்புக்கொண்டுள்ளது.மேற்படி முகநூலின் தனிப்பட்ட பயனர்களின் தரவுகள் முறைகேடாக பயன்படுத்தப்படுவதாக அதன் நிறுவுனர் மார்க் ஸுக்கர்பர்க் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளார்.

மேற்படி முறைகேட்டினை கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா (Cambridge Analytica) ஆய்வுக்குழு நிறுவனம் மேற்கொண்டிருப்பதாகவும், இதனால் 50 மில்லயனுக்கும் மேற்பட்டோரின் தனிப்பயனர் தரவுகள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டு இருப்பதாகவும் அவர் மேலும் தெரிசித்துள்ளார்.

  • யார் இந்த கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா?.

தரவு செயலாக்கம், தரவு தரகு மற்றும் தரவுப் பகுப்பாய்வு ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து செயல்படும் ஒரு தனியார் நிறுவனமாக கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா செயல்படுகின்றது . இந்த நிறுவனமானது 2013 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் பெற்றோலிய நிறுவனமான SCL குழுமத்தின் ஒரு பகுதியாக அமெரிக்க அரசியலில் பங்கேற்க உருவாக்கப்பட்டது. 2014 ஆம் ஆண்டில், 44 அமெரிக்க அரசியல் இனங்களுடன்  இந்நிறுவனம் தொடர்புபட்டது என அறியப்படுகின்றது.

இந்த நிறுவனம் பல அரசியல் பழமைவாத காரணங்களை ஆதரிக்கும் ஒரு அமெரிக்க ஹெட்ஜ்ஃபண்ட் மேலாளராக இருக்கும் ராபர்ட் மெர்சரின் குடும்பத்தினருக்கு சொந்தமானது என அறியப்படுகின்றது.இந்த நிறுவனம் லண்டன், நியூ யார்க் சிட்டி மற்றும் வாஷிங்டன், அலுவலகங்களில் செயல்படுகிறது.

  • அரசியல் ஆட்சியமைப்புக்கு உதவிடும்.

மேற்படி கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனமானது கடந்த 2015 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட டெட் குரூஸின் ஜனாதிபதி பிரச்சாரத்திற்கு ஆரம்பத்தில் வேலை செய்யும் தரவு பகுப்பாய்வு நிறுவனமாக அறியப்பட்டது. அவ்வாறே 2016 ஆம் ஆண்டு டொனால்ட் டிரம்ப்பின் ஜனாதிபதியின் பிரச்சாரத்தில்  தரகர்களாக இந்நிறுவனம் ஈடுபட்டதாகவும் அறியப்படுகின்றது.

  • முகநூல் தரவுகளை முறைகேடாக பயன்படுத்தியமை 

கடந்த வாரமளவில் தி நியூயார்க் டைம்ஸ் மற்றும்  தி கேம்பிரிட்ஜ் ஆகிய சஞ்சிகைகளில் முகநூல் பயனர்களின் தனிப்பட்ட அனுமதி இன்றி அவர்களது தரவுகளை இந்த கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் பயன்படுத்துயிருப்பதாக தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும் ஆய்வு நோக்கங்களுக்காகவே இந்த தரவுகள் பெறப்பட்டதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இது ஒரு புறம் இருக்க முகநூல் நிறுவனமானது இந்நிறுவன விளம்பரங்களை பேஸ்புக்  வலைத்தளத்தில் இருந்து தடை செய்தும் இருப்பதாக அறியத்தப்படுகின்றது.

எவ்வாறாயினும் இந்நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இவ்வாறு முகநூல் பயனர்களின் தரவுகளை முறைகேடாக பயன்படுத்துவது தொடர்பில் பேஸ்புக் நிறுவனமானது அறிந்து வைத்திருந்த போதிலும் அதுபற்றி எதுவித நடவடிக்கைகள் முன்னதாக எடுக்கப்படவில்லை எனவும் தி கார்டியன் சஞ்சிகையை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  • எவ்வாறு தகவல்கள் திருடப்பட்டன?.

பேஸ்புக்கின் தனிப்பயனார் விபரங்கள் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் களவாடியதாக குற்றம் சாட்டப்பட்ட போதிலும் இதனை கவர்ந்துகொள்ள பயன்படுத்திய யுக்தியானது பேஸ்புக்கின் மூலமாக அனுமதிக்கப்பட்ட செயலியின் மூலமே பெறப்பட்டதாக அறியப்படுகின்றது.

2014 ஆம் ஆண்டு பேஸ்புக்கின் மூலம் your Digital Life என்ற செயலியை இந்த நிறுவனம் உலவவிட்டது. அதன் மூலம் எமது தனிப்பட்ட விருப்பு மற்றும் தரவுகளை அந்தந்த  தனிப்பயணர்களின் மூலமே கேம்பிரிட்ஜ்  அனலிட்டிக்கா நிறுவனம் பெற்றுக்கொண்டதாக அறியப்படுகின்றது. இதில் பயனர்களின் தனிப்பட்ட பழக்க வழக்கங்கள் மற்றும் விருப்பங்களை சேகரித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த செயலியை போன்று பலவிதமான ஆயிரக்கணக்கான செயலிகள் பேஸ்புக்கில் உலா வருவது அறிந்ததே . ஆயினும் எமது தனிப்பட்ட தரவுகளை நம்பி பதிவேற்றுவதன் மூலம் பயனர்கள் ஏமாற்றப்படுவது குறித்து பொறுப்பு கூற வேண்டியது பேஸ்புக் நிறுவனமே ஆகும்.
 

  • இந்திய அரசியல் முறைகேட்டுக்கு  உதவியதா?.

கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் பல நாட்டு தேர்தல்களிலும் முறைகேடு செய்தது போல கடந்த இந்திய நாடாளுமன்ற தேர்தலிலும் முறைகேடு செய்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இந்தியாவின் முக்கிய கட்சிகளில் ஒன்றான  பாஜகவிற்கும் இந்த நிறுவனத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா என்ற நிறுவனம் 50 மில்லியன் பேஸ்புக் பயனாளர்களின் கணக்கில் இருக்கும் தகவல்களை முறையின்றி சோதனை செய்து திருடி இருக்கிறது. பேஸ்புக் நிறுவனம் அதன் பயனாளிகளிடம் எந்த அனுமதியும் கேட்காமலே இந்த சோதனைக்கு அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பேஸ்புக் பயனாளிகளின் விவரங்கள் அவர்களுக்கே தெரியாமல் எடுக்கப்பட்ட பிரச்சனை இப்போது பெரிதாகி இருக்கிறது. பலரும் பேஸ்புக் பாதுகாப்பானது இல்லை என்று குற்றச்சாட்டு வைத்து வருகிறார்கள். பாஜக வைத்த குற்றச்சாட்டு இந்த முறைகேட்டில் முதலில் பாஜக கட்சிதான் காங்கிரஸ் மீது குற்றச்சாட்டு வைத்தது. அதன்படி ராகுல் காந்தி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தை பிரபலப்படுத்த கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனத்தின் உதவியை நாடினார் என்று குறிப்பிட்டது. இதனடிப்படையில் பொய்யான புகழை அதன் மூலம் ராகுல் பெற்றார் என்றும் குற்றச்சாட்டு வைத்தது. 

 

இந்தியாவின் பாரதீஜா ஜனதா கட்சியின் முறைகேடு 

கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனத்தின் இந்திய கிளையான 'ஓவலேனோ பிசினஸ் இண்டலிஜென்ஸ்' (ovleno business intelligence) என்ற நிறுவனத்துடன் பாஜக கட்சிதான் தொடர்பில் இருந்துள்ளது என தகவல்கள் ஊடகங்களில் வெளியாகியுள்ளமை அறியப்படுகின்றது. இதை 'ஓவலேனோ பிசினஸ் இண்டலிஜென்ஸ்' நிறுவனத்தின் இந்திய நிறுவுனர்  ஒப்புக்கொண்டதும் பெரிய பிரச்சனை ஆகியுள்ளது. 


மோடிக்கும் பேஸ்புக்குக்கும் என்ன தொடர்பு?.

அமெரிக்காவில் இருக்கும் பேஸ்புக் தலைமையகம் சென்ற ஒரே இந்திய பிரதமர் பிரதமர் பாஜகவை சேர்ந்த மோடி மட்டுமே என தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. 2014 தேர்தலில் உதவியதற்கான நன்றிக் கடன்தான் இந்த சந்திப்பு என்று காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு வைத்து இருக்கிறது என இந்திய ஊடகங்கள்தகவல் தந்துள்ளன.

மேலும் இதில் நிறைய பணம் கைமாறி இருக்கலாம் என்றும் காங்கிரஸ் குற்றச்சாட்டு ஒன்றினை முன்வைத்தும் இருப்பதாக அறியப்படுகின்றது.


தாமாகவே மாட்டிக்கொண்ட கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா.

இதே சமயத்தில் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்காநிறுவனத்தின் இந்திய முகவர் நிறுவனமான   'ஓவலேனோ பிசினஸ் இண்டலிஜென்ஸ்' நிறுவனத்தின் 'லிங்க்டின் (LinkdIn)' பக்கத்தில் 4 முறை தேர்தலுக்கு உதவியதாக முக்கியமான தகவல் இருக்கிறது. அதில் நான்கு வெவ்வேறு தேர்தல்களில் பாஜக கட்சிக்காக நாங்கள் உதவி செய்தோம். அதன் மூலம் பாஜக கட்சி வெற்றி பெற்றது என்று அந்த நிறுவனம் வெளிப்படையாக குறிப்பிட்டு இருக்கிறது.அறியக்கூடியதாக உள்ளமை ஏற்கனவே இந்திய ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளமை தெரிகின்றது.

உண்மையில் நடந்தது என்ன?.

இந்திய தேர்தல்களின் போது ஓவலேனோ பிசினஸ் இண்டலிஜென்ஸ் நிறுவனம் மூலம் பாஜக இந்தியா முழுக்க பொய்யான செய்திகளை பரப்பியதாக கூறப்படுகிறது. மேலும் பொய்யான புள்ளி விவரங்களை கொடுத்து மக்களின் மனநிலையை மாற்றி உள்ளது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிறுவனத்துடன் பாரதீஜா ஜனதா கட்சியின் முக்கியஸ்தர் ராஜ்நாத் சிங்தான் அதிக நெருக்கமாக இருக்கிறார் என்று இந்திய ஊடகங்கள் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளமை அறியப்படுகின்றது.


எவ்வாறாயினும் பயனாளிகளின் தனிப்பட்ட விடயங்களை பாதுகாப்பது தொடர்பில் பேஸ்புக் நிறுவனம் நடவடிக்கை எடுக்கவிருப்பதாக அதன் நிறுவுனர் மார்க் ஸுகெர்பேர்க் உறுதியளித்திருப்பதை அறியமுடிகின்றது. பாதுகாப்பின்மை என்பது அறியப்பட்டான் நம்பிக்கை முறிவடையும் என்பதை வெளிப்படையாகவே தெரிவித்திருக்கும் ஸுக்கர்பர்க் இந்தவிடயம் தொடர்பில் முன்னமே அறிந்து வைத்திருந்தும் அதற்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்க தவறியது ஏன்?