இலங்கை மாணவர்களை அச்சுறுத்தும் தலசீமியா நோய். 

இலங்கை மாணவர்களை அச்சுறுத்தும் தலசீமியா நோய். 

பாடசாலை மட்டங்களில் நோய் பரிசோதனை  நடவடிக்கை 

24/03/2018 | Views 401

தினம் தினம் ஏதேனும் ஒரு புதிய வியாதியின் அறிமுகமும் அதன் தாக்கமும் குறித்து நாம் கேள்விப்பட்டு வருவது சாதாரண விடயமாகிவிட்டது. அதிலும் இலங்கை போன்ற வளர்முக நாடுகளில் அன்றாட உணவுக்கான செலவினை விட நோய்கள் கட்டுப்படுத்தும் மருந்துகளுக்கும், சிகிச்சை முறைகளுக்குமான செலவே அதிகமாக இருப்பதனை அறியக்கூடியதாக இருக்கின்றது.

பொதுவாக இலங்கை போன்ற வளர்முக நாடுகளை பொறுத்த வகையில் வயது வந்தவர்களை விட இளம் பிராயத்தினருக்கான பாதிப்புக்களும், நோய் காவுகைகளும் அதிகமாக இருப்பதனை அறியக்கூடியதாக  உள்ளது. இப்படியான பல்வகை நோய்கள் தொடர்பான விழிப்புணர்வுகளை சிறுவர்கள் மத்தியில் ஏற்படுத்தவும், நோய்கள் தொடர்பான பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை விழிப்புணர்வுகள் பாடசாலை மட்டத்தில் இருந்து இலவசமாக வழங்கப்பட இலங்கை சுகாதார அமைச்சு பலவகையான நடவடிக்கைகள்  எடுத்து வருவதை அறியக்கூடியதாக உள்ளது.

இவ்வாறு பாடசாலை மட்டங்களில் இருந்து சிறார்களை பாதுகாப்பதன பொருட்டு தடுப்பூசிகள், மருத்துவ முகாம் போன்ற விடயங்களை சுகாதார அமைச்சு  தொடர்ந்து வருவதையு அறியும் அதே நேரம் இதன் ஒரு கட்டமாக தலசீமியா நோய்க்கான பரிசோதனைகளை பாடசாலை மாணவர்களிடையே மேற்கொள்ளவிருப்பதாக இலங்கையின் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன ஊடகங்களுக்கு அறியத்தந்துள்ளார்.

தலசீமியா (Thalassemia) நோய் பற்றிய அறிதல் 

தலசீமியா என்பது பின்னடையும் தன்மையுள்ள மரபு சார்ந்த இரத்த நோய் ஆகும். தலசீமியாவில், மரபு குறைகள் ஹீமோகுளோபினைச் சேர்ந்த குளோபின் சங்கிலியின் குறைந்த சேர்க்கை வீதத்தால் ஏற்படுகிறது. ஒரு வகையான குளோபின் சங்கிலியின் குறைந்த சேர்கையால் இயற்கைக்கு மாறான மூலக்கூறுகள் ஏற்படுவதுக்கு வாய்ப்பு உண்டு. அதன் காரணமாக அனீமியா என்கிற தலசீமியாவின் தனித்தன்மை அறிகுறி உருவாகும்.

தலசீமியா என்பது சிறு வகை குளோபின்களின் சேர்கையின் அளவு குறித்த பிரச்சனை ஆகும். அதுவே சிகள் செல் அனீமியா என்பது தவறாக செயல் அளிக்கும் குளோபின்களின் தரம் குறித்த பிரச்சனை ஆகும். தலசீமியா பொதுவாக இயற்கையான குளோபின் புரதத்தின் குறைந்த உற்பத்தியை உருவாக்கும். அதுமட்டும் இல்லாமல் அது ஒழுங்கு முறை சீர்படுத்தும் மரபணுக்களால் ஏற்படலாம். ஹீமோகுளோபிநோபதீஸ் என்பது குளோபின் புரத சக்தியின் அசாதாரணமான அமைப்பைக் குறிக்கிறது. இரண்டு நிலையும் ஒன்று மற்றதன் மீது படிதல் ஆகும். இருப்பினும், சில நிலைகள் அசாதாரணமான குளோபின் புரத்தை உருவாக்கி அதன் உற்பத்தியையும் பாதிக்கும் (தலசீமியா). ஆகவே, சில தலசீமியாக்கள் ஹீமோகுளோபிநோபதீஸ் ஆகும், பல ஆகாது. இரண்டில் ஏதேனுமொன்று அல்லது இரண்டு நிலைகளும் அனீமியாவை ஏற்படுத்தும்.

இந்நோய் குறிப்பாக மத்திய தரைக்கடலில் வசிக்கும் மக்களின் இடையே காணப்படும். அத்துடன் இதுவே தலசீமியா என்ற பெயரை வைக்க ஒரு காரணம் ஆகும். கிரிக் மொழியில் தலசா என்பது கடல் என்றும் மற்றும் ஹீமாஎன்பது இரத்தம் என்றும் பொருள் ஆகும். ஐரோப்பாவில், அதிகளவில் இந்நோய் கிரீஸ் மற்றும் இத்தாலியின் சில பகுதிகளில் குறிப்பாக தெற்கு இத்தாலி மற்றும் போ என்ற பள்ளத்தாக்கில் காணப்படும். பெரும்பான்மையான மத்தியத் தரைக்கடல் தீவுகளில் (பலீரிக்ஸ் தவிர) சிசிலி, சர்டினியா, மாலதா, கோர்சிகா, சிப்ரஸ், மற்றும் கிரேட்பகுதிகள் அதிகளவில் பாதிக்கப்பட்டது. மத்திய தரைக்கடலின் மற்ற பகுதியை சேர்ந்த மக்கள், மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த மக்களில் தலசீமியா அதிகளவில் காணப்படுகிறது. அத்துடன் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் வட ஆப்ரிக்காவைச் சேர்ந்த மக்களிலும் இந்நோய் காணப்படுகிறது. மத்தியத் தரைக்கடல் பகுதியிலிருந்து அதிக தொலைவிலுள்ள தெற்கு ஆசியமக்களை இந்நோய் அதிகளவில் தாக்கி, உலகிலேயே மாலத்தீவுகள் என்ற பகுதியே இந்நோயால் மிக அதிகளவில் பாதிக்கப்பட்ட பகுதி என்ற பெயரை வாங்கியது.

அப்பகுதி மக்களிடையே மலேரியா அதிகளவில் காணப்படும். எனினும் தலசீமியாவால் மலேரியா வின் தாக்கம் அப்பகுதி மக்களில் குறைவாகவே காணப்பட்டது. இதுவே தேர்ந்தேடுகின்ற நிலைத்து இருத்தலுக்கு சாதகமாகிவிட்டது. இத்துடன் பல தலசீமியா மக்களில் ஹீமோகுளோபினை தாக்கக் கூடிய பரம்பரை நோய்கள் மற்றும் சிகள் செல் நோய்களும் காணப்பட்டது.

நோய்ப்பரவல். 

பொதுவாக, தலசீமியா ஈரபதம் தட்ப வெட்பநிலைக் கொண்ட இடங்களில் தென்படும். அதுவே மலேரியா பல இடங்களில் தோன்றி இருக்கும் நோய். இந்நோய் எல்லாவித மக்களையும் பாதிக்கும். ஆனால் தலசீமியா பாதித்த மக்களை மலேரியாவில் இருந்து காப்பாற்றியது ஏனென்றால் இந்நோய் சுலபமாய் இரத்த உயிரணுக்களைக் குறைகிறது.

தலசீமியா குறிப்பாக அரபு நாடு, ஆசிய நாடு மற்றும் மத்திய தரைக்கடல் பகுதிகளில் வசிக்கும் மக்களைச் சார்ந்த நோய் ஆகும். மாலத்தீவுகள் தான் உலகிலேயே அதிகளவில் தலசீமியாவால் பாதிக்கப்பட்டுள்ளது அதிக பட்சமாக 18% மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கணக்கிட்ட நிகழ்வுகள் 16% சைபிரஸ்ஸிலும் , 1% தாய்லாந்திலும், 3-8% பங்களாதேஷிலும்,சீனாவிலும், இந்தியாவிலும், மலேசியாவிலும் மற்றும் பாகிஸ்தானிலும் காணப்படுகிறது. இது போக லத்தின் அமெரிக்கமற்றும் மத்திய தரைக்கடல் நாடுகளில் ( கிரீஸ், இத்தாலி, போர்ச்சுக்கல், ஸ்பெயின், மற்றும் பல) இந்நோயின் நிகழ்வுகள் உண்டு. மிகக் குறைந்த ஆய்வரிக்கை வடக்கு ஐரோப்பாவிலும்(0.1%) ஆப்பிரிக்காவிலும்  (0.9%) மற்றும் மிக அதிகளவில் ஆய்வரிக்கை வட அப்ரிக்காவிலும் தென்பட்டது.

பலங்கால எகிப்தியர்களும் தளசீமியவால் அவதிப்பட்டுள்ளனர். அதிக பட்சமாக[சான்று தேவை]40% மம்மீக்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நாட்களில், குறிப்பாக தெற்கு எகிப்து அதாவது பீஜா, ஹடெண்டோவா, சைதி வாழும் மக்களிடையேயும், நாயில் டெல்டா, சிகப்பு கடல் மலை பகுதி மற்றும் சீவான் பகுதி மக்களிலும் இந்நோய் காணப்படுகிறது என அறியப்படுகின்றது.

நோய் வகைமையும் காரணிகளும். 

இயற்கையாக ஹீமோகுளோபின் இரண்டு வகை சங்கிலிகள் அல்பா  மற்றும் பீட்டா என்பனவற்றால்  உருவானது. தலசீமியா நோயாளிகளில் அல்பா  அல்லது பீட்டா குளோபின்களின் குறைபாடு தென்படுகிறது. ஆனால் சிக்கல் செல் அனீமியா நோயாளிகளில் பீட்டா  குளோபினின் குறைபாடே காணப்படுகிறது.

தலசீமியா ஹீமோகுளோபின் மூலக்கூருகளின் பாதிப்புகளைப் பொருத்து பிரிக்கப்பட்டுள்ளது. அல்பா  தலசீமியாவில், அல்பா  குளோபினின் உற்பத்தியைப் பாதிக்கிறது. அதே போல்பீட்டா  தலசீமியாவில், பீட்டா  குளோபினின் உற்பத்தியைப் பாதிக்கிறது.இத்தனையும் தவிர்த்து டெல்டா தலசீமியா எனப்படுவதும் மரபணு சார்ந்த நோயாக உள்ளமை அறியப்படுகின்றது.

சிகிச்சை முறை. 

தலசீமியா நோயின்  தாக்கம் ஆரம்ப நிலையில் உள்ள நோயாளிகளுக்கு பொதுவாக தனிமுறை சிகிச்சைகள் தேவைப்படாது. ஆனால் தலசீமியா நோய் முதிர்ச்சியான நிலையில்  உள்ள நோயாளிகளுக்கு நிடீத்த காலமான இரத்த ஏற்றுதல் பிணி நீக்கல், இரும்பு இடுக்கு இணைப்பு ,மண்ணீரல் அகற்றம் மற்றும் அல்லோஜெனிக் ஹீமொடோஃபாய்டிக் மாற்று (allogeneic hematopoietic stem cell transplantation) போன்ற சிகிச்சைகள் தேவைப்படும். 

இலங்கையில்  தலசீமியா சிகிச்சை முறைகள். 

இலங்கையில் தலசீமியா நோய்க்கான சிகிச்சைமுறை மற்றும் ஆய்வு தொடர்பில் 1995 ஆம் ஆண்டு குருநாகல் ஆதார வைத்தியசாலையில் வைத்தியர். சாந்திமாலா. டீ . சில்வாவின் முயற்சியின் பெயரில் கனடா, டொராண்டோவில் உள்ள ஒஸ்ப்போர்ட் பல்கலைக்கழக உதவியுடன்  ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகின்றது. 

அதன் பின்னர் இலங்கை சுகாதார அமைச்சின் ஏற்பாட்டின் கீழ் பிரதேச வாரியாகவும், பாடசாலை ரீதியிலும் இந்த நோய் தொடர்பான விழிப்புணர்வும், ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதனை அறியக்கூடியதாக உள்ளது.

இத அடுத்த கட்டமாக கண்டி ஆதார வைத்திய சாலையில் தலசீமியா சிகிச்சைப் பிரிவொன்று நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பிரிவிற்குரிய எட்டு மாடிக் கட்டடம் ஒன்று ஒக்டோபர் மாதம் திறந்து வைக்கப்படும் என்றும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன அறிவித்துள்ளார்.

நோயாளர்களின் பரவல். 

இதுவரை இலங்கை முழுவதிலுமுள்ள சுமார் 9 வைத்தியசாலைகளில் கணக்கெடுப்பின் படி 703 நோயாளிகளை இவ்வாறு இனம்கண்டிருப்பதாக  இலங்கை சுகாதார அமைச்சின் தகவல்கள் அறியப்படுகின்றது.

பொதுவாக சிறுவர்களையே  இந்த நோயின் பாதிப்பானது அதிகளவில் தாக்குவதாகவும், அதிலும் குருநாகல் பிரதேசத்திலேயே அதிகலவவிலான நோயாளிகள் இனம்காணப்பட்டுள்ளதாக அறியப்படுகின்றது.