பாரம்பரிய இலங்கையும் செட்டியார்களின் ஆளுமைகளும். 

பாரம்பரிய இலங்கையும் செட்டியார்களின் ஆளுமைகளும். 

இலங்கையில் இன்றும் காணப்படும் செட்டியார்களுக்கான  தனித்துவம். 

30/03/2018 | Views 378

இலங்கையிலுக்க சிங்களவர்களின் பெயர்களில் இன்றும் புள்ளே, பெருமாள், அலஸ், ஹெட்டி போன்ற சொற்பதங்களை நாம் இனம் கண்டிருப்போம். இவ்வாறு தமது பெயர்களில் கொண்டோர் தமிழ் பின்னணி உடையவர்களா இல்லையா என்பதில் பலருக்கும் குழப்பநிலை தோன்றியுள்ளதை அறிவோம். ஆரம்பகால சிங்கள இனத்தவர்களுடன் கலந்துவிட்ட, இலங்கையின் புராதன கலாச்சாரத்தில் பெரும் பங்காற்றியதில் செட்டிமார்கள் எவ்வாறு தமது பங்கினை கொண்டிருக்கிறார்கள் என்பதனை பார்ப்போம்.

மூவின மக்களும் ஒன்றித்தே வாழும் பேறினை கொண்டது இலங்கை திருநாடு. இலங்கை மக்கள் பலரது பெயர்களை வைத்து அவர்களை இனப்பாகுபாடு பிரிக்கமுடியாமை உள்ளது மிகவும் ஆரோக்கியமான வரவேற்கத்தக்க விடயம் ஆகும். 

இலங்கையில் வாழ்ந்த, வாழ்ந்துவரும் செட்டிமார்கள் இனமானது இன்றும் பழமை பேணும் தனித்துவ இனமாக கருதப்பட்டு வருவது அறியப்படுகின்றது. இன்று வாழ்கின்ற செட்டி இனத்தவர்கள்  இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர்களாக கருதப்பட்டு வருகின்றனர்.

புராதன பாரதத்தில் ஒவ்வொருவரும் செய்யும் தொழிலை அடிப்படையாகக் கொண்டு, அவர்களை குலங்களாகப் பிரிக்கும் போக்கு பரவலாக இருந்தது. செட்டியார்கள் பாரம்பரியமாகவே வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த, “தான வைஷ்ய” என்ற வியாபரக் குலத்துடன் தொடர்புடையவர்கள் ஆவர். ஆரம்ப காலத்தில் இந்தியாவின் வடக்குப் பகுதியைச் சேர்ந்த “கூக்” (Coog) மற்றும் வாரணாசி போன்ற பகுதிகளில் வாழ்ந்த இந்த வைஷ்ணவர்கள், பின்னர் ஏற்பட்ட முகலாய ஆக்கிரமிப்புக்கள் காரணமாக, தென்னிந்திய பகுதிகளுக்கு குடிபெயர்ந்துள்ளதாக்க வரலாற்று தகவல்கள் அறியப்படுகின்றன. இலங்கைக்கும், இந்தியாவுக்கும் ஆரம்ப காலம் முதல் இருந்துவந்த வியாபாரத் தொடர்புகள் காரணமாகத்தான், செட்டியார்கள் இலங்கையிலும் பரவியுள்ளதாக்க அறியப்படுகின்றது.

இந்தியாவை பொறுத்த வகையில் பிரபுக்கள் வகையறாவை சேர்ந்தவர்களாக அறியப்படுகின்றது. இன்றும் இந்திய பிராந்தியங்களில் பல்லாயிரக்கணக்கான செட்டிமார் குலத்தவர்கள் தமது பழமை மாறாமல் தமது குலத்தொழிலை மேற்கொண்ட வண்ணம் இருப்பதாக அறியப்படுகின்றது.

  • இலங்கையில் செட்டிமார்களின் வரலாற்றுப்பின்னணி 

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நடைபெற்ற வியாபார கொடுக்கல் வாங்கல்களில், செட்டியார்களின் மூதாதையர்கள் பெருமளவு பங்களிப்பு வழங்கியிருப்பர்என்று ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. குறிப்பாக, இலங்கை மற்றும் இந்திய பிராந்தியம் ஏகாதிபத்தியத்தின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த காலத்தில், பெருமளவு செட்டியார்கள், இலங்கைக்கு குடிபெயர்ந்து இங்கேயே குடியமர்ந்துள்ளனர். நம் நாட்டின் எழுத்து மூல வரலாற்றின்படி, போர்த்துக்கேயர் மற்றும் ஒல்லாந்தர் காலத்திலேயே, நம் நாட்டுக்கு பெருமளவு செட்டியார்கள் குடியேறியுள்ளனர். ஆனாலும், அதற்கு முன்பிருந்தே, அவர்கள் சிறு குழுக்களாக இலங்கையில் வாழ்ந்துவந்துள்ளதாக, சில வரலாற்று அறிக்கைகளில் நாம் காண முடியும்.

வரலாற்றின் அடிப்படையில் பார்க்கப்போனால் இந்தியாவில் இருந்து இலங்கை வந்த இலங்கையின் முதலாவது அரசன் விஜயனின் கலப்பகுதியிலேயே என்று அறியப்படுகின்றது. இளவரசர் விஜயன் இந்த நாட்டின் மன்னர் பதவியை பெற்றதன் பின்னர், அது குறித்து இந்தியாவுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது. பின்னர், மதுராபுரியில் ஆட்சி செலுத்திக்கொண்டிருந்த அவரது தந்தை, இலங்கை இராசதானியை நன்றாக நடத்திச் செல்வதற்கு உதவியாக, பல்வேறு குலங்களைச் சேர்ந்த பெருமளவிலனோரை இலங்கைக்கு அனுப்பினாராம். இவ்வாறு அனுப்பப்பட்டவர்களுள் “தான வைஷ்ய” அல்லது பிரபுக்கள் குலத்தைச் சேர்ந்த பெருமளவிலானோரும் இருந்துள்ளதாக்க வரலாற்று தரவுகள் தெரிவித்துள்ளன.

"இலங்கை வியாபார சமூகத்தின் முக்கியமான ஒரு பகுதியினராக செட்டியார்களை அறிமுகப்படுத்த முடியும். இவர்கள், புராண நாட்டார் கதைகளில் கூறப்படுகின்ற செட்டியார்கள் அல்லது பணக்கார வங்கியாளர்கள் மட்டுமன்றி, அரச மாளிகைகளுடன் மிகவும் நெருங்கிய தொடர்பை பேணியுள்ளவர்களும் ஆவர்" என வரலாற்றுப் பதிவுகள் கூறுகின்றன.

  • அத்துரு மித்துறு பாடல்.

நமக்கு முந்தைய தலைமுறை இலங்கையர்கள் தமது இளம் பிராயத்தில் பாடி மகிழ்ந்த  பாடல் "அத்துரு மித்துரு தமதி வத்துரு ராஜகப்புறு செட்டியோ"  என்பதை இன்றும் நினைவு கூறுவார்கள். இந்த பாடலில் குறிப்பிடப்படுவதன் அடிப்படையில் செட்டியார்களுக்கும் இலங்கை அரச மாளிகைகளுக்கும் இடையில் நிலவிய தொடர்பு நன்கு வெளிப்படுகின்றது.

  • தனித்துவ அங்கீகாரம் பெற்ற செட்டி குலத்தவர்கள். 

ஆங்கிலேயர்களின் காலத்தில் இருந்து கூட செட்டிமார்களுக்கான தனித்துவ அங்கீகாரம் வழங்கப்பட்டமை அறியப்படுகின்றது.இதன் சான்றாக 1814 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் மேற்கொண்ட முதலாவது சனத்தொகை கணக்கெடுப்பின்போதே செட்டியார்கள் இலங்கையில் வாழ்கின்ற ஒரு தனித்துவமான இனத்தரவாக அங்கீகரிக்கப்பட்டதாக்க வரலாற்று குறிப்புகள் தெரியப்படுத்துகின்றன. இந்த சட்ட அங்கீகாரம் 1871 ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணக்கெடுப்பு வரை நீடித்தது. ஆனாலும், பின்னர் அவர்கள் சிங்கள, தமிழ் அல்லது பறங்கிய இனத்தைச் சேர்ந்த ஒரு பகுதியினராகவே கொள்ளப்பட்டனர் என அறியப்படுகின்றது.

இவ்வாறு 100 வருடங்களுக்கும் மேற்பட்ட காலம், ஒரு தனித்துவமான இனத்தவர்களாக செட்டியார்கள் வாழ்ந்தனர். இந்த நிலையில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவருவதற்கு, இலங்கை செட்டியார் சங்கத்தின் பொதுச் செயலாளர் சர்லி புள்ளே திசேராவுக்கு முடியுமாக இருந்தது. 1984 ஆம் ஆண்டில் அவர் இலங்கை ஆட்சி எந்திரத்தில் இணைந்ததும், செட்டியார்கள் மீண்டும் ஒரு தனித்துவ சமூகமாக அங்கீகரிக்கப்பட்டனர். அதன்படி, 2001 இல் மேற்கொள்ளப்பட்ட சனத்தொகைக் கணக்கெடுப்பு முதல், செட்டியார்கள் ஒரு தனித்துவ இனத்தினராக கணிக்கப்பட்டமாய் குறிப்பிடத்தக்கது.

  • செட்டிமார்களின் சமூகப்பணி. 

இலங்கையில் உள்ள ஏனைய இனத்தினருடன் ஒப்பிடும் பொது செட்டிமார்களின் அளவு மிகவும் சொற்பமானது ஆகும். இலங்கையின் சனத்தொகையில் 1% சதவீதத்திற்கு குறைவானவர்களே செட்டிமார்களாக காணப்பட்டனர்.எவ்வாறாயினும் இவர்களின் பங்களிப்பானது மிகவும் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.

புராதண காலம் முதல் அவர்கள் இலங்கையின் வியாபரத் துறையில் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளனர்.இலங்கைக்கு  தேவையான பொருட்களை இறக்குமதி செய்வதற்கும்,  உற்பத்திகளை ஏற்றுமதி செய்வதற்கும் அவர்கள் பெரும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாக்க அறியப்படுகின்றது. பாரம்பரிய பொருட்களைப் போன்றே, புதிய பொருட்களையும் நமது நாட்டு சந்தைக்கு அறிமுகப்படுத்துவதிலும், அவர்கள் முன்னணியில் நின்று செயற்பட்டுள்ளனர். எனவே, செட்டியார் சமூகத்தை, நீண்ட காலமாக நம் நாட்டின் சமூக, பொருளாதார அபிவிருத்திக்காக முக்கியமானதொரு பொறுப்பை நிறைவேற்றிய சமூகமாக அறிமுகப்படுத்தலாம்.

இவ்வாறு வரலாற்றில் முக்கிய இடம்பிடித்த செட்டிமார்களின் விபரங்கள். 

  • ஆர்.ஐ. பெர்னாண்டோ புள்ளே - தென்னை பயிர் செய்கை அபிவிருத்திக்காக, பெரும் பங்களிப்பை வழங்கியவர்.
  • தேசபந்து ரெஜீ கந்தப்பா - Grant McCann Erickson நிறுவன ஸ்தாபகத்திற்கு பங்காற்றியவர்.
  • சைமன் காசி செட்டி -இலங்கையின் முதலாவது தேசிய சிவில் பணியாளராக நியமனம் பெற்ற இவர், இலங்கையின் அரசியலமைப்பு சபைக்கு அவர் 1845 இல் நியமிக்கப்பட்டார்.
  • ஜே.ஆர். ஜயவர்தன - இலங்கையின்  முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி

 

  • வணக்கஸ்தலங்களுக்கு முக்கியத்துவம் அளித்த செட்டிமார்கள். 

பெரும்பாலும் கிறிஸ்தவர்களாக இருந்த செட்டியார்கள், இலங்கை முழுவதிலும் இருந்த கிறிஸ்தவ தேவலாயங்கள் பலவற்றிலும் நிதி விவகாரங்கள், மற்றும் மத விவகாரங்களை மேற்கொள்ளும் பணிகளுக்குப் பொறுப்பாக இருந்தனர். ஏகாதிபத்திய காலத்துக்கு முன்னர் போலவே, அதற்குப் பின்னரும் இந்நிலையில் மாற்றங்கள் ஏற்படவில்லை. இவற்றில் சில பிரதான தேவலாயங்களாக கொழும்பு 13 இல் அமைந்துள்ள தோல ரோசா அன்னையின் தேவாலயம், ஜிந்துப்பிடி புனித தோமஸ் தேவாலயம், கொழும்பு 12 இல் அமைந்துள்ள புனித மேரி தேவாலயம் மற்றும், மஹியங்கனை புனித பிலிப் நேரிஸ் தேவாலயம் என்பவற்றை குறிப்பிடலாம்.

இலங்கையில் அதிகமானோர் பின்பற்றுகின்ற பௌத்த மதத்தின் முன்னேற்றத்திற்காகவும், செட்டியார்கள் பெரும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர். கி.மு 3 ஆம் நூற்றாண்டில் பௌத்த மதம் அறிமுகப்படுத்தப்பட்ட காலம் முதல், அவர்கள் அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளனர்.வரலாற்று படி, இலங்கைக்கு ஸ்ரீமஹா போதி கிளையை கொண்டுவரும்போது, அங்கு பாதுகாப்புக்குப் பொறுப்பாக இருந்தவர்களில், செட்டியார்களின் முன்னோர்களான “தான வைணவர்களும்” இருந்துள்ளனர். சமீப காலத்தில் இலங்கையில் இருந்த ஒரு கீர்திமிகு பௌத்த தேரரான, சோம தேரரும், சாதாரண வாழ்வில் ஒரு செட்டியாராவார். அவரது பெயர் “எம்மானுவல் பெரேரா புள்ளே” என்பதாகும். பௌத்த மதத்தின் முன்னேற்றத்திற்காக 30 இற்கும் மேற்பட்ட புத்தகங்களை அவர் எழுதியுள்ளார்.

இன்னுமொரு முக்கியமானவரும் உள்ளார். அவரது பெயா சேர் கிறிஸ்டோபர் ஒன்டச்சி (Sir Christopher Ondaatje) என்பவராகும். இப்போது கனடாவில் வாழ்கின்ற அவர், இலங்கையில் பிறந்த ஒரு செட்டியாராவார். பெரும் கொடை வள்ளலான அவர் 2003 ஆம் ஆண்டில், பெரிய பிரித்தானியாவின் இரண்டாவது எலிசபெத் இராணியிடமிருந்து நைட் விருதும் பெற்றார்.

அவரின் சகோதரரான மைகல் ஒன்டச்சி, உலகப் புகழ்பெற்ற ஒரு இலங்கை எழுத்தாளராவார். இலங்கையின் ஆங்கில வாசகர்கள் பலருக்கும் அவரது பெயரைக்கூறினாலே, அவரைத் தெரியும் என்பதில் எதுவித சந்தேகமும் இல்லை. அவர் எழுதிய “The English Patient  –  ஆங்கில நோயாளி” என்ற நூலுக்கு, புகழ்பெற்ற “Booker” விருதும் கிடைத்தது. அந்த நூலை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட உலக திரைப்படத்துக்கு அகடமி விருதும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

உயரடுக்கு வியாபார சமூகமாக ஆரம்பித்த செட்டியார்கள், இன்று வரையிலும் இலங்கை சமூகத்தில் முக்கிய பதவிகளில் உள்ளனர். ஏனைய இனக்குழுமங்களுடன் மேற்கொள்ளப்பட்ட திருமணம் போன்ற விடயங்களால், அவர்களின் தனித்துவம் ஓரளவு சிதைந்து போயுள்ளபோதும், அவர்கள் இன்றும் இலங்கை சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட, ஒரு தனித்துவமான இனத்தவர்களாவர். தனித்து விளங்குவதற்கு முயற்சிக்காதபோதும், அவர்கள் இன்றும் நமது தேசிய சமூகத்தில் ஒரு முக்கியமான பகுதியினர் என்பது அறியப்படும் உண்மை ஆகும்.