பரத நாட்டியமும் பாலின வேறுபாடும்.

பரத நாட்டியமும் பாலின வேறுபாடும்.

17/04/2018 | Views 505

ஆடல் கலைகளில் பரதநாட்டியம் என்பது பலராலும் விரும்பப்படும் பழமை வாய்ந்த நடன முறை ஆகும். இது ஆடுபவர்களை மட்டுமல்ல காண்பவரையும் கவரும் வகையில் அமைந்ததுவே இந்த நடன முறையின் சிறப்பு ஆகும்.

பொதுவாக பிற நடன முறைகள் என்பன ஆண் பெண் இரு பாலருக்கும் பொதுவாகவே இருப்பது காணக்கூடியதாக உள்ளது. ஆனால் பரதநாட்டியம் பெரும்பாலும் பாலின வேறுபாட்டிற்கு ஏற்ப வகைபிரிந்து காணப்படுவதே இதற்க்கு உண்டான தனித்துவ சிறப்பு ஆகும். அவ்வாறே பெண்களும், ஆண்களும் அவர்களுக்கு ஏற்ப இந்த நடனத்தினை இலகுவாக ஆடுவதற்கென இந்த பாலின பாகுபாடு இருக்கின்றமை அறியப்படக்கூடியதாக உள்ளது.

பரதநாட்டியத்தில் வரலாறும் கலாச்சார பின்னணியும். 

உலக  பாரம்பரியங்களில் மிகவும் தொன்மையானது தமிழ் மொழி என அண்மைய ஆய்வுகளின் மூலம் அறியப்படுகின்றது. அதுபோலவே பல்வேறு தொன்மையான கலைகள் உலகின் காணப்பட்டாலும் அவற்றில் மிகவும் சிறப்பு வாய்ந்ததும், மிகவும் பழமையானதுமான தெய்வீக கலையாக கருதப்படும் கலைகளில் பாரத நாட்டியம் முதலிடம் பெறுகின்றது.

பரத நாட்டியம் - பெயருக்கான விளக்கம்.

இத மரபுவழி நடன முறையானது தென் இந்திய கலாச்சார பின்னணியை கொண்டதாக வரலாற்று சான்றுகள் கூறுகின்றன. இந்திய துணைக்கண்டத்தில் தோன்றியதாக கூறப்படும் இந்த நடன முறைக்கு "பரதம்" என்ற பெயர் வர சில சிறப்பு காரணிகள் கூறப்படுகின்றது. இந்த நடன முறை பாரத நாட்டி தோன்றிய காரணத்தினால் இதற்கு பரதம் என்ற பெயர் வந்ததாகவும், இந்த நடன முறையில் "பாவம்" ( அசைவுகளின் வெளிப்பாடு), "ராகம்" (இசை), "தாளம்" (அதிர்வு) என்ற மூன்று விடயங்களும் இணைந்துள்ளமையாலும் இதற்கு பரதம் என்ற நாமகரணம் வந்ததாகவும், அத்துடன் இந்த நடன முறைமையினை பரத முனிவர் என்பவர் கண்டறிந்து இயற்றியதாகவும் கூறப்படுவதால் இதற்கு பரத நாட்டியம் என்ற பெயர் வந்ததாகவும் வரலாற்று தகவல்கள் மூலம் அறியப்படுகின்றது 

வரலாறும் பின்னணியும்.

இந்தியாவின் பழமையான ஆடல்வகைகள் பல உண்டு. மணிப்புரி, ஒடிசி, குச்சுப்புடி என ஒவ்வொரு பிரதேச கலை மரபுகளுக்கு ஏற்ப ஒவ்வொரு விதமான நடன முறைகளை இந்தியாவில் உருவானதாக அறியலாம். அவற்றுள் மிகவும் தொன்மையான நடன முறைமை இந்த பரதநாட்டியம். இந்த கலை வடிவம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் உருவாகியதாக அறியப்படுகின்றது. கூத்து, ஆடல், நாட்டியம், தாசி ஆட்டம், சின்னமேளம், சதிர் எனப் பல பெயர்களில் இந்த நடனக்கலை அழைக்கப்பட்டு வந்தது. தற்போதான நூற்றாண்டு காலமாக இந்த நடனக்கலை பரதநாட்டியம் என்று பெயர் பெற்று பருகின்றதாக அறியப்படுகின்றது.

தேவதாசிகளின் பாரம்பரிய நடனம்.

பண்டைய தமிழகத்தில் கோவில்களில் பணிபுரிவதற்கென பரம்பரை பரம்பரையாக சேவை செய்யும் இனப்பெண்களை தேவதாசிகள் என அழைப்பர். இவர்கள் மரபுவழியாக கற்றுவந்த கலைப்படைப்பான "சதிராட்டம்" பின்னர் நெறிப்படுத்தப்பட்டு பரதநாட்டியமாக ஆடப்பட்டு வருவதாகவுக்கும் அறியப்படுகின்றது. இந்த முறையில் முகபாவனைகள், மற்றும் அனைத்து உணர்ச்சிகளின் வெளிப்படுத்தல்களும் மிகவும் சிறப்பாக வெளிக்காட்டப்படுவதை அறியலாம்.

நாட்டியத்தின் இசை மரபு. 

பரத நாட்டியத்திற்கு பாடல், நட்டுவாங்கம், மற்றும் இசைக்கருவிகளின் துணை தேவை. வீணை, புல்லாங்குழல், வயலின், மிருதங்கம் ஆகிய இசைக்கருவிகள் இவற்றில் சில. இசைக்கலைஞர்கள் மேடையின் ஒருபுறமாக அமர்ந்து இசைக்க, நடனம் ஆடுபவர் மேடையின் மையப்பகுதியில் ஆடுவார். நடனம் ஆடுபவர், நாட்டியத்திற்காக பிரத்யேகமாக தைக்கப்பட்ட வண்ணப் பட்டாடைகள் அணிந்து இருப்பார். மேலும் பரத நாட்டியத்திற்கான நகைகளையும், காலில் சலங்கையும் அணிந்திருப்பார். 

 

பெண்களுக்கான தனித்துவமா? பாலின சமத்துவமா?

பெரும்பாலும் பரதநாட்டியத்தினை பண்டைய காலம் தொட்டு பெண்களே ஆடி வருவதனை அறியக்கூடியதாக இருந்த போதிலும் இதனால் ஆடுவதற்கு ஆண்கள் பேரளவில் குறைவானவர்களே காணப்படுகின்றனர். இதற்கான காரணம் இந்த ஆடல் முறையில் பெரும்பாலும் பெண்களுக்கே உரித்தான மென்மையான நளினங்கள், முக பாவனைகள், மிகவும் மென்மையான அசைவுகள் என்பனவே பெரும்பாலும் காணப்படுவதே ஆகும். எனவே ஆண்கள் இந்த நடனத்தினை ஆடும்பொழுது இயல்பாகவே அவர்களுக்கு பெண்களைப்போன்ற நளினமும், பாவனைகளும் வந்துவிடுகின்றமையே இதற்கான காரணமாக கருதப்படுகின்றது.

பாலின அடிப்படையில் பிரிவுபட்ட பரதநாட்டியம்.

பரதநாட்டியம்  இரண்டுவகையாக ஆடப்படுகிறது.  லாஸ்யம். இது பெண்கள் ஆடும் நடனமாக கருதப்படுகின்றது இந்துக்களின் கடவுள்களான சிவன் மற்றும் பார்வதி ஆகியோர் ஆடிய நடனங்கள் பாலின ரீதியில் பெண்களுக்கு லாஷயமாகவும், சிவன் ஆடிய தாண்டவம் ஆண்களுக்கு உரியதாகவும் கருதப்படுகின்றது. இதில் லாஷ்யம்  என்பது மென்மையான அசைவுகளை கொண்ட நடனமாக ஆடப்படுகிறது.

தாண்டவமும் வகைகளும் 

ஆண்களுக்கே சிறப்பான நடன வகை தாண்டவம் ஆகும். இந்துக்களின் கடவுளான சிவபெருமானின் ஒரு வடிவமான நடராஜரால் இந்த நடன முறை தோற்றுவிக்கப்பட்டதாக வழிவந்த கதைகள் கூறுகின்றன. அதன் பின்னர் தண்டு முனிவருக்கும் , பரத முனிவருக்கும் இந்த முறை நடராஜப்பெருமானால் கற்பிக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

நடராஜப்பெருமானின் ஒவ்வொரு உணர்வு வெளிப்படுத்தலுக்கும் அமைவாக அடிப்படையாக   தாண்டவங்கள் வகைப்படுத்தப்பட்டு உள்ளமை அறியப்படுகின்றது. இது படைத்தல் , காத்தல் , அழித்தல், அருளல், மறைத்தல் ஆகிய ஐந்தொழில்களின் வெளிப்பாடாகவே இந்த தாண்டவ முறை அமைவதாக கூறப்படுகின்றது.

ஆனந்த தாண்டவம்
அசபா தாண்டவம்
ஞானசுந்தர தாண்டவம்
ஊர்த்தவ தாண்டவம்
பிரம தாண்டவம்
 

 

பரதநாட்டியத்தில் பாலின பாகுபாடு 

நாட்டியத்திற்குப் பாலினம் ஒன்றும் முக்கியமானதல்ல. ஒரு காலகட்டத்தில் நாட்டியம் பெண்களுக்கானது என்று முத்திரை குத்தப்பட்டது. சிருங்கார பரதத்தில் எங்கேயும் நாட்டியம் ஆணுக்கானது என்றோ பெண்ணுக்கானது என்றோ கூறப்பட்டிருக்கவில்லை. அது கூடுதலாக ஆண் தன்மையோ கூடுதலாகப் பெண் தன்மையோ கொண்டதல்ல. நிறைய பையன்கள் இந்தக் கலையை கற்றுக் கொள்வதற்கு நன்றி சொல்ல வேண்டும். நமது காலத்தில் கதக், கதகளி, ஒடிசி போன்ற நாட்டியக் கலை வடிவங்கள் அனைத்தும் ஆண்களால் நிரப்பப்பட்ட வேண்டும்.

தற்காலத்தில் பரதநாட்டியமும், மோகினியாட்டமும் தான் பெண்களுக்கான நாட்டியமாகிவிட்டன. முற்கால நட்டுவனார்கள் எல்லோரும் ஆண்கள் தான். அவர்கள் வியக்கத்தக்கவகையில் உடல் அசைவுகளையும் அபிநயங்களையும் பெற்றிருந்தனர். சமூக அழுத்தங்கள் காரணமாக அவர்களால் பொதுவெளியில் நாட்டியம் ஆடமுடியவில்லை. எனவே பாலின ரீதியில் பரதநாட்டியம் பல்வேறு  முரண்களை சந்திப்பதை யாராலும் மறுத்துவிட முடிவதில்லை.