சமூக வலைத்தளங்களின் மூலம் உங்கள் வாடிக்கையாளர்களை இணைத்திடுங்கள் 

சமூக வலைத்தளங்களின் மூலம் உங்கள் வாடிக்கையாளர்களை இணைத்திடுங்கள் 

வணிக மேம்படுத்தல்களுக்கான சிறந்த மூலோபாயம் சமூக வலைத்தளங்கள் ஆகும்

04/05/2018 | Views 291

ஆரம்ப காலத்தில் இணையத்தளம் வாயிலாக வியாபாரங்களை மேற்கொள்ளுவது என்பது மிகவும் கடினமான விடயமாகவே இருந்தது. காலப்போக்கில் இணையம் இன்றிய வியாபாரம் செல்லுபடியற்றதாக மாறி விட்டது. தற்காலத்தில் சமூக வலைத்தளங்களின் மூலமே பல முன்னணி நிறுவனங்கள் தமது வணிக முன்னெடுப்புக்களை வெற்றிகரமாக செய்து வருகின்றது என்பதை அறிந்து கொள்ளலாம்.

திறமையான சமூக ஊடக மூலோபாயம் ஏதேனும் தொடக்க அல்லது வியாபாரத்திற்கு பெரும் உதவியாக இருக்கும் என்பதை மறுப்பதற்கு இல்லை. இவ்வாறான சமூக வலைத்தள மூலோபாயங்களை எவ்வாறு வணிக நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவது? எவ்வாறு ஆரம்பிப்பது என்பது குறித்து பலருக்கும் தெரியாமலேயே இருக்கும். வணிக முன்னேற்றத்திற்கும், வாடிக்கையாளர்களை தக்கவைத்து கொள்வதற்கும் சமூக வலைத்தள மூலோபாயங்களை எவ்வாறு கையாளலாம் என பார்ப்போம்.

பதிவுகளை  அட்டவணைப்படுத்துங்கள்.

வணிக முயற்சியாளர்கள் மற்றும் தொழில் முனைவோர் எப்போதுமே மிகவும் ஒய்வின்றிய நிலையிலேயே இருப்பார்கள். அவர்களது வேலைப்பளு மத்தியில் சமூக வலைத்தளங்களை பார்ப்பது, பதிவிடுவது போன்ற விடயங்கள் மேற்கொள்வதற்கு நேரமின்மை என்ற குற்றச்சாட்டு எப்போதுமே முன்வைக்கப்படுவது இயல்பு. இதனை தவிர்த்துக்கொள்வதற்கு நீங்கள் செய்யவேண்டியது இதுதான். நீங்கள் பதிவிடவேண்டிய விடயங்களை முன்கூட்டியே அட்டவணைப்படுத்திக்கொள்வது சிறந்த உபாயம் ஆகும். அதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு உரிய நேரத்தில் எமது வணிக வெளியீடுகள் பகிரப்படும். உரிய நேரத்தில் வாடிக்கையாளரை சென்றடையாத எந்தவொரு பொருளும் சரியான வணிக வெற்றிக்கு உதவிடாது.

நிலையான பதிதல்களை பராமரித்திடுங்கள் 

சமூகவலைத்தளங்களில் எப்படி , எந்த நேரத்தில் பதிவேற்றுவது என்பது மாத்திரம் முக்கியத்துவம் பெறுவது இல்லை. மாறாக எவற்றினை பகிர்கிறோம் என்பது தொடர்பில் கரிசனை காட்டுதல் நன்று . நீங்கள் பகிரும் விடயங்கள் தொடர்பில் நிலையான உள்ளடக்கத்தினையும்,  அடிப்படை மூலம் ஒன்றினையும் நிலையாக பராமரித்து கொள்வது சிறந்த பெறுபேற்றினை தரும்.

உங்கள் வியாபாரக்குறி தொடர்பில் ஆளுமை கொள்ளுங்கள் 

எவ்வகை வணிகமாகினும் உங்களின் வியாபாரக்குறியினை மேம்படுத்துவதனையே அடிப்படை விடயமாக வைத்து உங்களின் தர மேம்படுத்துதல்களை மேற்கொள்ள வேண்டும். வணிகநிலையில் வியாபாரக்குறியினை நிலைபெற செய்துவிட்டால் வாடிக்கையாளர்களின் வருகை என்பது தன்னிச்சையாகவே மேம்படும் என்பது எழுதப்படாத விதி ஆகும். எனவே சமூக வலைத்தள பதிவிடல்கள் மற்றும் மேம்படுத்தல்கள் ஒவ்வொன்றின் போதும் அடிப்படை அம்சம் உங்கள் வியாபாரக்குறி மேம்படுத்தல் என்பதனை மறந்துவிட கூடாது. அவ்வாறே அனைத்துவித ஆளுமைத்திறன்களையும் அந்த வியாபாரக்குறி மேம்படுத்தலுக்கென்றே நீங்கள் மேற்கொள்வது  தரமான சந்தைப்படுத்தல் யுக்தியாக கருதப்படும்.

உள்ளடக்கமே அரசனை போன்றது. 

சமூக வலைத்தளங்களில் பதிவிடுதல் எனும்போது அதில் அடிப்படையான விடயம் என்பது உள்ளடக்கம் ஆகும். தரப்படுத்தல் எனும்போது சமூக வலைத்தளங்களின் சாதகமானதும் பாதகமானதும் வெளிப்படுதலை கொண்டிருக்கும். அதனை சரியான முறையில் வடிவமைத்தல் என்பது எமது உள்ளடக்கத்தில் நாம் கொள்ளும் கரிசனையுடன் மட்டுமன்றி அதனை திட்டமிடுதலில் முக்கியத்துவம் பெறுகின்றது.

தேர்வாளர்களாக மாறுங்கள்.

குறிப்பிட்ட நேரம் மற்றும் வளங்களை சரியாகப் பயன்படுத்துவதன் மூலம் தரமான உள்ளடக்கத்தினை நாம் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றலாம். அதன்மூலம் சரளமாகவே வாடிக்கையாளர்களின் மனங்களை வெல்லலாம். மாறாக ஒவ்வொரு தடவையும் வாடிக்கையாளர்களை கவருவதற்கென பிரத்தியேக யுக்திகளை பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படாது.

அவ்வாறே உங்களின் வணிக நிலைக்கு ஏற்ற சமூக வலைத்தளத்தினை தேர்வு செய்து பயன்படுத்துவது உங்களுக்கான இலக்கு வாடிக்கையாளர்களை இலகுவாக சென்றடையக்கூடிய தந்திரோபாயம் ஆகும் என்பதனை கருத்தில் கொள்ளுங்கள்.