வெப்பத்திலிருந்து எமது உடலை பாதுகாத்து கொள்வோம்.

வெப்பத்திலிருந்து எமது உடலை பாதுகாத்து கொள்வோம்.

17/09/2015 | Views 1443

  • வெயில் காலங்களில்  ஓசோன் மண்டலத்தில் விழுந்துள்ள துவாரம் வழியாக அதிகமான அல்ட்ரா வைலட் கதிர்கள் பாயும். இதனால் கண்கள் பாதிக்கப்படும். இதனைத் தவிர்க்க ஆட்டோ ரிப்லக்ஸன் கிளாஸ்'(Auto reflection glass) அணிவது நல்லது.
  • உடல் சூட்டையும், தோல் நோயையும் தவிர்க்க அதிக இளநீர் அருந்துவதுடன், நுங்கு, வெள்ளரி, தர்ப்பூசணி போன்றவற்றையும் அதிகம் சாப்பிட வேண்டும்.
  • குளிக்கும்போது எலுமிச்சம் பழத்தை அரிந்து, அதனுடன் சிறிது உப்பு தடவி கழுத்து, அக்குள் உள்ளிட்ட பகுதிகளில் தேய்த்து வந்தால் வியர்வை மணம் வராது.
  • கோடை காலத்தில் வரும் அக்கி, அம்மை போன்ற  நோய்களுக்கு வெள்ளரியும், கிர்ணிப்பழமும் மகத்தானது.
  • காஸ் நிரம்பியுள்ள குளிர்பானங்கள் அருந்துவதைத் தவிர்த்து இந்த பருவகாலத்தில்  கிடைக்கும் பழ வகைகளை அதிகம் சாப்பிடுவது உடலுக்கு குளிர்ச்சியை தரும்.
  • ரோஜாப்பூ, குல்கந்து (தேனில் ஊற வைத்த ரோஜா இதழ்) இவைகளை சாப்பிட்டால் உஷ்ணம் குறைந்து உடல் குளிர்ச்சி பெரும்.
  • வட்டமாக அரிந்த வெள்ளரியை கண்கள் மீது வைத்துக் கொண்டு உறங்கினால் கண்கள் குளிர்ச்சியாக இருக்கும். 
  • மருதாணியையும், கரிசலாங்கண்ணி இலையையும் சேர்த்துக் காய்ச்சப்பட்ட தேங்காய் எண்ணெயைத்  தலைக்கு வைத்து, மறுநாள் காலை வில்வங்காய் கலந்த சீயக்காய்ப் பொடி தேய்த்துக் குளிப்பது கோடைக் காலத்துக்கு உகந்தது.