முழுநேர வெற்றியாளராக மாறுவதற்கு தயாராகுங்கள் 

முழுநேர வெற்றியாளராக மாறுவதற்கு தயாராகுங்கள் 

தொழில் நிலைக்கு தயாராகும் முதல் கடைபிடிக்க வேண்டிய நிபந்தனைகள்

06/06/2018 | Views 328

தமது முழுநேர தொழிலின் வருமானத்தினை அதிகரித்துக்கொள்வதற்கும், தொழில் நிலையில் வெற்றி பெறுவதற்கும் பலரும் பல்வேறு யுக்திகளை பயன்படுத்துவது காணக்கூடியதாக உள்ளது. பலரும் தற்காலத்தில் குறைகூறிக்கொள்ளும் விடயமானது என்னதான் முழுநேர தொழிலில் ஈடுபட்டு வந்தாலும் தொழில் நிலையிலும் , வாழ்க்கை தரத்திலும் வெற்றி பெற முடியவில்லை மற்றும் மேலதிக வருமானத்தினை உழைத்ததுக்கொள்ள முடிவதில்லை என்பதில் ஆகும். 

இவ்வாறு சிறந்த வணிக வெற்றியாளராக உங்களை மாற்றிக்கொவதற்கு உங்களை நீங்கள் தயார் செய்துகொள்வதற்கு சில முன் ஏற்பாடான யுக்திகளை கடைபிடித்துக்கொள்வது சிறந்தது. அவற்றில் சில 

நிதியியல் அணுகுமுறைகளை வரிசைப்படுத்துங்கள்.

நிதியியல் அனுகூலங்கள் உங்களுக்கு பல சமயங்களில் சரியாக அமையாது போகலாம். அல்லது எதிர்பார்த்த நிதியியல் மூலங்களின் குறைவாக பெறப்படலாம். அதனை சரியாக நிர்வகித்துக்கொள்வது மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றது. அதற்கென நீங்கள் உங்கள் வருமானத்தினை அதிகப்படுத்தும் இதர பிற யுக்திகளை கண்டறிந்து கொள்வதற்கும் தயங்கிட வேண்டாம்.

வருமானத்தினை கூட்டுவதை விட செலவுகளை கட்டுப்படுத்துவதே சிறந்த பண்பாக பரிந்துரைக்கப்படுகிறது. தொழில் ரீதியிலும், தினசரி வாழ்க்கையிலும் செய்யப்படும் சில வீணான செலவினங்களை குறைத்துக்கொள்வது பல்வேறு வகையில் நிதியியல் தோல்விகளில் இருந்து உங்களை காப்பாற்றும்.

இதற்கென வரவுகள் மற்றும் செலவினங்களை கிராமமாக வரிசைப்படுத்தி செயல்படுவதே சரியான யுக்தி ஆகும்.

ஆவணப்படுத்தல்களை சீரமைத்துக்கொள்ளுங்கள்.

வணிகத்தினை தொடங்க, அல்லது தொழில் நிலையினை ஆரம்பித்தது முதல் கிடைக்கப்படும் அனைத்து ஆவணங்களையும் சேமித்து வைத்து சீரமைத்துக்கொள்வது விரும்பத்தக்கது. கட்டணங்கள், வரிப்பணங்கள் சம்பள சிட்டுக்கள் போன்ற இதர பிற ஆவணங்களும் ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் கண்டிப்பாக தேவைப்படும் என்ற ரீதியில் கண்டிப்பாக சேமித்துவைப்பது சிறந்தது.

தற்காலத்தில் ஆவணப்படுத்தல் நிலையானது இடப்பற்றாக்குறை மற்றும் களஞ்சிய நிலை போன்றவற்றால் அருகி வருகின்றது. எவ்வாறாயினும் செய்யப்படும் வருமானம் மற்றும் செலவுகளுக்காக அனைத்துவித ஆவணப்படுத்தல் மின்னியல் ரீதியிலாவது, மின் கோப்புகள் மூலமாகவேனும் சேமிக்கப்படுவது கண்டிப்பாக உபயோகப்படும் என்பது மட்டுமல்ல உங்களின் நேரத்தினை கூட பல சமயங்களில் சேமிக்கவும் செய்யும் . இவற்றின் உதவிகள் கூட வணிகநிலை வெற்றிக்கு உதவியாக இருக்கும்.

ஒவ்வொரு நொடியையும் திட்டமிடுங்கள் 

திட்டமிடல் என்பது வணிகநிலைக்கு கண்டிப்பானது. தினசரி செய்யும் வேலைகள், அடையவுள்ள இலக்குகள் உள்ளிட்ட சிறு சிறு வேலைகளைக்கூட திட்டமிட்டு, நேரம் காலங்களை அட்டவணைப்படுத்தி செய்வதானது வெற்றிக்கான சரியான யுக்தி ஆகும். 

சிற்சில செலவினங்கள் எதிர்பாராமல் அமைந்துவிடுவதும்  உண்டு. ஆயினும் அந்த நிலையில் தொழிலினை முன்னெடுக்க முடியாமல் தடுமாறாமல் பல சிக்கல் நிலைகளில் இருந்து பாதுகாப்பு பெறுவது குறித்தும் முன்னேற்பாடாக திட்டங்களை வகுத்துக்கொள்ள வேண்டியது வணிகம் என்ற நிலையில் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

 

உங்களது அயராத முயற்சியும், சரியான திட்டமிடலும் எவ்வகையான சூழ்நிலையில் இருந்தும் உங்களை தோல்வி நிலையில் இருந்து காப்பாற்றும். பொதுவாக வெற்றியாளர்களின் கருத்துப்படி கவனயீனம், அனாவசிய செலவு மற்றும் திட்டமின்றிய செயல்பாடுகள் போன்ற விடயங்களே வணிக நிலை தோல்விக்கான மிக முக்கிய காரணம் என கண்டறியப்பட்டுள்ளது. எனவே மேற்கண்ட அணுகுமுறைகளை பின்பற்றுவதன் மூலம் வெற்றி என்ற நிலையினை கண்டிப்பாக தக்கவைத்துக்கொள்ளலாம் என்பதில் துளியளவும் சந்தேகம் இல்லை.