சிறந்த தொழில் முனைவோராக மாற அடிபணிய வேண்டியது அவசியம்.

சிறந்த தொழில் முனைவோராக மாற அடிபணிய வேண்டியது அவசியம்.

தொழில்முனைவோராக நீங்கள் மாறுவதற்கு  இருக்க வேண்டிய சில பண்புகள்   

18/06/2018 | Views 698

தாழ்த்தப்படுத்தல் என்பதற்கும் தாழ்ந்துபோதல் என்பதற்கும் வித்தியாசம் உள்ளது. அடக்கம், பணிவு போன்ற ஒருவருக்கு இருக்கும் பட்சத்தில் அவர் உயர்ந்த நிலைக்கு உயர்த்தப்படுவார் என்பது அறிவியலில் கண்ட உண்மை . தொழிற்துறையினை பொறுத்த வகையில் ஒவ்வொரு தொழில்முனைவோருக்கு இருக்க வேண்டிய முக்கிய பண்பு அடக்கம் , பணிவு போன்றனவாகும் என கூறப்படுகின்றது.

மனத்தாழ்மை என்பது தொழிற்துறைக்கான ஒரு முக்கிய பங்கினை வகிக்கின்றது. தொழிலின் ஆரம்பம் முதல் நாம் வெற்றிபெற்று உயரிய இடத்தில் வரும் பொழுதும் கூட தாழ்வுநிலை என்பது அதிமுக்கியமானது.பல முன்னணி தொழில்முனைவோரின் வெற்றிக்கான காரணம் இந்த மனத்தாழ்வு நிலை என கூறப்படுகின்றது.


தொழில்முனைவோர் என்ற உயரிய நிலையினை அடைந்துகொள்வதற்கு பணிவுநிலையானது பின்வரும் பண்புகளின் மூலம் செய்துகாட்டப்படும்பொழுது கண்டிப்பாக வெற்றியினை நீங்கள் அடைந்துகொள்ளலாம் 

 

வெற்றிக்கு அடித்தளம் பணிவு 

மனத்தாழ்வு நிலை வெற்றிக்கு அடித்தளமானது . ஒரு சிலர் நிலைப்பதுண்டு நாம் தாழ்மையுடன் நடந்துகொள்வதால் இந்த உலகம் நம்மை தாழ்வாக நடத்தும் என. ஆனால் அது முற்றிலும் தவறான கருத்து. தாழ்வாக நடந்துகொள்வது நமக்கு உயர்ச்சியினை ஏற்படுத்தும். பிரபலமான தொழில் முயற்சியார்கள் பலரது வெற்றிக்கு ஒரு முக்கிய காரணி பணிவுநிலை என்பதை பல்வேறு வழிகளில் பலரும் நிரூபித்துள்ளனர். 

 

இலக்குகளில் தெளிவு 

தொழில்  நிலைகளில் காட்டப்படும் தாழ்வின் காரணமாக  உங்களுக்கு வெற்றி என்ற பலாபலன் கிடைக்கும் என்பதனை உணர்ந்துகொள்ள வேண்டும். சவால்களின் யதார்த்தத்தை அறிந்த ஒரு பயனுள்ள அமைப்பை உருவாக்கவும், வழிநடத்தவும் மனத்தாழ்மை தொழில்முனைவோரை வழிநடத்துகிறது. தொழில்நிலையின் வெற்றிக்கென நமது வாடிக்கையாளர்களிடத்தே நாம் பெற்றுக்கொள்ள வேண்டிய நம்பிக்கையும் நாணயமும் தொழிலின் தாழ்வுநிலையில் தான் ஆரம்பிக்கப்படுகிறது. 

இந்த பணிவு நிலையின் மூலம் வெற்றியினை தக்கவைத்துக்கொள்வதற்கு நாம் அடையவேண்டிய இலக்கில் தெளிவும் . இலக்கை அடைவதற்கான உறுதியும் இருக்க வேண்டியது கட்டாயம் ஆகும். தாழ்வுநிலை மாத்திரம் நமது வெற்றியினை உறுதிசெய்துவிடாது. இதனை அடிப்படையாகக்கொண்டு சில அடிப்படையான தொழில் பண்புகளை வளர்த்துக்கொள்வது எம்மை வியாபார ரீதியில் உயர்நிலையில் வைத்திருக்கும்.

 

குழு முயற்சியினை உறுதிசெய்தல் 

தொழில்முயற்சிகள் யாவற்றிற்கும் குழுச்செயற்பாடு அவசியம் பெறுகின்றது. எந்தவொரு தனிமனிதனாலும் தனித்து நின்று வெற்றியினை இலகுவாக பெற்றுவிட முடியாது. ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் குழுநிலையில் அல்லது இன்னுமொரு துணையின் உதவி இன்றி வெற்றி நிலை என்பது  சாத்தியம் இல்லை.

இவ்வகை குழும செயல்பாடுகளின் போது  காட்டப்படும் தாழ்வுத்தன்மையின் மூலம் பல விடயங்களை எம்மால் சாதித்துக்கொள்ள முடியும். அதாவது தொழில் முனைவோராக எமது குழு உறுப்பினர்களின்  வெளிப்படுத்தல்களை ஆமோதித்து வரவேற்பளிப்பதன் மூலம் விளைத்திறனான வெற்றி கிடைப்பதுடன் எமது செயல்களுக்கும் அங்கீகாரம் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.

  

பணிவு நிலைக்கும் , அடிமைத்தனத்திற்கு பாரிய வித்யாசம் உள்ளது. எவ்வகை உயரிய வெற்றிகள் கிடைத்தாலும், சந்தர்ப்பங்கள் கிடைத்தாலும். பணிவான பேச்சுக்கள் மற்றும் செயல்களே ஒரு வெற்றிமிகு தொழில்முயற்சியாளனை உருவாக்கும் வல்லமை கொண்டது. எனவே நீங்கள் வெற்றிமிகு தொழில் முயற்சியாளர் ஆவதற்கு மேலுள்ள   அடிப்படை பண்புகளை பணிவு நிலையினை கொண்டு முயற்சித்தால் வெற்றி என்பது நிச்சயம் .