சமூக ஊடகங்களின் மூலமாக உங்களை பிரதிபலித்துக் கொள்ளுங்கள் 

சமூக ஊடகங்களின் மூலமாக உங்களை பிரதிபலித்துக் கொள்ளுங்கள் 

உங்கள் தொழில்திறமையினை  லிங்க்டின்(LinkedIn) கொண்டு முன்னேற்றுவது எப்படி.

19/06/2018 | Views 165

இன்றைய சமூகவியலில் தேர்வுகள் அதிகப்படியாகவே உலா வருகின்றன. அதில் சிறந்த தேர்வினை நாம் தெரிவுசெய்துகொள்வதில் நமது திறமை உள்ளது என்பதனை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். அவ்வாறு தொழில் நிலை என்று வரும்பொழுது இன்றைய வணிக சூழலில் எமது தனித்திறமைகளை வைத்து நாம் எவ்வாறு தனித்துவமாக விளங்குகின்றோமோ, அதன் போதுதான் நாம் பலரதும் விருப்பத்தேர்வாளராக இருப்போம் என்பது மறுக்க முடியாத உண்மை.

இவ்வாறு தனிதத்துவம்மிக்க தொழில் முயற்சியாளராக நாம் இந்த தொழில் சூழலில் மிளிர்ந்துகொள்ள வேண்டும் என்றால் எமது சொந்த திறமைகள், முயற்சிகள் தனித்திறமைகளை போன்ற தவிர்த்து அதனை எவ்வாறு நாம் ஒரு சமூக ஊடகத்தின் மூலம் வெளிப்படுத்துகின்றோமோ, அப்போதுதான் நாமும் தனித்துவம்மிக்க , அனைவரினதும் ஒருமித்த தேர்வாளராக இருப்போம். இதற்கென சமூக ஊடகங்கள் பலதும் நமக்கு துணைபுரிகின்றது என்பதில் ஐயமில்லை.

இன்றைய காலகட்டத்தில் தரப்படுத்தல், அல்லது தரக்குறியீட்டினை தக்கவைத்துக்கொள்ளல்  என்பது வணிக சூழலுக்கான அதிமுக்கிய செயற்பாடாகும். இது மனிதவள செயல்பாட்டுக்கும் பொருந்தக்கூடியதாக கருதப்படுகின்றது. பிராண்டிங் (Branding) என்பது தேர்வுகள் பல இருந்தாலும் தரமானதும், அதி சிறப்புமிக்கதுமான சிறந்த ஒன்றினை கண்டறிந்து தேர்வு செய்துகொள்ள உதவுவது. அந்த வகையில் தொழில்நிலை மனிதவளங்களில் நாம் இதர பிற தேர்வுகளில் தனிச்சிறப்பும்மிக்க தேர்வாக மிளிர வேண்டும் என்றாலே சமூக வலைத்தளம் ஒன்றின் உதவியுடன் அதனை அடைந்துகொள்ளலாம் என அறியப்படுகின்றது.


அந்த வகையில் பல தொழில் ரீதியான முன்னணி தொழில் முயற்சியாளர்கள், தொழில்தருனர்கள் மற்றும் பெருநிறுவன விற்பன்னர்களால் பெரிதும் பரிந்துரைக்கப்படும் சமூக வலைத்தளமான லிங்க்டின்(LinkedIn) திகழ்கின்றது. பலரும் தொழில் ரீதியிலான  தேடுபொறியாக கூட இதனை பாவிப்பது சிறந்ததாக கருதுகின்றனர். அத்துடன் தொழில்முறை ஊடகமாக இதனையே பரிந்துரைக்கின்றனர்.

அவ்வகையில் தனிமனித தொழில் நிலை மேம்படுத்தலுக்கு இந்த லிங்க்டின் எவ்வகையில் உதவுகின்றது என்பதனை இங்கு காணலாம்  


லிங்க்டின் தரும் தனிமனித தரப்படுத்தல் 

சமூக ஊடகங்களை பொறுத்த வகையில் பல்வேறு விதமாக , பல்வேறு கோணங்களில், பலதரப்பட்ட நபர்களின் தொடர்பினை கொண்டிருப்பதாகும் . இதனை பக்கபலமாக கொண்டு நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கைகளும் மிகவும் இலகுவாகவும் பலவித நபர்களையும் சென்றடையும் என்பதில் ஐயமில்லை.

 பல்வகை சமூக ஊடகங்கள் உள்ள போதிலும்  தொழில் நிலையில்  தனிப்பட்ட நபர் பற்றிய சரியானதும் தெளிவானதும் , உண்மையானதும் துல்லியமானதுமான சிறந்த தரவுகளை வெளிக்காட்டுவதில் லிங்க்டின் முன்னணி வகிக்கின்றது. அது மட்டுமன்றி தொழில்நிலை என்று வரும்பொழுது இந்த ஊடகம் தரமான தொழிற்துறை ஊடகமாக அனைவரும் தேர்வுசெய்வார்கள்.

உங்களின் சுய விபரக்கோவையை புதுப்பித்தல் தொடங்கி அனைத்துவித தொழில்சார் நடவடிக்கைகளுக்குமான சிறந்த பலாபலன்களை இந்த சமூக ஊடகம் பெற்றுத்தருகின்றது என்பது மிகையில்லை . சுயவிபரக்கோவையை தரமிறக்குதல் முதற்கொண்டு சரியான துறையில் நம்மை தொடர்புபடுத்தல் வரையான ஆரம்பநிலை தொழில் முயற்சியாளருக்கும் , தொழில் தருனர் என்ற முறையில் குறிப்பிட்ட தொழில் சார்ந்த அனைத்துவித உதவிகளையும் இணைத்திடும் வல்லமை கொண்ட ஊடகம் இது .

சக்திவாய்ந்த தனிநபர் தரக்குறி சாதனம் .

மனிதத்தன்மையினை அடிப்படைவிழுமியங்களாக கொண்ட அனைத்துவித சாதனங்களும் சிறந்த சாதனங்கள் என மொசப்பத்தேமியா நாகரீகம் தொட்டே அறியப்படுகின்றது. அந்த வகையில் இந்த லிங்க்ட் இன் வணிக தொழில் துறைக்கான சிறந்த சமூக ஊடகம் ஆகும். மனிதத்தன்மையினை அடிப்படையாக கொண்டு இந்த செயலி ஊடகம் செயற்படுவதால் இது பலராலும் விரும்பப்படும் ஊடகமாக திகழ்கின்றது.

பார்வையாளர்களின் புள்ளி விவரங்கள் மற்றும் அவற்றின் பின்னணி அனுபவங்களை அறிந்துகொள்வது அவர்களுக்கு உள்ளடக்கத்தை உருவாக்குவதற்கு உதவியாக இருக்கும், மேலும் உண்மையான தரவுகளின் உள்ளடக்கம் இதில் காணப்படுவதால் , இந்த ஊடகத்தினை கொண்டு நம்பகத்தன்மையுடைய தொழில் முயற்சியாளர்களை சரியாகவும் இனம்கண்டுகொள்ள முடிகின்றது.

சமூகத்தை உருவாக்கும் ஊடகம். 

சமூக ஊடகம் என்ற கட்டமைப்பில் செயல்படும் லிங்க்டின் சிறந்ததொரு வலைப்பின்னலினை உருவாகும் திறன் கொண்டதாக நம்பப்படுகின்றது. இந்த ஊடகத்தினை பயன்படுத்தும் பல்வேறு முன்னணி பெரு நிறுவனங்கள், தொழில் முயற்சியாளர்கள், வல்லுநர்கள், தொழில் தேடுபவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் ஏதுவான முறையில் அனைவரும் இலகுவாக பயன்படுத்திக்கொள்ளும் வகையில் ஒருவருக்கொன்றுவர் வலையமைப்பினை உருவாக்கிக்கொள்ள உதவும்.

சிறந்த வலையமைப்பினை கட்டியெழுப்புதலானது சிறந்த சமூக பின்னணியினை உருவாகும். அதற்கு இந்த கட்டமைப்பு தகுந்த பலாபலனை தரும் என இதனை பயன்படுத்தும் பிரபல தொழில்முயற்சியாளர்கள் சான்றளித்துள்ளனர்.

சாத்தியமான வாடிக்கையாளர்களை இணைக்கும் 

வலுவான உறவுகளை வளர்ப்பதன் மூலம் விற்பனை விநியோகத்தினை வலுப்படுத்தும் தன்மையினை இந்த சமூக ஊடகம் சிறப்பாக செய்கின்றது. 

நீங்கள் உங்கள் இலக்கு வாடிக்கையாளர்களுடன் உங்கள் உறவை மேலும் வளர்த்துக்கொள்ளும் பட்சத்தில் உங்களின் கொள்வனவுகள் அதிகப்படுத்தப்படும் . இந்த எளிய மூலோபாயம் உங்களுக்கு அதிகமான விற்பனையை வழங்குவதோடு மட்டுமல்லாமல் உங்கள் தனிப்பட்ட தரத்தையும்  மேம்படுத்தும். 


பிற ஊடகங்களின் இணைப்பு 

லிங்க்டின் மூலம் தொழில்முறை வலையமைப்பினர் மட்டுமன்றி இதர பிற ஊடக வலையமைப்புகளும் இணைக்கப்பட்டுள்ளது . உங்களின் தனிப்பட்ட திறமை குறிப்பிட்ட தரப்பினரை மட்டுமன்றி சகலவிதமான பிரிவினரையும் சென்றடைகின்றது என்பதனை உத்தரவாதம் அளிக்கும் விதமாக இந்த இணைப்பு நிலை பயன்படுத்தப்படுகின்றது 

இதன் மூலமான உங்கள் தொழில் மற்றும் தொழில்நிலை பற்றிய அனைத்துவித வெளிப்படுத்தல்களும் சமூகஊடகங்களையும் தாண்டி இதரப்பிற உள்ளக ஊடகங்களையும் சென்றடைவதன் மூலம் வணிகத்துறையில் உங்களுக்கான வாய்ப்புக்கள் அதிகப்படுத்தப்படும் என்பதில் மறுப்பதற்கு இல்லை .

 

எல்லாவகையிலும் உங்களின் தனிப்பட்ட தர மேம்பாட்டினை வளர்த்துக்கொள்வது மட்டுமன்றி உங்களுக்கான வாய்ப்புக்கள் மற்றும் உங்களின் தொழில்முறை சார்ந்த அனைத்துவித சந்தைப்படுத்தல் , விற்பனை போன்ற விடயங்களை தரமான முறையில் இலகுவாக மேற்கொள்வதற்கு லிங்க்டின் சரியான ஒரு ஊடகம் என்பதனை தெளிவுபடுத்துகின்றது.