கஞ்சாவுக்கு அரச அங்கீகாரம் தந்தது கனடா

கஞ்சாவுக்கு அரச அங்கீகாரம் தந்தது கனடா

சட்டபூர்வமாக கஞ்சாவை பாவிக்கவும் விற்பனை செய்யவும் ஒப்புதல் அளித்த கனடிய அரசாங்கம்

20/06/2018 | Views 452

உலகெங்கிலும் தற்பொழுது பரவலாக போதைப்பொருள்களுக்கு எதிரான நடவடிக்கைகள் வலுப்பெற்றுவரும் நேரத்தில் அதற்கு விதிவிலக்காக கனடா நாட்டில் போதைப்பொருளுக்கு ஆதரவாக கனடிய பாராளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு இருப்பது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

மரிஜுனா  பெரும் அங்கீகாரம் 

கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் கனடிய அரசாங்கம் வெளியிட்ட பாதீட்டின் அடிப்படையில் கனடாவில்  கஞ்சா செடிகளைபயிரிடுவதற்கும், அதிகாரபூர்வமாக விற்பனை செய்வதற்கும் பாதீட்டில் ஒதுக்கங்கள் மேற்கொள்ளப்பட்டமை அறிந்ததே. அதன் அடிப்படையில் தற்பொழுது கனடாவில் கஞ்சா பயிரிட்டு விற்பனை செய்யவும் பயன்படுத்தவும் அனுமதி அளிக்கும் சட்டத்திற்கு பாராளுமன்றம் இறுதி ஒப்புதலை வழங்கி உள்ளது. 

கனடாவில் கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் மருத்துவத்துக்காக கஞ்சா செடிகளை பயன்படுத்துவதற்கு அனுமதி உள்ள போதிலும்  போதைப்பொருளாக பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. எனினும் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வந்ததாக முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டதுடன் கட்டுப்பாடுகளுடன் கஞ்சாவை பயன்படுத்த அனுமதிக்கலாம் என்ற கோரிக்கையும் விடுக்கப்பட்டது.

இந்த நிலையில் கனடாவில் கஞ்சா வளர்க்கவும், கேளிக்கை விடுதிகளில் முறையான அனுமதிகளுடன் கஞ்சாவை விற்பனை செய்யவும், சில கட்டுப்பாடுகளுடன் கஞ்சாவை பயன்படுத்தவும் சட்ட மசோதா உருவாக்கப்பட்டது.  இந்த மசோதா பாராளுமன்ற கீழ் சபையில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டு அண்மையில் பாராளுமன்ற உயர் சபையிலும் மசோதா நிறைவேற்றப்பட்டது.

அதன்பின்னர் மசோதாவில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, மீண்டும் பாராளுமன்ற கீழ் சபையில் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் நேற்றை யதினம் கனடிய பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில் 52 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் மசோதா நிறைவேற்றப்பட்டதாக அறியப்படுகின்றது.

கனேடிய அரசாங்கத்தின்  ஒப்புதல் கிடைத்ததும்,எதிர்வரும்  செப்டம்பர் மாதம் முதல் இந்த சட்டம் அமுலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


களைகளுக்கு மாத்திரமே அங்கீகாரம் 

எவ்வாறாயினும் இந்த சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான அரச அங்கீகாரம் முழுமையாக இன்னமும் பெறப்படாத நிலையில் வயது வந்தவர்களுக்கு மரிஜூனாவை  பாவிப்பது மற்றும் கொள்வனவு செய்தல் தொடர்பில் அடுத்த ஆண்டுவரை சட்ட ரீதியான வரைமுறைகள் வழங்கப்படவில்லை எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கஞ்சாவின் "வீட்" களை வகைக்கு மாத்திரமே அதிகாரபூர்வ அங்கீகாரம் பெறப்பட்ட நிலையில் அதனை விற்பனை செய்வதற்கான அங்கீகாரத்தினை  2018 ஆம் ஆண்டு செப்டெம்பருக்கு பிறகு கணினிமயப்படுத்தப்பட்ட வரைவுகளுக்கு ஏற்ப விண்ணப்பித்திருக்க வேண்டும் எனவும், அங்கீகாரம் பெற்ற நபர்களால் மாத்திரமே இதனை முறைப்படி விற்பனை விநியோகமும் செய்துகொள்ள முடியும் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது நாடு கனடா 

கஞ்சாவினை அரச அங்கீகாரத்துடன் விற்பனை செய்வதில் உலகளாவிய ரீதியில் இரண்டாவது இடமே கனடாவுக்கு கிடைத்துள்ளது. இதற்கு முன்னதாக உருகுவே நாட்டில்  2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மருத்துவ மூலப்பொருள் எனும் ரீதியில் இந்த அங்கீகாரத்தினை அந்த நாடு பெற்றுவிட்டமை குறிப்பிடத்தக்கது, இதற்கு அமெரிக்காவின் பல பிராந்தியங்களும் அனுமதி  அளித்திருந்தாகவும் அறியப்படுகின்றது.

அரசாங்கத்தின் அதிகாரபூர்வ  வரும்வரை மேற்படி அங்கீகாரமானது வரைவு நிலையில் மாத்திரமே செயற்படவிருப்பதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ட்ரூடோவின் சமூக கருத்து 

கனடிய அரசாங்கத்தின் இந்த நிலைப்பாடு குறித்து கனடிய பிரதமர் தமது கருத்தினை தமது டிவிட்டர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். 

அந்த வகையில் "இதுவரையில் குற்றவாளிகள் இலகுவாக இலாபம் பெரும் வகையில் இளையவர்களுக்கு இந்த மரிஜுனா  கிடைக்கபெற்றுவந்தது. இதனை இன்று மாற்றியுள்ளோம்   இன்று சட்டபூர்வமாகவே மரிஜுனாவை அனைவருக்கும் கிடைப்பதற்கு     ஓழுங்குபடுத்துவதற்கான மசோதா செனட்சபையில் நிறைவேறியது"  என தமது பதிவினை வெளியிட்டிருந்தார் .

 

It’s been too easy for our kids to get marijuana - and for criminals to reap the profits. Today, we change that. Our plan to legalize & regulate marijuana just passed the Senate. #PromiseKept

— Justin Trudeau (@JustinTrudeau) June 20, 2018

 

எவ்வாறாயினும் பிரதமர் ட்ரூடோ 2015 ஆம் ஆண்டு தமது தேர்தல் பிரச்சாரத்தின் போது மது மற்றும் போதைப்பொருள் பாவனை தொடர்பில் வீட் களையினை உபயோகிப்பதற்கு அரச அங்கீகாரத்தினை பெற்றுத்தருவதாக தெரிவித்திருந்தமை சுட்டிக்காட்டப்படவேண்டியுள்ளது.

  

கொள்வனவு மற்றும் நுகர்வுக்கான  வரையறைகள் 

பெரும்பாலான மாகாணங்களில் குறிப்பாக கியூபெக் மற்றும் ஆல்பர்ட்டா தவிர்த்த ஏனைய இடங்களில் மரிஜுனா வீட் களைகளை கொள்வனவு செய்வதற்கான வயதெல்லை 19 வயது என கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆயினும் கியூபெக் மற்றும் ஆல்பர்ட்டா மாநிலங்களில் இது 18 வயதிற்கு மேற்பட்டோர் வாங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் விற்பனையானது அங்கீகரிக்கப்பட்ட  தனியார் விநியோக நிலையங்களில் நடத்தப்படும் அதே நேரம் ஒன்லைன் மூலமாகவும் வீடுகளுக்கே கொண்டுவந்து தரும் நிலையிலும் விற்பனை செய்யப்படவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தனியார் வசிப்பிடங்களுக்கு இதன் நுகர்வு வரையறைசெய்யப்பட்ட நிலையில் நுனுவட் மற்றும் ஆல்பர்டா ஆகிய மாநிலங்களில் பொதுவெளிகளில் கஞ்சா பாவனைகள் அங்கீகரிக்கப்பட்டு இருக்கின்றது. இதுதவிர்த்து வைத்தியசாலை மற்றும், பொது பராமரிப்பகங்கள் தவிர்த்த இடங்களில் இதனை உபயோகிக்க அங்கீகாரம் உள்ளது.

எவ்வாறாயினும் கன்சர்வேட்டிவ் கட்சி உள்ளிட்ட அரசின் பிரதான எதிர்கட்சிகள் இந்த சட்ட அனுமதியினை வரவேற்கவில்லை, அத்துடன் சமூகவியல் அக்கறை செலுத்தும் உள்நாட்டு நிறுவனங்களும் அரசாங்கத்தின் இந்த அனுமதி பெறப்பட்டதையிட்டு கவலை தெரிவித்தும் இருப்பதாக தெரிவித்துள்ளது.

மரிஜுனா சந்தைப்படுத்தல் மற்றும் சட்ட  நடைமுறைகள் 

கனடாவின் அனைத்து பிராந்தியங்களுக்குமான சந்தைப்படுத்தல் அங்கீகாரத்தினை முறைப்படி நிறுவுவதற்கு இன்னும் 8 முதல் 12 வாரங்கள் வரை ஆகும் என தெரிவிக்கப்படும் அதே நேரம் புதிய சட்டவரைவுக்கான காவல் துறையினரின் தயார்படுத்தல் நடைமுறைகளுக்கு உகந்த கால அவகாசம் வழங்கப்படும் உள்ளதாக பி.பி.சி. செய்திசேவை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் வயத்துவந்தவர்கள் நாளொன்றுக்கு 30 கிராம் (1 அவுன்ஸ்) அளவிலான கஞ்சாவினையே எடுக்க முடியும் என்ற அளவு வரையறுக்கப்பட்டு உள்ள நிலையில் சிறுவர்களுக்கு இதனை விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும். அவ்வாறு கண்டறியப்பட்டால் 14 வருட கடூழிய சிறைவாசம் விதிக்கப்படவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.