மேலைத்தேய முயற்சியாண்மை பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை 

மேலைத்தேய முயற்சியாண்மை பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை 

வெளிநாட்டு வணிகங்கள் உலகில் முன்னணி வகிக்க காரணம் தெரியுமா 

02/07/2018 | Views 310

தாம் பிறந்து வளர்ந்த நாட்டை விட்டு தொழிலுக்காக மேலைத்தேயத்தை நோக்கி நகர்வதே பல கீழைத்தேய நாடுகளில் உள்ள தொழில் முயற்சியாளர்களின் அடிப்படை நிலை ஆகும். தொழில் நிலைகளுக்கும், தொழில் முயற்சியாளர்களுக்குமான சிறந்த இடம் என்பது உலக நாடுகளில் மேலைத்தேயமே என எழுதப்படாத விதி அமைந்திருப்பதாக கருதப்படுகின்றது.

உலக நாடுகளை பொறுத்தவகையில் தொழில் நிலைகளுக்கு ஏதுவான இடமாக மேலைத்தேய நாடுகளையே குறிப்பிட்டுக் கூறுவது உண்டு . வணிக கலாச்சாரத்திற்கு அடிமையாகிப் போன சர்வதேசங்களையும் கட்டி ஆளும் வல்லமையினை மேலைத்தேய நாடுகளே கொண்டுள்ளமை என்பது குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும் நாகரிக வாழ்க்கை , முயற்சியாண்மை , கலாச்சாரம் போன்ற அனைத்து விடயங்களுக்கும் நாம் மேலைத்தேயத்தினையே முன் உதாரணமாக கொண்டிருப்பது வழமையான விடயம் ஆகின்றது. அவ்வாறே முயற்சியாண்மையின் பலத்தினையும் அதன் போக்கினையும் நம்பி வாழக்கூடிய சமூகமாக இன்றைய உலகம் மாறிவரும் இந்த தருணத்தில் மேலைத்தேயத்தினர் கடைபிடிக்கும்  வெற்றிக்கான வழிகளும் , வெற்றியடைந்த தொழில் முயற்சியாளன் கொண்டிருக்கும் பண்புகளையும் அறிந்து கொள்வது அவர்களைப் போன்றே நாமும் உலகின் சிறந்த தொழில் வல்லுனராக மாறுவதற்கு உறுதுணை புரியும். அவ்வகை பண்புகள் இவைதான்.

நேரடியான அணுகுமுறைகள்.

கீழைத்தேய நாடுகளை விட மேலைத்தேய நாடுகளில் பொதுவாக தொழில் வெற்றிக்கான மிக முக்கிய காரணம் முதலாளித்துவ பொருளாதாரம் என கூறப்படுகின்றது. எவ்வகை தொழில் , வணிக நிலைகளும் அவற்றின் பயனாளிகளுடன் கூடுமானவரையில் நேரடித்தொடர்பினை பேணும் நிலையில் இருப்பதனை காணக்கூடியதாய் இருக்கின்றது. இது கீழை நாடுகளுக்கு அப்பாற்பட்ட விடயமாகவே கருதப்படுகின்றது .

சோஷலிச பொருளாதார நாடுகளில் வணிக முயற்சியாளர்களுக்கு பாரிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கும் , மக்கள் நலன், நுகர்வோர் நலன் என்பனவற்றினை பெரிதாக அவ்வகை கீழை நாடுகள் கடைப்பிடித்து வருகின்றமை வணிக வெற்றிக்கு பெரும் முட்டுக்கட்டையாகவே உள்ளமை குறிப்பிடத்தக்கது.

வணிகவியலின் அடிப்படைத் தத்துவமே குறைந்தளவே வெளியீடுகளின் மூலம் அதிக இலாபம் உழைப்பது மட்டுமே. இவை தன்னிறைவுடைய பொருளாதாரப் பண்பினைக்கொண்ட மேலைத்தேய நாடுகளுக்கு மட்டுமே சாத்தியமானது. 


வணிக மனநிலையுடைய சூழல் 

மேலைத்தேய நாட்டு மக்கள் அனைவருக்குமான பொதுவான மனநிலையும், குணவியல்பும் பணம் மற்றும் வணிகம் சார்ந்ததாகவே இருக்கின்றது. எப்படி சம்பாதிப்பது, இலாபத்தினை அதிகம் உழைக்க என்ன செய்யலாம் போன்ற விடயங்கள் மட்டுமே மேலைத்தேயர்களின் சிந்தனையில் இருக்க கூடிய விடயம் ஆகும். 

ஒரே சிந்தனையுடையவர்கள்கொண்ட சூழலின் மூலம் நாம் அடைய நினைக்கும் இலக்கினை இலகுவாக அடைந்துவிடலாம் என கூறப்படுகின்றது. எப்பொழுதும் நமது எண்ண  ஓட்டங்கள் வணிகத்தின் வெற்றியினை மட்டுமே சிந்திப்பது அதனை அடைந்திட வழிசெய்யும்.

கீழைத்தேய கலாச்சாரம் இதற்கு வேறுபாடானது. சமூக நலன், குடும்ப கலாச்சரப் பண்புகள் போன்றவற்றால் ஊறிப்போனது. இந்நிலையில் சக மனிதர் அல்லது முயற்சியான்மைக்கு உறுதுணை புரியக்கூடியவர் மாறுபட்ட சிந்தனைகளை கொண்டிருப்பின் முரண்பாடான விடயங்களே மேலெழும். இது வணிக வெற்றிக்கு சாத்தியமற்ற ஒன்றாகும்.


சொந்த தொழில் தரும் திருப்தி 

மேலை  நாட்டவர்கள் பலருக்கும் இருக்கும் அனுகூலமான விடயம் அவரவர்களுக்கே உரித்தான சொந்த தொழில்களை செய்வதே ஆகும், இதன் மூலம் கிடைக்கும் தனிநபர் வருமானம் மற்றும் இலாபம் என்பன ஒப்பீட்டளவில் அதிகப்படியாக இருப்பதே பலரும் மேலைத்தேய கலாச்சார முறைமையில் அமைந்துள்ள சூழலை விரும்பிட காரணம் ஆகும்.

இலாபமோ, நட்டமோ, தாம் செய்த வேலைகளின் பிரதிபலனை தாம் மட்டுமே அனுபவிப்பதும், 
பொறுப்புகளை தட்டிக்கழிக்க முடியாமையுமே முயற்சியாண்மையின் வெற்றிகளுக்கு மூலகாரணம் என கருதப்படுகின்றது,


காப்பீட்டின் ஒத்துழைப்பு .

காப்புறுதி தரும் ஒத்துழைப்பினைப் பொறுத்தவகையில் மேலைத்தேய நாடுகள் வணிகத்தில் ஏற்படுகின்ற நஷ்டத்தினை ஈடுசெய்வதில் முன்னணி வகிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. தோல்வி நிலைக்கு தள்ளப்படவிருக்கும் வணிக நிறுவனங்களை கைகொடுத்து உதவும் வகையில் இவ்வாறு காப்புறுதிகளும் , நிறுவனங்களும் நடந்துகொள்வதென்பது முயற்சியாளர்களுக்கு பெரிய உந்துதலை அளிக்கின்றது . 


உச்சபட்ச இலாபம் 

வணிக சூழலில் தனித்துவ படைப்பாளிகளாக திகழும்பொழுது நீங்கள் அடைந்துகொள்ளும் இலாபமானது ஒப்பீட்டளவில் அதிகமானதாகவே காணாப்படுகின்றது. அரச வரி விதிப்புக்கள் மற்றும் நிதி அம்சங்கள் சார்ந்த விடயங்களில் காணப்படும் வரையறைகள் மேலைத்தேய நாடுகளில் மட்டுப்படுத்தப்பட்டதாகவே அமைந்துள்ளது என்பதன் காரணமாக உழைக்கும் இலாபத்தினை  முழுவதுமாக முயற்சியாளன் அனுபவிக்கும் சாத்தியப்பாடு காணப்படுகின்றது.

குறிப்பிட்ட , ஒழுங்கமைக்கப்பட்ட  செயல்முறைகள்.

சட்டங்கள், ஒழுங்குகள் போன்றவற்றை பின்பற்றுவதில் மேலைத்தேய நாடுகள் மிகவும் ஒழுக்கத்தினை பின்பற்றுகின்றன. அவ்வாறே எளிமையாக பின்பற்ற கூடிய நடைமுறைகளை மிக்கது ஆராய்ந்த பின்னர்.அவற்றினை செயற்படுத்துவதில் மேலைத்தேய நாட்டினர் கொண்டுள்ள அதீத அக்கறையே அவர்களின் வணிக வெற்றிக்கு உறுதுணை புரிகின்றது.

 

தொழில் ரீதியில் மாத்திரமல்ல , அரசியல், மற்றும் சமூக சூழலும் வணிகமயமாக மாறிவரும் நிலையில் அவற்றினை அடிப்படை விழுமியமாகக்கொண்ட மேலைத்தேய நாட்டினர் கடைபிடிக்கும் நடைமுறைகளானவை பல கீழை நாடுகளுக்கு சாத்தியமற்றதாகவே காணப்படுகின்றதாக பலரும் கருதுகின்றனர். எவ்வாறாயினும் பலரும் விரும்பி வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்து தாமும் சொந்த வாழ்க்கையில் முன்னேறிட வேண்டும் என்ற ரீதியில் மேற்கொள்ளும் முயற்சி தனி மனித வளர்ச்சியுடன் சமூகத்தின் வளர்ச்சியாக கருதப்படுவதால் காரணத்தினால் இவ்வகை மேலை நாடிகள் கடைபிடிக்கும் சில கொள்கை மற்றும் முறைமைகளை கொஞ்சும் கொஞ்சமாக கீழை நாடுகளும் பின்பற்றி சிறந்த முயற்சியாளன் என்ற நிலையினை அடைவது வரவேற்கத்தக்க விடயம் ஆகும்.