அதிகரிக்கும் வெப்பத்தால் அல்லல்படும் கனேடியர்கள் 

அதிகரிக்கும் வெப்பத்தால் அல்லல்படும் கனேடியர்கள் 

வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து எவ்வாறு பாதுகாப்பு பெறலாம்?

05/07/2018 | Views 281

கனடாவில் தற்பொழுது வெப்பமயமான காலநிலை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் கிழக்கு கடற்பரப்பை சார்ந்த பிரதேசங்களில் 6 க்கும் அதிகமான பொதுமக்களின் இறப்பு சம்பவம் பதிவாகியுள்ளது என அறியப்படுகின்றது. கடந்த காலங்களுடன் ஒப்பிடும் பொழுது இந்த நிலை மிகவும் அதிகமானதாகவே அறியப்படுகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் முக்கியமாக கியூபெக், மற்றும் மொன்றியல் நகரங்கள் இவ்வாறு அதிக வெப்பத்தின் காரணமாக மிகவும் பாதிப்படைந்துள்ள நகரங்களாக அறியப்படுகின்றது. அதிலும் குறிப்பாக வீடுகளில் ஏர் கண்டிஷனர்குளிரூட்டி  பயன்படுத்தப்படாததால் 18 இருக்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கனேடிய தலைவர்கள் கொள்ளும் கவலை 

நகரும் முக்கிய பகுதிகளில் உள்ள நீச்சல் குளங்கள், மற்றும் நீர் தடாகங்களில் பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு எதுவாக செய்துதரப்படும் அதே நேரம், இந்த வெப்ப காலப்பகுதிக்கு ஏற்ப பொதுமக்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்துதர15 ஆயிரம் தீயணைப்புப் படையினர்களை  தயார் நிலையில் இருக்குமாறு   பணித்திருப்பதாக மொன்றியல்  பிரதேசத்தின்  மேயர் Valérie Plante அறியத்தந்துள்ளார்.

 

அவ்வாறே கனேடிய பிரதமர் Justin Trudeau இந்த வெப்பநிலை  மாற்றத்தின் தாக்கத்தால் உயிரிழந்த பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் நாட்டு மக்களுக்கு தமது சமூக வலைத்தள பக்கத்தில் செய்தியொன்றினையும் வெளியிட்டுள்ளார். அதன்படி உங்களதும் , உங்கள் குடும்பத்தார்களதும் பாதுகாப்பு தொடர்பில் அவதானத்துடன் இருக்குமாறும் தெரிவித்துள்ளார்,

 

My thoughts are with the loved ones of those who have died in Quebec during this heat wave. The record temperatures are expected to continue in central & eastern Canada, so make sure you know how to protect yourself & your family: https://t.co/JSPPsU80x9

— Justin Trudeau (@JustinTrudeau) July 4, 2018


 

 

வெப்பகாலங்களில் நிகழ்வது என்ன? 

மனித உடல் சாதாரணமாக வியர்வை மூலம் குளிர்கிறது, ஆனால் வெப்பம் மற்றும் ஈரப்பதத்தின் மூலம் இவ்வாறு குளிர்வடைவது போதுமானதாக இல்லை. வியர்வையானது , ஈரப்பதமான நாட்களில் எளிதில் ஆவியாகிவிடக்கூடாது, இவ்வாறான காலநிலைகளின்போது உடலின் வெப்பநிலையை பராமரிக்க கடினமாக பிரேயேத்தனம் மேற்கொள்ள வேண்டியது அவசியம் ஆகும்.

இவ்வாக்கை வெப்பமயமான காலநிலைகளில் மக்கள் விரைவாக களைப்படைய  தொடங்குகின்றனர்  அவ்வாறே பலவீனமாக அல்லது மயக்க நிலையினைஉணர்கிறார்கள், தலைவலி அல்லது மனசோர்வு மற்றும் குழப்பநிலைக்கும் தள்ளப்படுகின்றனர். வெப்பப் பக்கவாதம் மற்றும் வெப்ப சோர்வு, அல்லது சூடான வெப்பநிலைகள் ஏற்கனவே இருக்கும் சீரற்ற உடல் நிலைகளை மேலும்  மோசமாக்கலாம் என அறியப்படுகின்றது. 


அதிக வெப்பத்தால் ஏற்படும் நோய்கள்.

வெப்பமயமான காலப்பகுதியில் பல்வேறுபட்ட நோய் தாக்கங்கள் மக்களை பாதித்த வண்ணம் இருப்பது அறியப்படுகின்றது. அந்தவகையில் பின்வரும் பாதிப்புக்கள் இந்த காலப்பகுதியில் ஏற்படுவதை அவதானிக்க முடிகின்றது.

வெப்ப சோர்வு

மக்கள் சூடான மற்றும் ஈரப்பதமான இடங்களில் அதிகமாகவோ அல்லது வேலை செய்கையில் இந்த பாதிப்பு நிகழ்கின்றது , உடல் திரவங்கள் அதிக வியர்வையால் வெளியேற்றப்படுகின்றன இதன் காரணமாக . இரத்த ஓட்டம் மேலும்  அதிகரிக்கிறது, ஆனாலும்  இந்த தாக்கத்த்தினால் சில  முக்கிய உறுப்புகளுக்கான இரத்த ஓட்டம் குறைவடைவதனை அறிந்துகொள்ளலாம் , இதனால் உடல் நிலையில்  லேசான அதிர்ச்சி மாற்றங்கள் ஏற்படுகிறது. இந்த நிலையில் முறையான சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், உடலின் வெப்பநிலை தொடர்ந்து அதிகரிக்கப்படலாம். அதன் காரணமாக எப்பொழுதும் உடல் சோர்வடைந்த நிலையிலேயே தொடர்ந்தும் காணப்படும் .

 

வெப்ப வீச்சு

அதிக வெப்ப வெச்சு அல்லது உடல் வெப்ப வெளியேற்றமானது உடலின் சோர்வுத்தன்மையினை அதிகப்படுத்துவதன் மூலமாக உடலில் உள்ள நீர்த்தன்மையினை குறைப்பதுடன் மூளை நரம்புகள் பாதிக்கப்பட வாய்ப்புக்கள் அதிகளவில் இருப்பதாக கூறப்படுகின்றது. எனவே மனிதர்களுக்கு நரம்பு மண்டல பாதிப்புடன் கூடிய மூளைச்சாவு ஏற்படக்கூடிய அபாயநிலை காணப்படுகின்றது.


வெப்பத் தாக்குதலை எவ்வாறு சமாளிக்கலாம்.

அதிகரிக்கப்பட்ட வெப்பநிலையினால் ஏற்படக்கூடிய பக்க விளைவுகளையும், அதன் மூலமான தாக்குதல்களையும் கட்டுப்படுத்தவும் அதன்மூலமாக பாதுகாப்பினை பெறவும் சில எளிய வழிவகைகள் இதோ !.

  • நிறைய திரவ பானங்கள் மற்றும் தண்ணீர் அருந்த வேண்டும்.'
  • சரியான ஓய்வுநிலை 
  • மயக்கம், அல்லது குமட்டல் தோன்றினால் உடனே குளிர்ந்த இடத்தினை நோக்கி செல்லுங்கள்.
  • முடிந்தளவு வெளியாக வேலைகளை தவிர்த்து அறைகளுக்குள் பாதுகாப்பாக உங்கள் பணிகளை செய்து முடியுங்கள்.
  • காற்றோட்டம் உள்ள பிரதேசங்களுக்கு அடிக்கடி சென்று வரவும் ..
  • தாக்கம் ஏற்படும் பட்சத்தில் செயற்கை பானங்களை அருந்துவதை முடிந்தளவு தவிர்ப்பது நல்லது.
  • முடிந்தளவு அதிக வெப்பமான நிலையில் நிழல் தரும் இடங்களில் பாதுகாப்புடன் இருக்க வேண்டியது அவசியம் .
  • வெப்ப தாக்குதலில் இருந்து பாதுகாப்பு பெரும் வகையில் தலைக்கு தொப்பி அணிவதுடன் தளர்வான பருத்தி ஆடைகளை அணியுங்கள் .
  • வெப்பம் அதிகமான நேரங்களில் அறையிலுள்ள மின் குமிழ்கள் வெளிச்சத்தினை குறைத்து அல்லது நிறுத்தி வைப்பது சிறந்தது.
  • அதிக வெப்பநிலை தோன்றும் நேரங்களில் காற்றாடிகள் மூலமான காற்று உடலுக்கு எவ்வகையிலும் போதுமானது அல்ல என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.