கனேடிய வரலாற்றில் மிகப்பெரிய குடிவரவு மோசடி 

கனேடிய வரலாற்றில் மிகப்பெரிய குடிவரவு மோசடி 

மூன்றில் ஒரு பங்கு பிணை செலுத்தி வெளியே வந்த மோசடி மன்னன் 

09/07/2018 | Views 232

குடிவரவாளர்களை ஆதரிக்கும் நாடுகளில் என்றும் முன்னணி வகிப்பது கனடா. ஆயினும் குடிவரவு தொடர்பின் பல எண்ணற்ற மோசடிகளும் அரங்கேறும் நாடாகவே கனடா காணப்படுகின்றது. அவ்வகையில் வரலாற்றிலேயே மிகவும் பெரிய குடிவரவு மோசடி ஒன்று இடம்பெற்றுள்ளது.

குடிவரவு மோசடி தொடர்பில் விதிக்கப்பட்ட சுமார் 900 000 கனேடிய டாலர்களை திரும்ப செலுத்தாமல் ஏமாற்றிய மோசடி தொடர்பில் sunny  என்ற நபர் கைது செய்யப்பட்டு விசாரணைகளின் பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகின்றது.


மோசடி மன்னன் சன்னியின் சாகசம்  


கடந்த 2017ஆம் ஆண்டு பாரிய குடிவரவு ஊழல் மோசடி தொடர்பில் sunny என்றழைக்கப்படும் XUN WANG காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு  , 7 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுந்தமை தெரிகின்றது . அவ்வாறே 900,000கனேடிய டாலர்கள் பிணையும் இவருக்கு  விதிக்கப்பட்டுள்ள இருந்தது , 


ஆனால் தண்டப்பணத்தில் மூன்றில் ஒரு பங்கு மாத்திரம் செலுத்திய நிலையில் இவர்  வெளியே வந்துள்ளதாக கனேடிய செய்திகள் தெரிவிக்கின்றன. sunny தமது சொத்துக்களின் பெரும் பகுதியினை தமது மனைவிக்கு மாற்றியுள்ளதாக இனம்காணப்பட்டும் இருப்பதாக அறியப்படுகின்றது .எவ்வாறாயினும் சிறையில் அவரது நடத்தை உள்ளிட்டவை கருதப்பட்டு இவ்வாறு தண்டப்பணத்தில் 1/3 செலுத்திய நிலையில் Sunny விடுவிக்கப்பட்டதாக தெரிகின்றது.

49 வயதான sunny இதுவரை 1000 போலி கடவுச்சீட்டுக்களை தம் வசம் வைத்திருந்ததாகவும், அந்த கனேடிய குடிவரவு, வேலைவாய்ப்பு மற்றும் வீட்டு முகவரிகள் தொடர்பில் பல்வேறுபட்ட மோசடிகளில் ஈடுபட்டு வந்ததாக அறியப்படுகின்றது.

சீன பிரஜைகள் பலருக்கு அங்கிருந்தே  கனேடிய நிரந்தர வதிவிட அனுமதி பெற்றுக்கொடுப்பது  தொடர்பில் இவர் மோசடி செய்துள்ளதாக்க கண்டறியப்பட்டுள்ளது. அவ்வாறே கடந்த 2015 ஆம் ஆண்டு இவரது இரண்டு குடிவரவு ஆலோசனை நிறுவனங்களான NEW CAN CONSULTING மற்றும் WELLONG INTERNATIONAL மூலமாக சுமார் 10 மில்லியன் டாலர்கள் பெற்றுக்கொள்ளப்பட்டதாக விசாரணைகளின் மூலம் அறியப்படுகின்றது.

இதன் அடிப்படையில் கனேடிய வருமான வரி முகாமைத்துவத்திற்கு சுமார் 730,837 கனேடிய டாலர்கள் வரி ஏய்ப்பு செய்துள்ளதுடன் கனேடிய அரசாங்கத்திற்கு 187,901.24 டாலர்கள் மோசடி எய்துள்ளதனை உறுதிப்படுத்தி அண்ணளவாக 920,000 டாலர்கள் தண்டப்பணம் இவருக்கு அறவிடப்படும் உள்ளது.

நியாயமற்ற முன்னெடுப்புக்கள்  

இவரது கைது நடவடிக்கையின் போது கடந்த நவம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்டவிசாரணைகளில் போது  தமது வீடு அடமானம் வைக்கப்பட்டு அதற்கான அரசாங்க வரி செலுத்தப்பட்டு வருவதாக இவர் உறுதிபட கூறியிருந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆயினும் நில அளவையியல் வருமான துறையினர் மேற்கொண்ட விசாரணைகளில் இவரது இல்லம் தொடர்பான எதுவித அடமான தொகையம் பெற்றுக்கொள்ளப்படவில்லை என இனம்காணப்பட்டுள்ளதாக அறியப்படுகின்றது.

இவரது குடிவரவு தொடர்பிலான நடவடிக்கையில் உள்வாங்கப்பட்ட பலரும் மீண்டும் நாடுகடத்தப்பட உள்ளதாக அறியப்படுகின்றது. இதன் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் பலரும் தமது அதிருப்தியினை வெளிப்படுத்தியவண்ணம் உள்ளதாக கூறப்படுகின்றது. அந்தவகையில் இந்த மோசடி நடவடிக்கைக்கு உள்வாங்கப்பட்ட  சுமார் 1677 நபர்களின் குடியுரிமை ரத்து  செய்யப்பட்டு அவர்கள் நாடு கடத்தப்பட உள்ளமை குடிவரவு முகாமைத்துறையினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது 

பாரிய வலையமைப்பில் மாட்டிகொண்டோர் பலர் 

குடியேற்றம் தொடர்பான இந்த பாரிய மோசடியில் பல்வேறு நபர்களும், பல்வேறு விதத்தில் பாதிக்கப்பட்டு இருப்பதாக விசாரணைகளின் போது கண்டறியப்பட்டுள்ளது.அதன் அடிப்படையில் உரிமையாளர்களின் 608 நிரந்தர வதிவிடங்கள் தொடர்பான ஆவணங்கள் போலித்தன்மை எனவும், 221 நிரந்தர குடியுரிமையாளர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டும், 252 பேர் தமது உண்மையான நிரந்தர வதிவிட ஆவணங்களை மோசடிக்கு வழங்கியது தொடர்பில் இனம்காணப்பட்டும் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ள நிலையில் தண்டனைகளுக்கு உள்வாங்கப்படவும் உள்ளதாக அறியப்படுகின்றது.

அத்துடன் சுமார் 1000 இருக்கும் மேற்பட்ட இவரது முன்னாள்   வாடிக்கையாளர்கள் தொடர்பான சகலவிதமான ஆவணங்களும் அழிக்கப்பட்டும் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.


இவ்வாறு பாதிக்கப்பட்ட பெரும்பாலான வாடிக்கையாளர்கள் இணையுடன் சேர்வதற்கான விசா மற்றும் பெற்றோர் மூலமான பிள்ளைகளுக்கான விசா குடியுரிமை தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் என அறியப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் குடியேற்றவாத நாடுகளில் மக்களுக்கான வதிவிடம் மற்றும் பொதுநலன் தொடர்பில் பல நல்ல முன்னெடுப்புக்கள் மேற்கொண்டபோதிலும் மாரு பக்கம் இவ்வாறான எதிர்மைறையான நபர்களின் தவறான அணுகுமுறைகள் காரணமாக சாதாரணமாக கிடைக்கப்படக்கூடிய நல்ல அனுகூலங்களும் பறிக்கப்படும் துர்பாக்கிய நிலையும் ஏற்பட்டு விடுகின்றது.

சட்டங்கள் நமது நல்லொழுக்கத்தினையையே பேணி பாதுகாப்பதற்கென உருவானவை இவ்வகை சட்டங்களை மீறுதலும், ஏமாற்ற செயலின் காரணத்தினாலும், தெரிந்தும், தெரியாமலும் நேரடியாகவும் , மறைமுகமாகவும் பல்லாயிரக்கணக்கான நபர்கள்  பாதிக்கப்பட்டமை பலருக்கும் பாடமாகவே அமைந்துவிட்டது 
.