இடர் முகாமைத்த்துவம் தொடர்பில் அறிந்துகொள்ள வேண்டியவை .

இடர் முகாமைத்த்துவம் தொடர்பில் அறிந்துகொள்ள வேண்டியவை .

துணிந்து முயற்சிப்பதில் உள்ள சிக்கல்களையும் அணுகுமுறைகளையும் அறிந்துகொள்ளுங்கள் 

23/07/2018 | Views 170

தொழிலிலும், வாழ்ககையிலும் சில முடிவுகளை நாம் எடுக்க வேண்டிய கட்டத்தில் நமக்கு துணிவு என்பது கண்டிப்பாக இருக்க வேண்டும். அதன் விளைவானது தோல்வியிலும் முடியலாம் , அல்லது வெற்றியினை ஏற்படுத்தலாம். எவ்வாறாயினும் துணிந்து செயல்படுவது பெரும்பாலும் பலரால் வரவேற்கப்படுவது இல்லை என்பதை அறிந்துகொள்ள முடிகின்றது.

ஒரு சிலர் அசாத்தியமாக, கண்மூடித்தனமாக எல்லா செயல்களிலும் துணிந்து இறங்கிவிடுவார்கள், அவ்வாறே "ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுவது போல " என்ற கருத்தினையும் கூறுவார்கள். இது அணைத்து வகையிலும் சாதகத்தன்மையினை கொண்டு இருப்பது இல்லை . குருட்டு நம்பிக்கையில் எடுக்கும் துணிகர செயல்கள் உயிராபத்தை கூட ஏற்படுத்தும் என்பது மறுப்பதற்கு இல்லை.

எவ்வாறாயினும் துணிகர செயலானது தனித்து ஒருவரை மட்டுமல்ல, பலரையும் பாதிப்பதாகவே அமைந்து விடுகின்றது. துணிவுடன் செயல்படுவது நல்லது என்ற போதிலும் அதனை செயல்படுத்தும்போது அதனில் இருக்க கூடிய சாதக பாதக நிலைகளை அறிந்து அவற்றிற்கு ஏற்றார் போல் நம்மை தயார் புதுத்தி கொள்வதே சிறந்த உபாயம் ஆகும்.

துணிகரமும் பாதுகாப்பும்.

ஒரு செயலை துணிந்து முன்னெடுப்பதன் மூலம் ஒருமனிதனின் Comfort  Zone  எனப்படும் பாதுகாப்பு வலயத்தில் இருந்து வெளியே வரவேண்டியுள்ளது. இந்த நிலையானது எமது வசதித்தன்மையினை பொறுத்து மாறுபடும் சாத்தியப்பாடுகள் உள்ளன . எவ்வாறாயினும் எமது பாதுகாப்பு மற்றும் வசதித்தன்மையின் முக்கியத்துவத்தினை கருத்திற்கொண்டு துணிந்து செயல்படுவது சிறந்ததாக கருதப்படுகின்றது.

ஒரு சிலர் பாதுகாப்பு நிலைகளுக்கு அஞ்சியே இந்த விடயத்தினையும் முன்னின்று செயற்பட தயங்குவதனை இனம்காணக்கூடியதாக உள்ளது. இந்தநிலைபாடானது முன்னேற்றம் மற்றும் வெற்றிக்கான முன்னெடுப்புகளில்  இருந்து அவர்களை அப்பாற்பட்டவர்களாக ஒதுக்கி விடுவதை அனுமானிக்க முடியும்.

துணிகர சிந்தனையின் 4 பரிணாமங்கள் 

மனிதனின் சிந்தனை முறைமைகளை  அடிப்படையாகக்கொண்டு 4 வகைகளாக வகைப்படுத்தியுள்ளது அமெரிக்காவின் மனோவியல் தர்க்க  ஆய்வகமான  Neethling Brain Instrument (NBI.)  

1. உண்மை, தர்க்கரீதியான, இலக்கு-சார்ந்த சிந்தனையாளர்கள்.

2. ஒழுங்கமைக்கப்பட்ட, வழக்கமான அடிப்படையிலான, முறையான சிந்தனையாளர்கள்.

3. தன்னிச்சையான, மூலோபாய சிந்தனையாளர்கள்.

4. மக்கள் சார்ந்த, உணர்ச்சி சிந்தனையாளர்கள்

உணர்ச்சிகளின் வெளிப்படுத்தலின் அடிப்படையில் இந்த பிரிவுகள் வகுக்கப்பட்ட போதிலும் அனைத்து தரப்பினரும் ஏதேனும் ஒரு பிரிவினை மாத்திரம் கொண்ட குணாதிசயத்தினை பின்பற்றப்போவது இல்லை.மேலுள்ள நான்கு குணவியல்புகளும் அவ்வப்போது மனிதனது உணர்வின் வெளிப்படுத்தலில் தலைகாட்டும் என்பது அறிந்ததே. 

பொதுவாக நாம் சந்திக்கும் பெரும்பாலான சூழ்நிலைகளில் நம் நடத்தை மற்றும் சிந்தனை பாணியை பாதிக்கின்றன. அதாவது, நாம் எல்லோரும் சில தெரிவுகள் மற்றும் சிந்தனை பாணியை கொண்டுள்ளன, இது எங்களுக்கு நன்கு தெரிந்த மற்றும் வசதியான முறையில் சூழ்நிலைகளை அணுக உதவுகிறது. சில நடத்தை சிலவற்றிற்கும் ஏன் மற்றவர்களுக்கும் பொருந்தாது என்பதையே இது விளக்குகிறது.

இந்த பிரிவினரின் துணிகரங்களில் இருக்க வேண்டிய பாதுகாப்பு முறைமைகள் 

 1: உண்மை, தர்க்கரீதியான, இலக்கு-சார்ந்த சிந்தனையாளர்கள்

- இந்த குழு உண்மை நிலைக்கு பயந்து செயல்படுபவர்களாக உள்ளனர். இவர்களது துணிகர மனநிலையானது அறிவார்ந்தது. ஏதேனும் இலக்கு ஒன்றிற்காக துணிந்து செயல்படுவது பெரும்பாலும் வரவேற்கப்படுகிறது.

- அவர்கள் எந்த எதிர்மறையான பகுதியையும் பார்க்கமாட்டார்கள் , சரியான அல்லது தவறான ஒன்று என்பது மட்டுமே  வாதமாக இருக்கும்.

- அணைத்து  செயற்பாடுகளும் நேர்மைத்தன்மையினை கொண்டிருக்கும்.

- இவ்வகை துணிகர சிந்தனையாளர்களின் செயற்பாடுகள் பெரும்பாலும் வரவேற்கப்படுகின்றதுடன் வெற்றிகரமாகவே இருக்கும்.


2. ஒழுங்கமைக்கப்பட்ட, வழக்கமான அடிப்படையிலான, முறையான சிந்தனையாளர்கள்.

- இந்தக் குழுவானது கடுமையான காலக்கெடுக்களில் வேலை செய்ய பணிக்கப்படுவார்கள் என்பதால் , காலக்கெடுவை பல சந்தர்ப்பங்களில் விதிக்கப்பட்ட காலக்கெடுவை முடிக்க முடியாமல்  தோல்வியடையும் அபாயம் இவ்வர்களுக்கு உள்ளது.


- அவர்கள் ஒரு திட்டத்தை தொடங்குவதற்கு முன் அனைத்து விவரங்களையும் சேகரிக்க விரும்புகிறார்கள், அதன்படி அவர்கள் அதன்படி திட்டமிட முடியும்.


- அவர்கள் எப்போது வேண்டுமானாலும் தேவைப்படுவதைக் குறிப்பிடுவதற்கு படிமுறை நடைமுறைகளை மேற்கொள்வதால் துணிந்து செயல்படுவதில் உள்ள பாதுகாப்பு தன்மையானது ஓரளவு உறுதிப்படுத்தப்படுகிறது.

 

3. தன்னிச்சையான, மூலோபாய சிந்தனையாளர்கள்.

- இந்த குழு மிகவும் எச்சரிக்கை இல்லாமல் மாற்றங்களை தமது சூழலுக்கு ஏற்படுத்திவிட கூடியவர்கள் ஏற்ப முடியும், எனவே அவசரத்தன்மை மற்றும் அதன் விளைவுகள் பற்றி கவலைப்படுபவர்கள் அல்ல.


- கட்டுப்பாடற்ற பல்திசைகளில் செயல்பட விரும்புபவர்கள்.


- அவர்கள் எதிர்கால நோக்குநிலை மற்றும் எதிர்காலத்தைப் பற்றி உத்தேசித்து சிந்திக்க விரும்புகிறார்கள் என்பதால் முன்னெச்சரிக்கை நிலை குறைந்தவர்களாகவே உள்ளார்கள்.

 

 4. மக்கள் சார்ந்த, உணர்ச்சி சிந்தனையாளர்கள்


- இந்த குழு ஒருவருக்கொருவர் உணர்வுகளை கருத்திற்கொண்டு செயல்படுவார்கள். அத்துடன் பிறரின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருப்பார்கள் 


- சமூகமும் சார்ந்த வேலைகளில் பெரும்பாலும் ஈடுபடும் திறனுடையவர்கள் 


- சகலருடனும் சிறந்த தொடர்பினை பேணுபவர்கள் என்பதனால் பிறர் நலனுக்காக தாம் துணிந்துஎடுக்கும் முயற்சிகளில் விழிப்புடன் இருப்பார்கள் .