ஆரோக்கிய வாழ்வுக்கு பணம் ஒரு தடையல்ல 

ஆரோக்கிய வாழ்வுக்கு பணம் ஒரு தடையல்ல 

குறைத்த செலவில் நிறைவான ஆரோக்கியத்தினை பெற்றுக்கொள்ளும் வழிகள் 

26/07/2018 | Views 103

ஒவ்வொரு மனிதனும் தத்தமது ஆரோக்கிய நிலை தொடர்பில் கூடுதல் கரிசனை காட்டுவதை விரும்புவது இயல்பானதே. உடல் ஆரோக்கியத்துடன் திடகாத்திரமாக நீண்டகாலம் வாழவேண்டும் என்பதே ஒவ்வொரு மனிதனதும் ஆசை ஆகும்.

ஆரோக்கிய நிலையினை பொருத்த வகையில் நல்ல உணவு, சுகாதாரமான வாழ்விடம் போன்ற விடயங்கள்  முக்கியத்துவம் பெறுகின்றது . இன்றய காலத்தில் காணப்படும் வளப்பற்றாக்குறையுடன் ஒப்பிடும் போது இவ்வகை சிறந்த வளங்களை பெற்றுக்கொள்வது  அரிதான செயலாகவே கருதப்படுகின்றது.

சந்தையில் சிறந்த பொருட்களை ஏற்றுக்கொள்வதற்கு நாம் அதிகூடிய பணத்திற்குச்செலவுசெய்ய வேண்டி இருக்கும் என்பது பலரதும் மாறாத கருத்து ஆகும். அதிகளவிலான போலியான பொருட்களும் மலிந்துவிட்ட காரணத்தினால் பலரும் நம்மத்தியில் நோயாளிகளாகவே காணப்படுகின்றனர் .


உண்மையில் எம்மிடமிருக்கும் குறைந்தளவு பணத்தினை வைத்துக்கொண்டு  ஆரோக்கியமான உணவுப்பொருட்களை வாங்கிடமுடியும்? என பலரும் அஞ்சுவது உண்டு.சிறந்த உணவுகள் பலருக்கும் வெறும் கனவாகிப்போனதாக கூறுவதும் உண்டு. அவ்வாறில்லாமல் நம்மிடம் உள்ள குறைந்தளவு பண செலவினங்களைக் கொண்டு அல்ல ஆரோக்கிய வாழ்வினை, உணவினை எவ்வாறு பெற்றுக்கொள்ளலாம் என பார்க்கலாம்.

 

உணவு மற்றும் மளிகை பொருள் கொள்வனவு திட்டத்தினை அமைத்துக்கொள்ளுங்கள் .

உங்கள் மாதாந்த வருமானத்தினை கொண்டு நீங்கள் கொள்வனவு செய்ய கூடிய அத்தியாவசிய பொருட்கள் பற்றி திட்டமிடுதல் அவசியம் ஆகும். அதிலும் முக்கியமாக உணவுப்பொருட்கள் தொடர்பிலான திட்டமிடலின் போது  கண்டிப்பாக ஆரோக்கியமான உணவு கொள்வனவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அவ்வாறே ஆரோக்கியமற்ற தீன் பண்டங்கள் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது,

 பருவ காலத்தில் மொத்தமாக கொள்வனவு  செய்தல் 

பழங்கள், காய்கறிகள் உள்ளிட்டவை அவை உற்பத்தியாகும் பருவ காலத்தில் மிகவும் மலிவான விலைகளில் கிடைத்துவிடும். அதன் பருவமற்ற காலங்களில் மிகவும் அதிகவிலையில் அதேவகை பொருட்கள் கிடைக்கும் . 

உணவு மற்றும் காய்கறிகளை அதன் பருவ காலத்தில் மொத்தமாக கொள்வனவு செய்து வைத்துக்கொள்வது நல்லது. சில உணவு பொருட்கள் பழுதடையும் என்ற பட்சத்தில் அவற்றினை மாற்று உணவுகளாக தயாரித்து வைத்து கொள்வது   

 

உணவு மீதங்களை கொண்டு பிற உணவுகளை தயாரித்தல்.

என்னதான் அளவுகளை அடிப்படையாக கொண்டு உணவுகளை தயாரித்த போதிலும் சில வேளைகளில் அவை மீதமாகி விடுவது அறிந்ததே. இவ்வாறு உணவு மீதமடைந்து அவற்றினை விரயம் செய்து கொட்டி தீர்ப்பதை விட அவற்றினைக்கொண்டு பிற உணவுகளை தயாரித்து கொள்ளலாம். உதாரணமாக  மீதமானால் அவற்றினை கொண்டு பிறவகை உணவுகளை தயாரித்து கொடுக்கலாம். எனவே முடிந்தளவு விரயமாவதை தடுப்பது நல்லது..