அதிக குடிப்பழக்கத்திற்கு அடிமைப்படுவது பெண்களே

அதிக குடிப்பழக்கத்திற்கு அடிமைப்படுவது பெண்களே

கலாச்சார மாற்றத்தின் பிரதிபலிப்பு, பெண்கள் கொண்டுள்ள வளர்ச்சி

30/07/2018 | Views 133

பெண்கள் இன்றைய நவீன காலத்தில் அனைத்துவித துறைகளிலும் ஆண்களுக்கு நிகராகவே நடத்தப்படுவதுடன், அனைத்து விடயங்களிலும் பாலின பேதமின்றி நடந்துகொள்கின்றனர். இது பல்வேறு விதங்களில் வரவேற்க தக்கது என்ற போதிலும் சில நேரங்களில் பலரையும் சங்கடப்படுத்தும் விடயமாகிப்போனதையும்  அறியலாம்.

மதுபாவனை என்பது இருபாலினரின் மத்தில் சகஜமானதொரு விடயமாகிப்போனதை அவதானிக்க கூடியதாக உள்ளது. அதிலும் இப்போதெல்லாம் பல இளம்பெண்கள் மதுபாவனைக்கு ஆண்களை விட அதிகமாக அடிமையாகிவிட்டதனை காணக்கூடியதாயுள்ளது. 

ஆண்களுக்கு நிகராக பெண்கள் காட்டும் முன்னேற்ற நிலைகளில் பல நல்ல விடயங்கள் காணப்பட்ட போட்டதிலும் இவ்வகை பழக்க மாற்றங்கள் ஆபத்தானதாகவும், பலராலும் விரும்பப்படாததாகவும் உளது அறியப்படுகின்றது.

தீங்கின் உச்சம் மதுபாவனை.

மதுபாவனை என்னதான் நாகரிக வளர்ச்சியின் முக்கிய அம்சமாக மாறிவந்தாலும் அதன் பாதிப்பும் பக்க விளைவுகளும் மிகவும் ஆபத்தானதாகவே காணப்பட்டுள்ளது. இதன் பாதிப்பானது ஆண் மது பாவனையாளர்களை விட  பெண்களுக்கு 12% அதிக ஆபத்தினை விளைவிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
 
அதிகநாட்களாக மதுபாவனையில் ஈடுபடும் ஆண்களுக்கு ஏற்படும் பாதிப்பினை விட  பெண்களுக்கு  பாதிப்புக்கள் அதிகமாகும் என ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. 

அதாவது 1841 ஆம் ஆண்டுக்குப் பிற்பட்ட காலப்பகுதியில் இருந்து சுமார் 68 நாடுகளின் அடிப்படையில்  குறிப்பிட்ட 1948 ஆம் ஆண்டுக்கும் 2004 ஆம்  ஆண்டுக்கும் இடையில் பிறந்த நபர்களின் 4 மில்லியன் பெண்களே மதுப்பாவனையாளர்கள் காணப்படுகின்றனர். இந்த நிலையானது 40 களின் பிற்பகுதிகளிலேயே அதிகரித்ததாக கூறப்படுகின்றது.

சமூகம் அங்கீகரித்த மதுபாவனை 

இன்றைய தொழில்நிலையில் ஆண்களுக்கு நிகரான வேலைகளில் பெண்களும் ஈடுபடுவதை காணக்கூடியதாக உள்ளது. அவ்வாறே அலுவலகங்களில் மற்றும் பொது இடங்களில் நடக்கும் சந்திப்புக்கள் மற்றும் கலந்துரையாடல்களில் கண்டிப்பாக மது விருந்துகள் இருப்பதையும் அதில் பெண்களே அதிக மது பாவனையாளர்களாக இருப்பதனையும் காணக்கூடியதாயுள்ளது. இந்த நிலையானது ஆண்களை விட 3.6 மடங்கு அதிகமாகவும் இருப்பதாக கூறப்படுகின்றது.

பெண்களை அதிகம் குடிக்க காரணம் .

ஆண்கள் அதிகமாக குடிப்பதற்கு ஏதேனும் ஒரு காரணத்தினை கண்டிப்பாக முன்வைக்க தவறுவதில்லை. ஆனாலும் பெண் பாவனையாளர்களை ஆய்வு செய்வதில் எதுவித குறிப்பிட்ட காரணிகளும் இனம்காணப்படவில்லை என்று கூறப்படுகின்றது. நாகரீகம், கல்வி, கலாச்சாரம் ஆகியவற்றில் ஏற்பட்ட வளர்ச்சியே இதற்கான காரணி என இனம்காணப்பட்டுள்ளது.

வற்புறுத்தலின் மூலமான மதுபாவனை .

எவ்வாறாயினும் பெண்களின் மதுப்பாவனையினை பொறுத்த வகையில் உணரப்பட்ட ஒரு முக்கிய விடயம் கண்டிப்பான வற்புறுத்தலாகும். பெண் மதுப்பாவனையாளர்கள் தொழில் நிலைகளில் உள்ளவர்களாகவே பெரும்பாலும் இருக்கின்றதாக இனம்காணப்பட்டுள்ளது. அவ்வாறு தொழில்நிலைகளில் உள்ளவர்கள் தம்முடன் பணிபுரியும் சக பணியாளர்களின் வற்புறுத்தலால் மற்றும் தமது தகுதியினை குறைத்துக்கொள்ளவிரும்பாத மனோநிலையினை கொண்டவர்களாக இருப்பதாலேயே மதுபாவனைக்கு தம்மை உட்படுத்தியிருப்பதாக இனம்காணப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் சமூக சூழ்நிலைகளுக்கு ஏற்ப மறைமுக மதுப்பாவனையாளர்களாகவே பல பெண்கள் காணப்பட்டுவதாக அறியப்படுகின்றது.

பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினை.

மதுப்பாவனை காரணமாக பெண்கள் பலருக்கும்  பாரிய பக்க  விளைவுகள் ஏற்படுவதனை மருத்துவ ஆய்வுகள்  கூறுகின்றன. குறிப்பாக 20 இருக்கும் 30 இருக்கும் இடைப்பட்ட வயதினர் இதன் பாதிப்பிற்கு அதிகம் உள்ளாகின்றனர். 

தொடர்ச்சியான மதுப்பாவனையின் மூலம் அதிகபட்ச கருச்சிதைவு மற்றும் புற்றுநோய் உள்ளிட்ட பக்க விளைவுகளும் அதிகமாக நிகழ்கின்றன என அறியப்படுகின்றது 

பெண்கள் ஆண்களுக்கு நிகராக முன்னேற்றமடைந்து வருவது வரவேற்கத்தக்கது என்ற நிலையில் இவ்வகை பாரதூரமான விளைவுகள் அவர்களின் வாழ்க்கை நிலையினை சீரழிப்பதாக உள்ளமை வருத்தமளிப்பதாகவே உள்ளது. எவ்வாறாயினும் நாகரீகத்தின் போர்வையில் இவ்வாறு சீரழிப்புகளை வரவேற்பது கண்டிக்கத்தக்கது ஆகும்.