அதிக உப்பு சேர்த்த உணவுகள் தரும் ஆபத்துக்கள் 

அதிக உப்பு சேர்த்த உணவுகள் தரும் ஆபத்துக்கள் 

தொடர்ச்சியான உப்பு சேர்த்த உணவுகளின் மூலம் ஏற்படக்கூடிய பக்க விளைவுகள் இவைதான் 

01/08/2018 | Views 70

எமது உணவில் கண்டிப்பாக உப்பு சேர்த்து இருக்க வேண்டும் என பண்டைய காலம்தொட்டு வழக்கப்படுத்திக் கொண்டுவிட்ட விடயமாகி உள்ளது. உப்பில்லா பண்டம் குப்பையிலே என்று நாம் உண்ணும் அனைத்து உணவுகளிலும் உப்பினை கட்டாயம் சேர்த்து சுவையூட்டிக்கொண்டே உண்ணத்தொடங்குகின்றோம். அவ்வாறே உப்பிட்ட மறந்து விட்டால் கூட அந்த பதத்திற்கு உப்புச்சுவையினை சேர்த்து உண்பதை வழக்கமாக்கிக் கொண்டு உள்ளோம். 

உணவுக்கு உப்புச்சுவை என்பது எவ்வாறு அத்தியாவசியமாக நாம் கருத்துகின்றோமோ அவ்வாறே உப்பு அதிகமாக உணவில் சேர்ப்பது கூட தீங்கு விளைவிக்கும் என்பதை அறிந்துகொள்ள வேண்டும். அதிகபட்ச உப்பு சுவையானது நமது நாக்கின் சுவை நரம்பில் உவர்ப்பு சுவையினை கூட்டி அந்த பண்டத்தினையே உண்ணவிடாமல் செய்தும் விடுகின்ற அதே நேரம் , தொடர்ச்சியான உப்பு சேர்த்த உணவுகளை உட்கொள்வது உடலுக்கு தீங்கானது 


உப்பின் செயற்பாடுகள் 

நம் உடல்கள் தசை சுருக்கங்கள், நரம்பு பரிமாற்றங்கள் மற்றும் உடலியக்க  திரவியங்கள் மற்றும் பொட்டாசியம் சோடியம்  உற்பத்தி செயற்பாடுகளை  சமநிலைப்படுத்துவதற்கான அனைத்துவித செயற்பாடுகளுக்கும் உப்பானது அவசியமாகின்றது.

அவ்வாறே அதிகபட்சம் தொடர்ந்து உண்ணும் உணவில் உப்பு சேர்தலானது எமது உடலியக்க செயற்பாடுகளில் எதிர்மறையான விளைவுகளை தருகின்றது. அவ்வாறே நரம்புமண்டலம், தமனிகள் மற்றும் மூளை ஆகியவற்றுடன் இதயத்தையும் பாதிக்கும் தன்மையை கொண்டுள்ளது.

உலக நாடுகளில் அதிகப்படியாக பக்கவாத விளைவுகளை ஏற்படுத்தும் மூல காரணியாக உப்பு அதிகம் சேர்ப்பது இனம்காணப்பட்டுள்ளது.அவ்வாறே ஒவ்வொரு வருடமும் புற்றுநோயால் ஏற்பட்ட மரணங்களை விட இவ்வகை பக்கவாத நோயினால் ஏற்பட்ட இறப்பு வீதமே அதிகமாக காணப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

சாதாரணமாக ஒரு மனிதனது தினசரி உணவில் 5 கிராம் உப்பானது சேர்க்கப்படுவது போதுமானதாகும் என்ற போதும் தென்னாபிரிக்க போன்ற மேலைத்தேய நாடுகளில் வசிக்கும் மக்களின் உணவுப்பாவனையில் சேர்க்கப்படும் உப்பின் அளவானது 8.5 கிராமாக மதிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் நாம் தினசரி  உண்ணும் உணவில்  அதிகபட்ச உப்பு சேர்தலினால் ஏற்படக்கூடிய உபாதைகள் இவைதான்.

 

1. இதய நோய்கள். 

உப்பில் உள்ளடங்கும் மூலப்பொருளான சோடியத்தினை அதிகளவில் உட்கொள்வதானது உடலுக்கு தீங்கான விளைவுகளை ஏற்படுத்தும் என கூறப்படுகின்றது. 

தினசரி உணவுகளில் உப்பை அதிகளவு சேர்ப்பதன் மூலம் பக்கவாதம் மற்றும் இதயம் சார்ந்த நோய்களை ஏற்படுத்துவதில் அதிக வாய்ப்புக்களைக்கொண்டுள்ளது.

2. மூளையின் பாதிப்பு.

நரம்பியல் மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் உப்பிலுள்ள அதிக சோடியத்தின் அளவே உயர் குருதியமுக்கம் மற்றும் இருதய நோய்களுக்கான அடிப்படை காரணமாகின்றது.

அவ்வாறே நரம்பு மண்டல பாதிப்புடன் சேர்ந்து மூளையை தாக்குகின்ற பட்சத்தில் புலனுணர்வு செயற்பாடுகளில் சீரற்ற தாக்கம் ஏற்படுகின்றது. 


3. எடிமா நீர்க்கட்டு 

உப்பிலுள்ள அதிகபட்ச சோடியத்தின் காரணமாக முழங்கால், கால்கள் என்பனவற்றில் ஏற்படக்கூடிய நீர்க்கட்டு பாதிப்பே எடிமா நீர்க்கட்டு என அழைக்கப்படுகின்றது.  உடலில் உள்ள உயர் சோடியத்தின் விளைவாக உடல் அவயங்களில் தோன்றக்கூடிய நீர் கட்டுக்களே ஆகும். இவற்றினை உணவுப்பழக்கம் மற்றும் மருந்துகள் மூலம் குணப்படுத்த முடியம்.

 

4. உணவு பழக்கத்தில் ஏற்படும் மாற்றம்.

ஆரம்பத்தில் அதிக உப்பு சேர்த்த உணவுகளை  உட்கொண்டு எமது நாவின் சுவை அரும்புகள் அதற்க்கு பழக்கமடைந்து விடுகின்றன எனவே நாட்பட நாட்பட உப்பினை அதிகளவிலான  தினசரி உணவுகளில்  எடுத்துக்கொள்வதை இயல்பாகவே செய்யத் தொடக்கி விடுகின்றோம். 

 

5. குடற் புற்றுநோய் 

பதப்படுத்தப்பட்ட, துரித உணவுகளில் சுவைக்கென உப்பின் அளவு அதிகமாக சேர்க்கப்படுகின்றன.இவற்றினை அதிகமாக தினசரி உட்கொள்ளும் நுகர்வோருக்கு   குடற்புற்றுநோய் ஏற்படுகின்றது.  அவ்வாறே இந்த நோயின் தாக்கமானது பெண்களை விட ஆண்களுக்கே அதிகபட்சமாக ஏற்படுகின்றது. 

ஒரே இடத்தில் அமர்ந்தபடி பதப்படுத்தப்பட்ட துரித உணவுகளை அளவுக்கு  அதிகமாக உட்கொள்வதால் குடற்புற்றுநோய் தாக்கும் அபாயம் அதிகமாக உள்ளது. 

 

6. சிறுநீரக செயலிழப்பு.

எமது உடலின் கழிவகற்றல் தொகுதியான சிறுநீரகத்தின் செயற்பாடானது உணவுகளில் செய்கைப்படும் மிதமிஞ்சிய உப்பின் காரணமாக தமது செயற்பாட்டினை குறைத்துக்கொள்கின்றன. இதனால் சுரப்புக்களின் சமநிலை பாதிக்கப்பட்டு இரத்தத்தில் சிவப்பணுக்களின் உற்பத்தி வெகுவாக குறைவடைகின்றது.அதன்காரணமாக சிறுநீரகத்தின் செயல்பாடான நச்சகற்றல் திறன் குறைவடைவதுடன் ,  சிறுநீரகம் செயலிழந்தது விடுகின்றது.

 

7. குடல்வீக்கம்.

அதிக உப்பு சேர்தலினால் சமிபாட்டு தொகுதியில் சீரின்மை ஏற்பட்டு நீர் உறிஞ்சலின் அளவு பாதிக்கப்படுவதால் உண்டாகும் நீர்கட்டிகளால் குடல் வீக்கம் ஏற்படுகின்றது. இது ஆண்களை மிகவும் விரைவாக தாக்கும் விடயமாகும்.