நன்றாக உறங்கிட இவற்றை செய்து பாருங்கள்.

 நன்றாக உறங்கிட இவற்றை செய்து பாருங்கள்.

உடல் ஆரோக்கியத்திற்கு உதவிடும் உறக்கம் சரியாக கிடைத்திட யோசனைகள்.

02/08/2018 | Views 213

ஆழ்ந்த உறக்கமும், சரியான ஓய்வும் ஒரு மனிதனுக்கு மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். நல்ல உறக்கத்தின் மூலம் உடலின் ஆரோக்கியம் சீராக பேணப்படும் .அவ்வாறே உணவு கட்டுப்பாடும் , உடலியக்க சீராக்கமும் சிறந்த தூக்கத்தின் மூலமாக வருவதாகும்.

முதல் நாள் இரவில் கிடைக்கப்பெறும் சீரான தூக்கம் மட்டுமே மூளையின் செயல்பாட்டினை சரியாக  இயங்க வைக்கின்றது. அவ்வாறே தூக்கமின்மையால் முதலில் மூளையின் செயற்பாடுகளில் குழப்பநிலை ஏற்படுவதுடன் உடலியக்க முழு செய்யல்பாட்டினையுமே நிலை குலைய செய்துவிடுகிறது.

எவ்வாறாயினும் நல்ல உறக்கநிலையின் மூலம் உணவுக்கட்டுப்பாடு, சீரான உடலியக்க செயற்பாடுகள் நிலவுகின்றன என்பது உண்மையாகும்.

இவ்வகையான சீரான உறக்கமின்மையாலேயே பலரும் இன்றைய காலத்தில் அவதியுறுவதும், பல்வேறு உடல் உபாதைகளுக்கு உள்ளத்தையும் நாம் தினசரி காணக்கிடைக்கிறது. இவற்றினை தவிர்த்து சீரான உறக்கத்தின் மூலமாக எமது உடலும் மனமும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள மேற்கொள்ளவேண்டிய வழிகள் இவைதான்,


உங்கள் தூக்கத்தின் அளவினை தீர்மானியுங்கள்.

அமெரிக்காவின் நேஷனல் ஸ்லீப் ஃபவுண்டேஷனால்(NSF) மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி வயதுவந்தவர்களின் தூக்கத்தின் சராசரி அளவானது 7 முதல் 9 மணிநேரமாக இருக்கவேண்டியது அவசியம் ஆகும். ஆனாலும் ஒருசில காரணிகளால் இந்த அளவு  பெரும்பாலும் மாற்றமடைந்தே காணப்படுகின்றது. கர்ப்பிணி பெண்கள், இரவு பணியாட்கள்,  சாதனங்களின் பாதிப்பு, உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் மனிதனின் சராசரி தூக்கத்தின் அளவில் பாதிப்பு ஏற்படுகின்றது.


அலாரம் இல்லாமல் நீங்கள் விழித்திருக்க முடியுமா?

வழமையாக நீங்கள் உறக்கத்தில் இருந்து விழிப்பதற்க்கென உங்களின் கடிகாரத்தில் செய்துவைத்துள்ள நேர சமிஞை அலாரத்தை ஒலிக்க செயாமலேயே சில நேரங்களில் உங்களுக்கு விழிப்பு வரும். தனிச்சையாகவே அலாரம் ஒலிப்பதற்கு முன்னனதாகவே விழிப்பு  வரநேரிடும் இதற்கான காரணம் மூளையின் செயல்பாடாகும். 

தூக்க நிலையின் மாற்றங்கள் மூளையின் செயல்பாடுகளின் மூலம் கட்டுப்படுத்தப்படுகின்றது. எனவே எமக்கு தேவையான, அளவான தூக்க அட்டவணையினை நாமே சரிசெய்ய வேண்டியுள்ளது. அதற்கு எமது  செயல்பாடுகளும் ஆதிக்கம் செலுத்துகின்றது.

உங்களின் உணர்வுநிலை எப்படி?

உங்களின் உணர்வுநிலை மாற்றங்களுக்கு ஏற்ப தூக்கமும்  வேறுபடுகின்றது. மனசோர்வு, துக்கம் போன்ற இறுக்கமான மனநிலைகளில் தூக்கம் ஏற்பட வாய்ப்பில்லை. அவ்வாறே மகிழ்ச்சியான தருணங்களில் நல்ல தூக்கம் ஏற்படும்.


மது அருந்துவது சிறந்ததா?

ஒரு சிலருக்கு மது மற்றும் புகைபிடித்தலின் பின்னர் நல்ல தூக்கம் ஏற்படும் என்று கூறுவது உண்டு ஆனால் அந்த நிலையானது உடலில் பாதிப்பை ஏற்படுத்தும். போதை உடலில் ஏற்படுத்தும்  தாக்கமானது  உறக்கத்தை குலைப்பதாகவே அமைகின்றது. உடல் சோர்வின் மூலம் உருவாகும் தூக்கமே மது பாவனைகள் பின்னர் ஏற்படும். அவை எவ்வகையிலும் நல்ல உறக்கநிலையினை பெற்றுத்தராது. மாறாக உடலியக்கத்தின் சீரான தன்மையினை குலைத்துவிடும்.


உறவின் பின்னரான தூக்கம் நல்லதா?

துணையுடனான கலவியின் பின்னர் உடலியக்க செயற்பாடுகளில் சீர்தன்மை நிலவுகின்றது. அத்துடன் உச்சநிலைக்கு பின்னர் உடலில் ஏற்படும் சோர்வு நல்ல உறக்கத்தினை வரவழைக்கும். இது ஹார்மோன்களின் சீர் தன்மையினை பேணுவதுடன் உடல் இயக்கத்தின்படி சீர்படுத்துகிறது.