பெண்களை கவர ஆண்கள் செய்யவேண்டியது இவைதான்

பெண்களை கவர ஆண்கள் செய்யவேண்டியது இவைதான்

பெண்களை இலகுவில் கவர்வதற்கு இவற்றை செய்து பாருங்கள்.

07/08/2018 | Views 308

எதிர் பாலின கவர்ச்சி என்பது பொதுவாக அனைவருக்கும் இருக்க கூடிய ஒரு உணர்வு, அதிலும் மிக முக்கியமாக பல இளம் பெண்களை கவர்வதற்கென பல ஆண்கள் பல்வேறு விதமாக பல்வேறு பிரேயெத்தனைங்களை செய்வது வழக்கம். இது மனித இனத்திற்கு மட்டுமல்ல விலங்குகள் கூட தமது எதிர் பாலினத்தை  கவரவென பல்வேறு செயல்களை செய்துவருவது தெரிந்ததே 

விலங்குகள் ஒரு புறமிருக்க மனிதர்கள் இவ்வகை எதிர்பாலினத்தை கவர , குறிப்பாக ஆண்கள் பெண்களை தம் வசம் வைத்துக்கொள்ள என்னென்ன யுக்திகளை கடைபிடிக்கலாம் என பாப்போம், 


1. ஆடை 

பெண்களை கவர்வதற்கு உங்கள் உடல்வாகுவிற்கு ஏற்றாற்போல ஆடைகளை அணிவது விரும்பத்தக்கது. அதிலும் அலுவலக அல்லது வெளிப்புற ஆடைகளை அணிவதில், ஏன் சீருடை என்ற போதும் அதனை உங்கள் உடலுக்கு ஏற்ப சீரமைக்கப்பட்டு , சுத்தமான, நேர்த்தியான, உங்கள் நிறத்திற்கு ஏற்ப ஆடைகளை அணிவதன் மூலம் பெண்களை வசீகரிக்கலாம்..

அணியும் ஆடை நேர்த்தியாக இருந்துவிட்டால் பல பெண்களை சாதாரணமாக கவர்ந்து விடலாம். பளிச்சிடும் வண்ணங்களை அல்லாமல் சாதாரண இயல்பான நிறங்களை கொண்ட ஆடைகளைக்கூட உடலுக்கு ஏற்ப நேர்த்தியாக அணிந்துகொள்வது சிறந்தது.

2. தலைமுடி 

உங்களின் தலைமுடி எவ்வகையானதாக கூட இருக்கலாம். அவற்றை உங்களின் உடல் மற்றும் முக அமைப்புக்கு ஏற்ப அமைத்துக்கொள்வதே சிறந்தது. நவீன முறை என்று தற்போது உள்ள விதம் விதமான தலைமுடி அலங்காரங்கள்  சில வேளைகளில் உங்களின் தோற்றத்தையும், முக அமைப்பையும் மாற்றிவிடும். எனவே முதலில் உங்களின் முக அமைப்பினை கவனித்து அதன் அமைப்பிற்கு ஏற்ப தலைமுடியினை சீராக்குவது நல்லது.

 

3. தாடி 

அண்மைய ஆய்வொன்றில் பெண்களுக்கு ஆண்கள் தாடி வளர்ந்திருப்பது மிகவும் பிடித்த விடயமாக கருதப்படுகின்றது. அதனையும் கூட உங்களின் முக அமைப்பிற்கு ஏற்ப அமைப்பதுவே சிறந்தது.

முதலில் உங்களின் முக அமைப்பிற்கு தாடி இருப்பது சரியாக இருக்குமா என பாருங்கள், அதன் பின்னர் அந்த தாடியை எவ்வாறு அமைத்துக்கொள்வது என்பதை கவனியுங்கள். எந்தவொரு அமைப்பும் அதன் இயல்பு நிலையிலேயே பலராலும் கவரப்படுவது என்பதால் உங்களின் இயல்பினை மாற்றிவிடாத தோற்றத்தை உருவாக்கிக்கொள்ளுங்கள் 

 

4. புருவங்கள்.

கண்கள் எவ்வாறு பிறரை வெளிப்படுத்தும் கண்ணாடி போன்றதோ அவ்வாறே அவற்றிற்கு அழகினை மெருகேற்றுவது புருவங்கள் தான். அடர்ந்த காட்டு போன்ற புருவங்களை வைத்திருக்காமல் உங்களின் கண்களின் அமைப்பிற்கு ஏற்ப புருவத்தினை சீராக்கிக்கொள்வது சிறந்தது..

உங்களின் கண்களின் அளவு பெரியது என்றால் புருவங்களின் அளவை குறைத்துக்கொள்ளலாம். இவ்வாறு கண்களின் தோற்றத்தை வைத்து புருவத்தை சீர் செய்து பெண்களை கவரலாம்.

 

5. நறுமணம்.

கண்களால் காணும் தோற்றத்தைவிட மனத்தால் நுகரும் நறுமணத்திற்கு சக்தி அதிகம். பெண்களை முதலில் கவருவதற்கு நீங்கள் நல்ல நறுமணம் கொண்ட வாசனை திரவியங்களை பயன்படுத்துவது அவர்களின் உணர்வினை தூண்டி உங்களை மையல் கொள்ள செய்யும்..

சில வாசனை திரவியங்கள் பலருக்கும் ஒவ்வாமல் இருக்கும். அதன் உச்சபட்ச நறுமணம் நமது மனதினை வெறுப்படைய செய்யும் . நல்ல நறுமணம் பிறரை உங்கள் வசப்படுத்தும் வசியத்தன்மையினை கொண்டிருக்கும்  . எனவே நீங்கள் பயன்படுத்தும் வாசனை திரவியங்களை கொண்டு பெண்களை கவர்ந்து உங்கள் பக்கம் வைத்துக்கொள்ளலாம்