ஆண்களை அச்சுறுத்தும் பெண்களின் பிரச்சினை.

ஆண்களை அச்சுறுத்தும் பெண்களின் பிரச்சினை.

பெண்களுக்கு வர கூடிய உடல் உபாதைகள் ஆண்களுக்கும் வரும்.

13/08/2018 | Views 328

மனிதனின் உடலமைப்பானது பாலின வேறுபாட்டின் வகையில் வித்தியாசத்தை கொண்டிருப்பது ஆகும். எவ்வாறாயினும் பல நாட்பட்ட நோய்களைத் தவிர பாலினம் சார்ந்த நோய்கள் என்ற வகையில் ஆணுக்கும், பெண்ணுக்கும் அதன் தன்மை வேறுபட்டு இருப்பது அறியப்படுகின்றது.

சில நோய்களும் , உபாதைகளும் ஆண்களுக்கு வேறாகவும் , பெண்களுக்கு வேறாகவும்  ஏற்படுவதை அவதானிக்கலாம். அவை பாலின உபாதைகளாக இருப்பதை அறிவீர்கள். இவ்வகை வேறான அல்லது தனித்துவமான உபாதைகள் கூட ஆண், பெண் இருவருக்குமான பொதுவான உபாதைகளாக இருப்பதை நீங்கள் அறிவீர்களா? குறிப்பாக பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய மாதவிடாய், மார்பகப்புற்றுநோய் போன்ற ஆண்களுக்கும் ஏற்படுகின்றது என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

இவ்வாறு பெண்களுக்கு மட்டுமே தனித்துவமான நோய்களில் எவை ஆண்களுக்கும் ஏற்படுகின்றன என பார்ப்போம்.


மாதவிடாய்.


பெண்களுக்கு மட்டுமே ஏற்படக்கூடிய உபாதை மாதவிடாய் ஆகும். இது ஆண்களுக்கும் ஏற்படுவதாக அறியப்படுகின்றது. வயது செல்லச்செல்ல அதிகரிக்கும் ஹார்மோன் சுரப்புகள் மாற்றத்தினையே ஆண்களுக்கான மாதவிடாய் என கூறுகின்றனர்.

அதீத சோர்வு, மனஅழுத்தம், பாலியல் செயல்திறன் குறைவு மற்றும் சிறுநீரில் குருதி கசிவு போன்றன இதன் அறிகுறிகள் ஆகும். உடலில் சுரக்கும் தெஸ்தெஸ்திரோன் சுரப்பி ஆண்களுக்கு வயது செல்லச்செல்ல குறைவடைகின்றது. இதனால் ஆண்களில் வெகு சிலருக்கு மாத்திரம் இந்த உபாதை ஏற்படுகின்றது.

 

மார்பக புற்றுநோய் 

எடுப்பான மார்பகங்களை கொன்ற பெண்களுக்கு மட்டுமல்ல, அதைவிட குறைவான மார்பக அளவினை கொண்ட ஆண்களுக்கும் மார்பக புற்றுநோய் ஏற்படுகின்றதாக அறியப்படுகின்றது.
அந்தவகையில் ஆண்களின் மார்பு காம்புகளுக்கு  கீழே அல்லது தோல் பட்டைகளுக்கு  கீழ் புறமாக ஏற்படும் கட்டிகள் மார்பக புற்றுநோய் கட்டிகளாக கொள்ளப்படுகின்றன .

அதிக பருமன், அதிகளவிலான மது மற்றும் புகைத்தல் பாவனை, மற்றும் கலீரலில் ஏற்படும் பாதிப்பு போன்ற இவ்வகை மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான காரமாக கருதப்படுகின்றது. இதன் போது ஏற்படும் மார்பக புற்று நோய் கட்டிகளில் வலிகள் ஏற்படாது. அத்துடன் நோயாளிகளுக்கு தோல் மற்றும் சிறிய அளவிலான அறிகுறிகள் தென்பட்டாலும் வைத்திய ஆலோசனை பெறவேண்டியது முக்கியத்துவம் வாய்கின்றது.

 

ஒஸ்திரியோ புரோசிஸ் என்புருக்கி.

பொதுவாக பெண்களை மட்டுமே வெகுவாக தாக்கும் இயல்பு கொண்ட என்புருக்கி நோயானது ஆண்களையும்  தாக்கும் என நம்பப்படுகின்றது. பெண்களின் மாதவிடாய் கால முடிவின் பின்னர் ஏற்படும் எலும்புகளின் பலவீனம் பொதுவாக பெண்களை மட்டும் தாக்காமல் ஆண்களையும் தாக்குவதாக அறியப்படுகின்றது.

எலும்புகளை பலவீனமடைய செய்து இலகுவில் நொறுக்கிவிடும் தன்மையினை கொண்டிருப்பது ஆகும். இந்த உபாதை வந்த பிறகே இதன் தாக்கம் தென்படுவதனால் அமைதியான நோய் என்று அழைக்கப்படுகின்றது. குறிப்பாக இடுப்பு, முதுகு, மணிக்கட்டு ஆகிய இடங்களை தாக்குவதால் பாரிய விளைவுகளை  ஏற்படுத்தும் நோயாகவும் கருதப்படுகின்றது.


மண்டலிய செம்முருடு லூபஸ் 

பெண்களின் உடலுறுப்புக்களில் எந்த பாகத்திலுமுள்ள திசுக்களை தாக்கும் நோயாக லூபஸ் காணப்படுகின்றது.இந்த நோய் ஏற்பட்டால் பார்வைத்திறன் குறைபாடு , மார்புவலி ,மூச்சு விடுவதிலான சிரமம், மற்றும் வாய்ப்புண் போன்ற அறிகுறிகள் தென்படும் .

ஒரு சிலருக்கு ஆண்மை குறைவு ஏற்படுவதன் காரணம் இவ்வகை லூபஸ் நோய் என கூறப்படுகின்றது. இதனால் நோயெதிர்ப்பு சக்தி குறைபாடு அதிகளவில் காணப்படுகின்றமையும் அறியப்படுகின்றது.

 

உணவு கோளாறுகள்.

பதின்மை வயது ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் உடல் கோளாறு ஆகும். இதற்கான காரணம் அனோரெக்சியா , மற்றும் பலீமியா போன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு பொதுவாக உணவு கோளாறு ஏற்பட சாத்தியக்கூறுகள் உள்ளன.  

முறையே உணவு கோளாறுக்கு காரணி என்று கூறப்பட்டாலும் இவை உயிருக்கு ஆபத்தான விளைவினை ஏற்படுத்திடும் என கூறப்படுகின்றது.

 

 


இதுவரையும் பெண்களுக்கு மட்டுமே ஏற்படும் என நம்பிவந்த சில உபாதைகள் ஆண்களுக்கும் ஏற்படுவதை அறிகிறோம். இது நோய்கள் என்பதை விட அதீதமான உபாதைகள் என்றே கருதப்படுகின்றது. இவ்வகை உபாதைகளுக்கு மூலகாரணியாக  எமது உணவு முறைகள் மற்றும் பழக்க வழக்கங்கள்  காரணியாகும் என அறியப்படுகின்றது.