திகில் படங்கள் பார்ப்பது நல்லது 

திகில் படங்கள் பார்ப்பது நல்லது 

பயத்தினை வரவழைக்கும்  திகில் படங்கள் தரும் உடல் ரீதியான நன்மைகள்

21/08/2018 | Views 149

எம்மில் பலருக்கு பல்வேறுவிதமான பொழுதுபோக்கு விடயங்கள் பிடித்திருக்கும். தற்பொழுது உள்ள இளைய தலைமுறையினர் பொதுவாக இணையம், செயலிகள் என்ற குறுகிய வட்டத்துக்குள்ளேயே தமது பொழுதுபோக்கினை சுருக்கி கொண்டாலும் இதற்கு முந்தய தலைமுறையினர் வரை பல்வேறு வகையான விதம்விதமான பொழுதுபோக்கு அம்சங்களை தன்னகத்தே வைத்திருந்தனர் என்பதை மறுத்து விட முடியாது,

குறிப்பாக எந்த வயதினராக இருந்தாலும் படம் பார்ப்பதில் இன்னமும் ஆர்வம் மிக்கவர்களாகவே இருப்பது வழக்கம் அதிலும் சுவாரஷ்யம் மிக்க திகில் படங்களை கண்இமைக்காமல் பார்ப்பது என்பது அனைத்து வயதினருக்குமான பிடித்தமான பொழுது போக்கு என்பது உண்மை.

பொதுவாக நமக்கு அறிவுறுத்தப்படுவது யாதெனில் இவ்வகை திகில் படங்களை பார்ப்பது உடலுக்கும், மனதிற்கும் தீங்கானது என. திகில் படங்களை பார்ப்பதால் மாரடைப்பு ஏற்படும் என்பதை கூட பலர் வலியுறுத்தி வந்தது உண்டு. அவ்வாறு இல்லாமல் இவ்வகை திகில் படங்கள் நமது உடல் ஆரோக்கியத்திற்கு எவ்வாறு ஒத்துழைக்கின்றன என்பதை பாப்போம்.


மன அழுத்தம் குறையும்.

இன்று நம்மில் பலருக்கும் இருக்கும் பாரிய பிரச்சினை மனஅழுத்தம் ஆகும். வேலை மற்றும் குடும்ப சூழல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தினம் தினம் முகம்கொடுக்க நேரிடும் நமக்கு மனஅழுத்தம் என்பது சாதாரணமாகவே வரும் . இதனை திகில் படங்களை பார்த்தான் மூலம் குறைத்துத்துக் கொள்ள முடியும் என உளவியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

திகில் திரைப்படங்களை பார்க்கும்போது நமது மூளை அதில் வரக்கூடிய சுவாரஷ்யம் மிக்க காட்சிகளை கண்களின் மூலம் உள்வாங்கிக்கொண்டு செயற்படுவதன் மூலமாக உடலியக்க சுரப்பிகளில் ஒன்றான அட்ரீனலின் (adrenaline) ஹார்மோன் சுரக்கப்படுகின்றது. இது பொதுவாக மன அழுத்தத்தினை குறைக்கும் வல்லமை உடையது என மருத்துவ ஆய்வாளர்கள் அறியத்தந்துள்ளனர்.


பய உணர்வினை (PHOBIA) போக்கும்.

பயம் என்ற உணர்வானது மனிதனின் பல முன்னேற்றகரமான நிகழ்வுகளுக்கு எப்போதுமே தடையாக இருப்பது என அறியப்படுகின்றது. வயது வரம்பின்றி பயம் என்பது மனிதனை ஆட்கொள்ளும்பொழுது பல சந்தர்ப்பங்களில் நமக்கு எதிர்மறையான விளைவுகளை உடல் மற்றும் மனதுக்கு ஏற்படுத்தும். 

திகில் படங்களானவை முதலில் பய உணர்வினை ஏற்படுத்தும் அதே நேரம் பார்க்க பார்க்க அந்த பய உணர்வினை குறைத்துக்கொள்ள முடிகின்றது. இம் முறையில்  பலருக்கு பயத்தை போக்கி திகிலான படங்கள் தைரியத்தை வரவழைப்பதாக அறியப்படுகின்றது 

 

எதிர்மறை உணர்வுகளை போக்கும்.

மனிதனுக்கு இருக்கும் உணர்வுகளில் நேர்மறையாகவும் ,எதிர்மறையாகவும் செயல்படுத்தவைக்கும்  பல உணர்வுகள் உள்ளன. அவற்றினை அடிப்படையாக வைத்தே மனிதனது செயற்பாடுகளில் நல்லதும் , கெட்டதும் வெளிப்படுத்தப்படுகின்றன.

மனிதனுக்கு ஏற்படக்கூடிய எதிர்மறை உணர்வுகளை இவ்வகை திகில் திரைப்படங்களில் வெகுவாக காணலாம். அவற்றினை காண்பதுதான் அவற்றில் இருந்து எப்படி வெளிவரலாம் என்பதனையும் படங்களில் காட்ட தவறுவதில்லை. இவ்வகை செயற்பாடுகள் மனிதனுக்கு எதிர்மறை சிந்தனைகளில் இருந்து  எவ்வாறு மீளலாம் என்பதனையும் புரியவைப்பதாயுள்ளது என அறியப்படுகின்றது.


நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது 


மனிதனுக்கு உள்ள மனஅழுத்தம் மற்றும் இதர பிற நோய்களுக்கான முக்கிய காரணி இரத்த சுற்றோட்டமும் ரத்த அழுத்தமும் கணிசமான அளவு குறைவதே ஆகும். இவற்றினால் சோர்வுநிலை, மந்தமான வெளிப்பாடுகள் போன்ற ஏற்பட்டு  முடக்கி விடுவதும் உண்டு 

திகில் திரைப்படங்களானவை பயம், விறுவிறுப்பு மற்றும் சுவாரஷ்யம் ஆகியனவற்றை ஏற்படுத்தும் நோக்கில் தயாரிக்கப்படுவது . இவை மனிதனது திகில் உணர்வினை அதிகப்படுத்துக்கொள்வதில் வெற்றி பெறுபவை. இவ்வகை திகில் சுவாரஷ்ய உணர்வுகளால் இரத்த சுற்றோட்டம் அதிகரிக்கும், இதயம் மிக வேகமாக இயங்கும். இவற்றின் அடிப்படையில் உள்ளது உறுப்புக்கள் துரித கதியில் செயல்படுவதுடன் ஹார்மோன்கள் சீராக சுரக்கப்படுகின்றதாகவும் . இதனால் மன  அழுத்தம் குறைவடைந்து நோய் எதிர்ப்பு சக்தி அதிகப்படுத்தப்படுகின்றதாக ஆய்வின் மூலம் அறியப்படுகின்றது.


கலோரிகள் குறைக்கப்படுகின்றது.

மனிதனின் உடல் பருமன் ஒரு பாரிய பிரச்சினையாக தற்காலத்தில் உலா வருகின்றது. சமிபாடடைந்த உணவுகளில் இருந்து வெளியேற்றப்படும் கலோரிகளின் அளவு குறைவதனால் பலருக்கு பலவித நோய்கள் ஏற்படுகின்றதாக அறியப்படுகின்றது.

திகில் படங்களை ப்பார்க்கும்போது ஏற்படும் படபடப்புத்தன்மை மற்றும் இரத்த ஓட்டம் அதிகரிப்பதன் மூலம் அதிக வியர்வை உடலில் இருந்து   வெளியேற்றப்படுகின்றது. அதுமட்டுமன்றி சுமார் 113 கலோரிகள் இவற்றால் இழக்கப்படுவதும் ஆய்வொன்றின் மூலம் இனம்காணப்பட்டுள்ளது.