உங்கள் ஞாபக சக்தியை மேம்படுத்திக்கொள்வது எப்படி

உங்கள் ஞாபக சக்தியை மேம்படுத்திக்கொள்வது எப்படி

மூளையின் செயல்திறனை ஊக்கப்படுத்திக்கொள்ள சில யோசனைகள்.

07/09/2018 | Views 196

மனிதனின் வலுவான நினைவாற்றல் என்பது உடல் மற்றும் மூளையின் ஆரோக்கியத்தினை சார்ந்தே இருப்பது ஆகும். கல்வி கற்கும் மாணவராயினும், வயதில் முதிர்ந்த பெரியவராயினும் உணங்கள் ஞாபக சக்தியின் ஆற்றலானது உங்கள் முழு செயல்பாட்டிற்கும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.

வயதின் முதிற்சிக்கு ஏற்ப மூளையின் செயல்பாடு வலுவினை குறைத்துக் கொள்வதே மனித  உடலமைப்பின் இயல்புத்தன்மை ஆகும். ஆயினும் ஒரு சிலருக்கு இருக்க கூடிய ஞாபக சக்தியானது அவரது திறமையான செயல்பாட்டினை ஊக்கப்படுத்துவதாக இருப்பதனை உணரக்கூடியதாக உள்ளது.

சிறந்த ஞாபக சக்தி கொண்டிருப்பது சிறந்த ஆரோக்கிய நிலையினை எடுத்து காட்டுவது ஆகும். வயதின் முதிர்ச்சிக்கு ஏற்ப மூளையின் செயல்திறன் மாற்றமும் நரம்பு தளர்ச்சியாகவே கருதப்படுகின்றது. சரியான தூண்டல் செயல்பாடுகளின் மூலம் எவ்வகை வயதிலும் உடல் ஆரோக்கிய  நிலைக்கு ஏற்ப மூளை நரம்புகள் தூண்டப்பட்டு அவற்றின் செயற்பாட்டினை சீரமைக்கலாம் என மருத்துவ ஆய்வுகள் நிரூபித்துள்ளன.


மூளையின் செயல்பாடு கற்றறிதலின் மூலமும், ஞாபகத்திறனின் மூலமும் திறம்மிக்க மீள் வடிவம் பெறுவதாக மருத்துவ ஆய்வுகள் அறியத்தருகின்றன. அவ்வாறு மூளையின் திறனை மேம்படுத்திக்கொள்வதற்கு பின்வரும் யுக்திகளை கடைப் பிடித்துக்கொள்ளவும் முடியும் எனவும் பரிந்துரை செய்கின்றனர்.

 

அறிவுக்கு வேலை கொடு 

உங்கள் வயது முதிர்ச்சி மற்றும் உடல் வளர்ச்சிக்கு ஏற்ப மூளையும் தமது நரம்பியல் தொகுதியை விஸ்தீரணப்படுத்திக் கொள்வதுடன் அதன் செயல்திறன் இயக்கத்தினையும் அதிகப்படுத்திக்கொள்வதனை அறிந்துகொள்ளலாம். இது விரைவாக நன்கு அறியப்பட்ட பிரச்சினைகளை தீர்க்கவும், குறைந்தபட்ச மனநல முயற்சிகளுடன் பழக்கமுள்ள பணியை நிறைவேற்றவும் உதவுகிறது. அவ்வப்போது உங்கள் மூளையை செயல்பட வைக்கும் விதமாக சில குழப்பத்தண்மையான செயல்பாடுகளை செய்துகொள்வது நல்லது என பரிந்துரைக்கப்படுகின்றது.


உடல் தசைகள் வலிமைப் பெறுவதற்க்கென எவ்வாறு உடற்பயிற்சிகள் மற்றும்  உடலியக்க செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றனவோ அவ்வாறே மூலையின் செயல் திறன் அதிகரிப்பிற்கு அவற்றின் செயல்பாட்டினை நன்கு தூண்டும் வகையில் செயல்படுத்த வேண்டும். இதன் மூலமுமே ஞாபக சக்தி அதிக வலிமை பெறுகின்றது.


உடற்பயிற்சியை இடைநிறுத்த கூடாது.


உடல் வலிமை பெற நீங்கள் செய்யும் பயிற்சிகள் உடலியக்க செயல்பாடுகளை ஊக்கப்படுத்தி அவ்வாறே மூளையின் செயற்பாட்டினையும் அதிகரிக்க செய்கின்றது. அதிக உடற்பயிற்சி நிலையின் பொழுது உடல் வியர்வை வெளியேற்றப்படுவதுடன், இரத்த சுற்றோட்டம் அதிகப்படுத்தப்படுகின்றது . இதன் மூலம் உடலியக்க செயல்பாடுகள் மேலும் ஓட்ஸியேற்றப்படுகின்றன. அவற்றின் மூலம் சுரப்புக்களின் செயல்பாடு அதிகப்படுத்தப்பட்டு மூளையின் செயல் திறன் அதிகரிக்கப்படுகிறது.

சில உடலியக்க சுரப்புகள் மூளையின் ஞாபக சக்தியினை வலுவடைய செய்யும். இது உடல் மற்றும் உளவியல் ஆரோக்கியத்தினை பேனச் செய்யும். உடல் பயிற்சி இடை நிறுத்தப்படும் நிலை ஏற்பட்டால் இவ்வகை செயற்பாடுகளில் தடங்கல் ஏற்பட்டு மூளையின் செயல்திறனும் , ஆற்றலும் குறைவடையும் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.


அளவான தூக்கம் அவசியம் ஆகும்.

தூக்கத்தின் அளவும் , எமது ஓய்வும் மூளையின் செயல்பாட்டினை வலுவடைய செய்வது ஆகும். 95% சதவீதம் வளர்ந்தவர்களுக்கும் தினசரி 7 முதல் 9 மணிநேர தூக்கம் அத்தியாவசியம் ஆகின்றது.உடலின்  செயல்பாடுகள் எவ்வகையில் மூளையை துரிதகதியில் சொல்லப்பட வைக்கின்றதோ, அவ்வாறே ஆழ்ந்த உறக்கமுமம் ஓய்வும் மூளையை சீராக செயல்பட வைத்திருக்கவும் உதவுகின்றது.

நினைவாற்றலை சீரான தூக்கம் சரிப்படுத்தும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். அதாவது உடலின் ஓய்வு நிலையின் போது சுரக்க்கப்படும் சுரப்புகள் மூளையின் நினைவாற்றல் மைய செயல்பாட்டினை வலுவடைய செய்வதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே அளவான தூக்கமும் மூளையின் ஞாபகசக்தியை வலுப்பெறச் செய்வதற்கு அவசியம் ஆகும்.


நண்பர்களுடன் மகிழ்ச்சியை  பகிர்தல் 

தனிமை நிலையினை விட உறவுகள் மற்றும் சூழ இருப்பவர்களின் மூலமாக நாம் மனோவியல் ரீதியில் சில மாற்றங்களை உணரக்கூடியதாக இருப்பதை அவ்வப்போது உணர்வீர்கள். உங்களை சூழ இருக்கும் நல்ல உறவுகள் மூலமான விடயங்கள், கருத்துக்களை பகிர்ந்துகொள்வதன் மூலம் உடல் மற்றும் மனோவியல் ரீதியில் நீங்கள் வலிமை பெறுவதை இனம்காணலாம். 

மகிழ்ச்சி நிலையின் போதும் கூட உடலியக்க செயல்பாடுகளில் மாற்றங்கள் நிகழ்கின்றன. சிரிப்பு, மகிழ்ச்சி போன்ற எமது மனோவியல் உணர்வுகளை வெளிக்காட்டும் பொழுது சுரக்கப்படும் சில சுரப்புக்கள் மூளையின் செயல்திறனை வலிமையை பெற செய்கின்றது என அறியலாம். மனதிற்கு ஆறுதலும், மனசோர்வில் இருந்து விடுவிப்பும் பெறக்கூடிய அதே நேரத்தில் இவ்வகை நேர்மறை சாதக நிகழ்வுகளால் மூளையின் ஞாபகசக்தி தூண்டப்பட்டு வலிமை அடைகின்றது.


மனஅழுத்த நிலைகளை அறிந்துகொள்ளுங்கள் 

உடலையும், மூளையையும் வெகுவாக தாக்கக்கூடிய ஒரு விடயம் மனிதனுக்கு உருவாகும் மனசோர்வு மற்றும் மனஅழுத்தம் ஆகும். இதன் தாக்கத்தின் காரணமாக பலரும் பல்வேறு விதமாக மனோவியல் மற்றும் உடலியல் பாதிப்புக்களுக்கு முகம்கொடுக்க வேண்டி இருக்கின்றதனை நாம் தினமும் காணக்கூடியதாக உள்ளது. இதன் பாதிப்பு மூளையின் ஞாபகத்த திறனை வெகுவாக பாதிப்படைய செய்வதனை அறியக்கூடியதாக உள்ளது.

நாட்பட்ட மனஅழுத்த காரணங்கள் காரணமாக மூளைச்சிதைவு, நரம்புத்தளர்ச்சி மற்றும் உடலியக்க கோளாறுகள் போன்ற ஏற்படுவதனை அறியக்கூடியதாக உள்ளது. தற்காலத்தில் இவ்வகை மனஅழுத்தகாரணிகளின் நிமித்தம் பலரும் பல்வேறுபட்ட புதிரான நோய் தாக்கங்களுக்கு உள்ளாக்குகின்றனர் என்பதனை தெரிந்துகொள்ளுங்கள்.

மனஅழுத்தம் ஏற்படுவதற்கான காரணிகள் இனம்காணப்பட்டால் அவற்றில் இருந்து விடுபடுவதற்கான யுக்திகளை அறிந்து மனஅழுத்ததில் இருந்து வெளிவருவதே அனைத்துவித சிக்கல்களுக்குமான சரியான தீர்வாகும் . 

 

 


பொதுவாக நீரிழிவு, இதயநோய், சிறுநீரக பாதிப்பு போன்றனவே தற்காலத்தில் உள்ள அனைவரையிம் வெகுவாக பாதிக்கும் நோய்கள் ஆகும் இவை பொதுவாக மூளையின் ஞாபக திறனையும் பாதிப்பதாக அறியப்படுகின்றது. உடல் வலிமை எவ்வகையில் மனிதகனுக்கு அவசியமமானதோ, அவ்வாறே மூளையின் ஞாபகவலிமையும் மனிதனுக்கு இன்றியமையாதது ஆகும். எனவே உடல் மற்றும் மூளையின்  வலிமைக்கு இவ்வகை  செயல்பாடுகளை பின்பற்ற தவற வேண்டாம்.