தேவையற்ற யோசனைகளை தடுக்கும் வழிகள் 

தேவையற்ற யோசனைகளை தடுக்கும் வழிகள் 

மிதமிஞ்சிய யோசனைகளை எவ்வாறு குறைத்துக் கொள்வது?

10/09/2018 | Views 399

எந்தவொரு விடயத்தினையும் அதீத கற்பனையுடன் சிந்திக்க தொடங்கிவிட்டால் அது பல்வேறு இன்னல்களுக்கு நம்மை முகம்கொடுக்க வைத்துவிடும். தேவையற்ற அதீத கற்பனைகள் நம்மை மன அழுத்தத்திற்கும் தள்ளிவிடும்.

அதீத யோசனை என்பது பலருக்கும் இயல்பாக இருக்க கூடியது தான்.மித மிஞ்சிய கற்பனை எமது மூளையின் செயல்பாட்டினை தூண்ட செயவது மட்டுமன்றி பல்வேறு சந்தர்ப்பங்களில் நன்மைகளையும் தீமைகளையும் ஏற்படுத்திடக்கூடியது.

உண்மையற்ற கற்பனைக்கும் எவ்வாறு அவ்வளவு வலிமை இருக்க கூடும் என்பது பலருக்கும் எழக்கூடிய தீராத சந்தேகமே. எமது எண்ணத்தின் உணர்வுகளால் தூண்டப்படும் மூளை அந்த கற்பனை விடயங்களுக்கு தம்மை ஆட்படுத்திக்கொண்டு செயல்பட தொடங்கிவிடும். இதனை கொண்டு நல்ல விடயங்களுக்கும் தீய விடயங்களுக்கு மனிதன் இயங்க தொடக்கி விடுகின்றான்.

இவ்வகை அதீத கற்பனைகள் ஏற்படுத்தும் எதிர்மறையான விடயங்களில் இருந்து தவிர்த்துக்கொள்வதும், மிதமிஞ்சிய கற்பனையினை குறைத்துக்கொள்ளவும் எவ்வாறு செயல்படலாம் எனப் பார்ப்போம்.

மூச்சுப் பயிற்சி.

தியான முறைகள் ஆனவை உங்கள் மனதை ஒருநிலை படுத்த கூடியவை. மனதின் ஒருமுகத்தன்மையையே அதீத கற்பனை என்ற மனசோர்வினை ஏற்படுத்த கூடிய நிலையினை கட்டுப்படுத்தும் ஒரு வழி ஆகும் இதற்கு மூச்சு பயிற்சியானது பெரிதுமுதவக்கூடியது ஆகும்.

மூச்சு பயிற்சியின் மூலம் மனம் ஒருநிலைப்படுவது மட்டுமல்லாது சுவாச குழாயின் இயக்கம் சீராகப்படுவதுடன் இதயத்தின் துடிப்பு மற்றும் இரத்த ஓட்டம் என்பன செயற்படுத்தப்படும். இதனை தொடந்து மூளையின் செய்யல்பாடும் சீரான நிலைக்கு வரும். அதீத கற்பனை , மனசோர்வு போன்ற ஏற்படுவதற்கு மூளையின் சீரற்ற தன்மை ஒரு காரணி ஆகும்.  எனவே மூச்சு பயிற்சியின் மூலமான ஒருநிலைப்படுத்தலானது அதீத கற்பனை ஏற்படுத்தும்  மனஅழுத்த காரணிகளை கட்டுப்படுத்தும்.

உடற்பயிற்சி.

உடற்பயிற்சி உடலுக்கும், மனதிற்கும் ஆரோக்கியமான பிரதி பலனை தரக்கூடியது என்பது மறுக்கமுடியாத உண்மை. உடலை சீராக பேணுவதற்கு மட்டுமல்ல, மனநிலையினை ஒருமுகப்படுத்தி சீராக செயல்படுத்தவும் உடற்பயிற்சி இன்றியமையாதது ஆகும்.

சீரான உடற்பயிற்சியின் மூலம் உடலின் அவயங்கள் துரிதமாக செயல்பட தொடங்கும் அத்துடன் உடலியக்க சுரப்புகள் சீராக சுரக்கவும் செய்யும். இதன் மூலமான மூளையின் செயல்பாடுகளை சீராக்கிடவும் செய்யும். அதனடிப்படையில் அதீத மனக்கிலேசம் உள்ளிட்ட மன அழுத்த காரணிகள் குறைவடையும்.

உங்கள் அடையாளத்தினை அறிந்துகொள்ளுங்கள் .

எண்ணங்கள் எவ்வகையில் தோற்றம் பெற்றாலும் அவை வெளிப்படுத்தும் உங்கள் நிலை என்ன என்பது தொடர்பில் அதீத கவனம் தேவை ஆகும். உதாரணமாக உங்களை வெற்றியடைந்த முயற்சியாளராக, உயர்ஸ்தானத்தில் உங்களை நீங்களே கற்பனை செய்து உங்கள் எண்ணங்களை மேம்படுத்திக் கொள்வது உங்களுக்கும் சிறந்த பலாபலனை தரும்.

எதிர்மறையான எண்ணங்களையும், பிரதிபலிப்புக்களையும் தரக்கூடிய எண்ணங்களை சிந்திக்காமல் இருப்பது மனதிற்கும், உடலுக்கும் உகந்தது. எதிர்மறையாக எண்ணங்கள் தோன்றும் போது  எமது உடலியக்க செயல்பாதுகளும் எதிர் விளைவுகளை  ஏற்படுத்தும் என்பதனை அறிக .

மேம்பட்ட அணுகுமுறைகளை கொண்ட தியானம்.

தியானம் என்பது உடலுக்கும் , மனதிற்குமான சிறந்த ஆரோக்கிய பயிற்சி ஆகும். ஆயினும் அத்தனை தியான முறைகளும் உங்களின் அதீத கற்பனையினை கட்டுப்படுத்திடாது. தியானங்களை கூட சரியான அணுகுமுறையில் செய்திட வேண்டும்.

பல்வேறு பயிற்சிகளை  மேற்கொள்வதன் மூலம் உங்கள் ஒவ்வொரு அவயங்களுக்குமான செயல்பாடுகளை சீராக்க முடியும் என அறியப்படுகின்றது  அவ்வாறே மூளையின் சீராக்களுக்கும் இவ்வகை சரியான தியான வகைகள் எவை என அறிந்து செயல்பட வேண்டும்.

 

பிரச்சனைகளை எதிர்கொள்ளுங்கள் 

உங்கள் அதி  தீவிர கற்பனையின் விளைவாக ஏற்படக்கூடிய பக்க விளைவுகளுக்கு பயந்தே பலரும் மனசோர்வு நிலைக்கு தள்ளப்படுவதாக அறியப்படுகின்றது. விளைவுகளுக்கு தைரியமாக முகம்கொடுக்க அஞ்சுவதே அனைத்துவித எதிர்மறையான விளைவுகளுக்கும் காரணி ஆகும்.

எவ்வாறாயினும் எதிர்மறை எண்ணங்களை வெளிப்படுத்தும் விளைவுகள் பாதகத்தன்மையினையே ஏற்படுத்தும் என்பதால் அவற்றினை எவ்வாறு எதிர்கொள்வது என்ற பயம் அனைவருக்கும் வரும். எனவே சாதகமான நல்ல எண்ணங்களை கொண்டால் மட்டுமே நல்ல விளைவுகளை எதிர்கொள்ள முடியும் என்ற எண்ணம் அனைவருக்கும் தோன்றும். இதன் மூலம் அதி தீவிர  எண்ணங்களை சந்திக்கும் போது  அவை நல்லனவா இல்லை கெட்டதா என அறிந்து அவற்றினை எதிர்கொள்ள துணிவு வேண்டும்.