உங்கள் வணிகத்தை முன்னேற்ற மேலதிக நேரம் தேவையா

உங்கள் வணிகத்தை முன்னேற்ற மேலதிக நேரம் தேவையா

உங்கள் தினசரி வர்த்தகத்தை அதிகரிக்க பின்வரும் காரணிகளை குறைத்துக்கொள்ளுங்கள்

10/09/2018 | Views 123

உங்கள் வணிக நடவடிக்கைகள் என்னதான் திறம்பட செயல்படுவதாக இருப்பினும் சிற்சில காரணிகள் அவற்றை முன்னேற்ற விடாமல் தடுக்கின்றதனை நீங்கள் அவதானித்து இருப்பீர்கள். என்னதான் துரிதகதியில் வேலைகளை செய்து அனைத்து நடவடிக்கைகளையும் செவ்வனே செய்து வந்த போதிலும் ஒரு சில இடையூறுகள் மற்றும் தேவையற்ற  செயல்பாடுகள் உங்கள் வணிகத்தை  முன்னேற்றிக்கொள்ள விடாமல் தடுத்து விடுகின்றதனை அறியக்கூடியதாக இருக்கும்.


எவ்வாறாயினும் எமது வணிகத்தினை முன்னேற்றுவது தொடர்பில் நாம் அக்கறை செலுத்த வேண்டிய விடயங்கள் பலவும் இருந்த போதிலும்  எமது முன்னேற்றத்தை தடுக்கும் விடயங்களை கண்டறிந்து அவற்றில் இருந்து எவ்வாறு நமது நேரத்தை சேமித்து செயல்திறமிக்க வணிகத்தை முன்னேற்றகரமாக முன் கொண்டு செல்லலாம் என்பதை பார்க்கலாம்.

நேர முகாமைத்துவம் என்பது ஒரு வெற்றிகரமான வணிகத்திற்கு அடித்தளமாகும். குறிப்பிட்ட நேர காலத்திற்குள் எவ்வாறு திறம்பட உங்கள் நேரத்தை செலவழித்து சிறந்த பெறுபேறுகளை முன்னேற்றகரமான விடயங்களையும் அடைந்துகொள்ளலாம் என்பதனையும் சிந்திக்க தொடங்கிடும் முன்னர் அந்த விடயங்களை தடுப்பதற்கென நமது நேரத்தினை வீண் விரயம் செய்ய தூண்டும் காரணிகளை இனம் கண்டுகொள்வதுடன் அவற்றில் இருந்து எவ்வாறு மீளலாம் என்பதனையும் காணலாம்.


சமூக ஊடகம் 

சமூக ஊடகம் என்பது வணிக வளர்ச்சிக்கு தற்காலத்தில் பேருதவி புரியும் விடயமாகவே உள்ளதனை அறியக்கூடியதாக உள்ளது. மற்றைய அனைத்து நடவடிக்கைகளையும் விட சமூக ஊடகத்தின் மூலம் சுமார் 13% சதவீதம் நன்மைகள் கிடைப்பதனை அறியக்கூடியதாக உள்ளது.
 
பொதுவாக சமூக ஊடகங்கள் எமது நேரத்தை வீண் விரயம் செய்வன என்று பலராலும் குறை கூறப்படுவதனை அறியக்கூடியதாக உள்ளது. ஆனால் அதனை பயன்படுத்தும் விதத்திலேயே அதன் மூலமான நன்மையையும் , தீமையும் தங்கியுள்ளதனை நாம் மறுத்துவிட முடியாது.

மற்றைய பிற செயலிகளை விட உங்கள் வணிக செயல்பாடுகளுக்கென பிரத்தியேகமாக உருவாக்கப்படும் சமூக வலைத்தள பக்கங்களின் மீது மட்டுமே உங்களின் கவனம் செலுத்தப்பட வேண்டும். உங்கள் கவனத்தை திசை திருப்பும் வகையில் சமூக ஊடகத்தின் பதிவுகள் பெருவாரியாக இருக்கும் என்ற நிலையில் அவற்றின் மீது எமது கவனம் சென்றுவிடுவதனை தடுப்பதற்கென இதர பிற பக்கங்கள் மற்றும் பதிவுகளை முடக்கிவிட்டாலும் கூட தப்பில்லை என்ற கூரலாம்.

 

திட்டமிடாத காலை 

தினசரி காலையில் உங்கள் பணி தொடங்கும் முன்னம் அன்றைக்கான செயற்பாடுகளை திட்டமிட்டுக்கொள்வதை வழமையாக்கிக் கொள்ளுங்கள். இது உங்கள் நேர முகாமைத்துவத்திற்கு சிறந்த உபாயம். இந்த திட்டமிடலின்  மூலமான எமது செயல்பாடுகள் சிறந்த பலனை தரும் என்பதில் ஐயமில்லை.

ஒரு சில வேலைகள் இடைநடுவில் எமதுத்திட்ட வரையறைக்கு உட்படாமல் செய்ய வேண்டி நேரிடலாம். அவற்றினை சரியான நேரமுகாமைத்துவத்தின் மூலம் செய்து முடிக்கவும் முடியும் ,  மாறாக இவ்வகை திட்டமிடாத இடைப்பணிகளின் காரணமாக நாம் முன்னமே திட்டமிட்ட வேலைகள் கூட குளறுபடி ஆவதற்கு  சந்தர்ப்பங்கள் உள்ளன. 

எவ்வாறாயினும் திட்டங்களை முன்னமே வகுத்துக்கொண்டு செயல்படுவது சடுதியான வேலைகளின் மத்தியில் கூட சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொள்ளும் வகையில் அமையும் என்பாதை கூறலாம். எனவே முன்னதான திட்டமிடல்கள் எமது முன்னேற்றத்திற்கு இன்றியமையாதன என்பதனை மறுக்கமுடியாது.


வேலைப்பல்வகைமை.

ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்வது ஒரு சிலருக்கு மாத்திரமே உள்ள தனித்திறமை என்று கூற வேண்டும் , ஆயினும் செய்யப்படும் அனைத்து வேலைகளும் சரிவர செய்து முடிக்கப்படுமா என்பதில் தான் அதன் வெற்றி தங்கியுள்ளது.

பல வேலைகளை ஒருங்கே செய்வது நேரத்தை மிச்சப்படுத்துவதாக கூறப்பட்டாலும்  அவை முற்றுமுழுதாக சரிவர செய்யப்படுகின்றனவா என்பதனை அறிந்துகொள்வதில் பாரிய பின்னடைவு உள்ளது. இவ்வாறு பல வேலைகளும் ஒருங்கே செய்யப்பட எத்தனிக்கும் போது அவற்றில் பல தோல்வியிலேயே முடிவடைந்து, சரிவர முடிக்கப்படாமல் போய்விடும் என்பது தெரிந்ததே.

அவ்வாறில்லாமல் ஒரு வேலையினை முழு கவனத்துடன் சரியாக செய்து முடித்துவிடும் நிலை உள்ளது எனில் அதுவும் வெற்றிக்கான வழி ஆகும். பல வேலைகளின் மீதான தோல்வியை விட ஒரு வேலையின் மூலமான வெற்றியே சிறந்தது.

 

வருங்காலம் பற்றிய கவலை 

தொழில்முனைவோரின் முன்னேற்றத்தை தடுக்கும் காரணிகளில் மிக முக்கியமானது  வருங்காலம் பற்றிய கவலை ஆகும். எதிர்காலம் பற்றிய திட்டமிடலும், அதற்கான முயற்சிகளும் இருப்பதில் தவறில்லை, ஆனால் எதிர்காலம் பற்றிய கவலையானது நிகழ்கால செயற்பாடுகளையும் பின்னடைய செய்யும் என்பதில் மறுப்பதற்கு இல்லை.

எதிர்காலத்தை நோக்கிய முன்னெடுப்புகள் சரியானதும் தெளிவானதுமாக இருக்கும் பட்சத்தில் அவை பற்றிய கவலைகள் கண்டிப்பாக பாதிப்பினை ஏற்படுத்த போவதில்லை. நிகழ்காலத்தின் சரியான செயற்பாடுகள் , எதிர்காலத்தின் வரையறையுடனான திட்டமிடல்கள் முன்னேற்றத்தினை தவிர பின்னடைவினை தராது என்பதனை நம்புங்கள்.

 

வேலைப்பழு 

அதிகமாக வேலை செய்வதும் கூட எமது தொழிலை முன்னேற விடாமல் செய்யும் என்பதனை அறிவீர்களா?. குறிப்பிட்ட கால எல்லை இல்லாமல் செய்யப்படும் வேலையானது கண்டிப்பாக மனசோர்வினை ஏற்படுத்த கூடியது. அதன் மூலம் சிறிய நன்மைகள் இருந்த போதிலும் பாரிய முன்னேற்றம் ஏற்படப்போவதில்லை.

ஒரே வேலையினை நீண்ட நேரம் சிரத்தையுடன் அதிக தடவைகள் செய்வதன் மூலம் அந்த  வேலை மீதான வெறுப்பு நிலையே தோன்றும். எவ்வாறாயினும் அவற்றின் மூலம் கிடைக்கப்பெறும் வெளிப்படுத்தல் என்பது ஒரே விதமானதாக இருப்பின் வேலையினை இலகுவாக செய்வதில் மாத்திரமே முன்னேற்றம் உள்ளது தவிர அதிகமாக வேலை செய்வதால் எதுவித பலனும் இல்லை என்பதை அறிந்துகொள்ளுங்கள்.