கவனச்சிதறல்களை கட்டுப்படுத்தும் வழிகள்

கவனச்சிதறல்களை கட்டுப்படுத்தும் வழிகள்

வேலை மீதான கவனத்தை சிதறடிக்கும் காரணிகளை கண்டறியுங்கள்

11/09/2018 | Views 136

காலையில் அலுவலகம் வந்து ஒரு வேலையை தொடங்குவதற்கு முன்னமே இருந்து பல்வேறு சுற்றுப்புற விடயங்கள் உங்கள் கவன சிதறல்களை திசைதிருப்பும் விதமாக ஒவ்வொரு நொடியும் நடந்தேறிய வண்ணமே இருப்பதனை உணரலாம். மிக முக்கிய வேலைகளை கூட செய்ய விடாமலும், அல்லது குறிப்பிட்ட நேர எல்லைக்குள் சரியாக செய்துமுடிக்க முடியாமலும் இவ்வகை கவன சிதறல்கள் நமது கவனத்தை திசை திருப்பி விடுகின்றன.

பல்வேறு புற மற்றும் அகச்சூழல் காரணிகள் நமது கவனத்தை சிதறடிக்க செய்கின்றன. இவற்றனை இனம்காணுவதன் மூலம் அவை தரும் இடையூறுகளை தவிர்த்துக்கொள்வதுடன் எமது வேலைகளை திறம்பட செய்து முடிக்கலாம் என்பதனை அறிந்துகொள்ளுங்கள்.

 

பின்னணி இரைச்சலை தவிர்ப்பது.

எமது வேலை செய்யும் சூழலில் ஏதேனுமொரு இரைச்சல் ஒலிக்கும் என்றால் அவ்விடத்தில் வேலை செய்வதை தவிர்த்துக்கொள்வது நல்லது , அல்லது அந்த இரைச்சலான ஒளி எழுப்பும் ஊடகத்தினை நிறுத்தும்படி செய்வது நல்லது. 

 

அமைதியான சூழல் அவசியமானது

நிசப்தமான ஒலிகளற்ற சூழ்நிலையில் உங்கள் மனதும் அமைதி தன்மையினை அடைந்நது கொள்வதுடன்  கவனமும் சிதறடிக்கப்படாமல் வேலையின் மீதான நாட்டமும் அதிகரிக்கப்படும்.

 

சுத்தமான சூழல் 

இரைச்சலை தொடர்ந்து அசுத்தமான குழம்பிய நிலையில் இருக்கும் உங்கள் சூழலினை  உங்கள் மனதிலும் குழப்ப நிலை தோன்றும். எனவே வேலையின் மீதான நாட்டம் திசை திரும்பும் சந்தர்ப்பங்கள் அதிகம். இதனை தவிர்த்துக்கொள்ள எமது சூழலை சுத்தமாக வைத்திருப்பது மனதிற்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் வாய்ந்தது,. இது எமது தொழில் மீதான கவனத்தினை திசை திரும்ப செய்யாது.

 

ஒரு நேரத்தில் ஒரு வேலை 

தொழில் பல்வகைமை கூட நமது நாட்டத்தினை திசை திருப்பும். ஒரே நேரத்தில் பல்வேறு தொழில்களை செய்யக்கூடிய திறமை நமக்கு இருந்த போதிலும் ஒரு எமது தொழில் மீதான கவனம் சிதறடிக்கப்படுவதானது எல்லா வேலைகளையும் ஒழுங்காக செய்ய முடியாமலேயே போய்விடும். எனவே ஒரு நேரத்திலொரு வேலையினை மாத்திரம் செய்வது நல்லது என பரிந்துரைக்கப்படுகிறது.


செல்பேசிகளை தவிர்ப்பது 

உங்கள் வேலைகளை செய்யவிடாமல் தடுப்பதில் உங்களது செல்பேசிகளுக்கு பெரிய பங்கு உள்ளதை நீங்க அறிவீர்களா?  தற்கால ஸ்மார்ட் தொலைபேசிகள் பல்வேறு செயலிகளை சுமந்து வருகின்றன. அவற்றின் மூலம் எழுப்பப்படும் ஒளி சமிக்ஞைகள் உடனடியாக எமது கவனத்தை திசைதிருப்ப கூடியன. எனவே முக்கிய வேலைகளில் நாம் ஈடுபடும்பொழுது கண்டிப்பாக எமது செல்பேசிகளை நம் வசம் வைத்திருக்க கூடாது.

 

இந்த காரணிகள் தவிர்த்து எம் கவனத்தினை  திசை திருப்பும் பல இடையூறுகள் உள்ளன அவற்றை இனம் காணுவதுடன் அவை தரக்கூடிய தொல்லைகளில் இருந்தும், இடையூரில் இருந்தும் தள்ளி நிற்பதுடன் எமது வேலைகளின் மீதான கவனத்தினை அதிகப்படுத்திக்கொள்வது சிறந்த உபாயம் ஆகும்.