வெற்றிபெற்ற தொழில்முனைவோர் தினமும் செய்யும் வேலைகள் 

வெற்றிபெற்ற தொழில்முனைவோர் தினமும் செய்யும் வேலைகள் 

வெற்றியாளர்களின் ரகசியத்தை அறிந்துகொள்ளுங்கள்

11/09/2018 | Views 164

தொழில்முறை வெற்றி என்பது நாம் செய்யும் செயல்களில் திறம்பட செய்வது மட்டுமன்றி பிற வெற்றியாளர்களின் வழிநடத்தல்களை பின்பற்றுவதன் மூலமும் கிடைக்கின்றன. பல சந்தர்ப்பங்களிலும் பல வெற்றியாளர்களை நாம் பிரமிப்புடன் பார்ப்பதுடன் , அவர்கள் எவ்வாறு அந்த வேலையில் வெற்றிகரமாக செயல்படுகின்றனர் என்ற ரகசியத்தினை அறிந்திட நாம் எத்தனித்து தெரிந்ததே.

பொதுவாக வெற்றியடைந்த தொழில்முனைவோர் தினசரி செய்யக்கூடிய வேலைகளை எவை என்று நாம் அறிந்துகொள்வதில் மிகுந்த ஆர்வத்துடனிருப்போம். அதனை தெரிந்துகொள்வதுடன் அவற்றினை செய்துபார்த்து , கடைபிடிப்பதன் மூலம் அவர்களைப்போன்று நாமும் நமது தொழில் நிலையின் வெற்றிபெறுவதை உறுதி செய்துகொள்வதை எத்தனிப்போம்.

அந்தவகையில் வெற்றியடைந்த தொழில் முனைவோர் தினசரி பின்பற்றும் சில முக்கிய அம்சங்களை இனம்கண்டு அவற்றினை பின்பற்றிட முனைவது சிறந்த உபாயம் ஆகும்.

 

சரியான செயல்படும் நேரத்தை தீர்மானித்தல்  

எமது வேலை நேரம் காலை 8 மணிமுதல் மாலை 5 மணிவரை என்ற போதிலும் வாடிக்கையாளரை அதிகம் ஈர்க்கும் நேரமானது அனைத்து வணிக நடவடிக்கைகளுக்கும் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட நேரமாகவே இருக்கும். அது எந்தவொரு தொழில் நிலைக்கும் பொருந்தும். அந்த  குறித்த உச்சபட்ச நேரத்தினை இனம்கண்டு அந்த நேரத்தில் செயல்படுவதே சிறந்த தொழில்முனைவோருக்கான பண்பாகும்.

நேர அட்டவணை ஒன்றினை சரியாக தயாரித்து அவற்றிற்கு ஏற்ப சொல்லதிட்டத்தினை வகுத்து செயல்படும்பொழுதுத சரியான வெளிப்பாடுகளை சிறந்த முறையில் இலகுவாக பெற்றுக்கொள்ள முடியும். எனவே நேர வரையறையினை சரியான முறையில் திட்டமிடுதல் சிறந்த தொழில்முனைவோரின் வெற்றிக்கான ஒரு காரணி என்பதனை உறுதியுடன் கூறலாம்.


திசைதிருப்பி[பும் காரணிகளை அகற்றுவது.

நமது தொழிலை திறம்பட செய்ய முடியாமல் தடுக்க கூடிய காரணிகளை இனம்கண்டு அவற்றினை அகற்றிக்கொள்வதில் தொழில்முனைவோர் வெற்றி பெறுகின்றனர் . உதாரணமாக செல்பேசிகள், ஓசைகள் உள்ளிட்ட நமது வேலைகள் மீதான கவனத்தை திசை திருப்பும் காரணிகளை முதலில் இனக்கண்டு அவற்றினை நமது வேலை நேரத்தில் கட்டயாமாக தவிர்ப்பது சிறந்தது என அறியமுடிகின்றது.

சில பெரிய நிறுவனங்களில் ஊழியர்கள் சொந்த செல்பேசிகளை பயன்படுத்த தடை விதித்து உள்ளனர்,ஏனெனில் நமது கவனைத்தை திசை திருப்பும் காரணிகளில் மிக முக்கிய பங்கினை வகிப்பது சோர்ந்த செல்பேசி பாவனை ஆகும் என்பதை யாராலும் மருத்துவிட முடியாது. அதன்மூலம் எழுப்பப்படும் குறுஞ்செய்தி ஒலிகள், அழைப்பும்மணி போன்ற உடனடியாக நமது கவனத்தினை திசை திருப்பும். எனவே அவற்றினை தவிர்ப்பதுவே வெற்றிபெற நமது கவனத்த்தினை அர்ப்பணிக்கும் செயலாகும் என்பதை வெற்றியாளர்கள் அறிவார்கள்.


வேலைகளின் சரியான திட்டமிடல்.

தினசரி நம் செய்யும் பணிகளை திட்டமிட்டு செய்த போதும் சரியான நேர பிரயோகம் என்பதுவே முக்கியத்துவமும் பெறுகின்றது. சில வேலைகளை நேர வரையறை மற்றும் காலக்கெடுவினை பயன்படுத்தி செய்யும்பொழுது அவற்றின் மூலமான சிறந்த பெறுபேறுகளை இலகுவாக அடைந்துகொள்ள முடிகின்றது.

உலகில் மிகவும் ஆக்கப்பூர்வமான மக்கள் தங்கள் படைப்பாற்றலை திட்டமிட்டு செயல்படுகின்றனர். எனவே திட்டமிட்டு செயல்படுதல் என்பது வேலைகளில் ஆக்கபூர்வமான சிறந்த வெளிப்படுத்தல்களை பெற்றுக்கொள்ளும் சிறந்த வழி ஆகும் என்பதனை மறுத்துவிடமுடியாது. எனவே வெற்றியடைந்த தொழில்முனைவோர் கண்டிப்பாக பின்பற்றும் இந்த முறையானது வேலைகளின் வெற்றியினை உறுதிப்படுத்தும்.

 

முக்கியத்துவத்தினை வரையறை செய்துகொள்ளல்  

வேலைகள் பலதும் இருந்த போதிலும் அவற்றில் எதனை முன்னதாக செய்வது மற்றும் எந்த வேலைக்கு முக்கியத்துவம் கொடுப்பது என்பதில் அதன் வெற்றி தங்கியுள்ளது. அவசர வேலைகள் என்ற பொழுதும் அதன்மூலமான சரியான வெளிப்படுத்தல் கிடைக்கும் என்றால் மட்டுமே அவற்றினை முக்கியத்துவப்படுத்தி செய்வது சிறந்த உபாயம் ஆகும்.

மேலும் முக்கியத்துவமற்ற சில வேலைகளின் மூலம் உங்களின் கவனம் சிதறடிக்கப்படும் . எனவே செய்யப்படும் வேலைகள் மீதான நாட்டமும் குறைவடையும் நிலை ஏற்பட்டுவிடும். எனவே வேலைகளுக்கு மட்டுமல்ல , அதன்மூலமாக வெளிப்படுத்தல்களை கருத்திற்கொண்டு முக்கியத்துவத்தினை முன்வரிசைப்படுத்தி திட்டமிடுவது சிறந்த வெற்றியாளனுக்கு வெற்றியினை பெற்று தருவது ஆகும்.

 

பின்னூட்டங்களை சிறந்தமுறையில் வழங்குவது.

பிறருக்கு நாம் அளிக்கும் பதில்கள் மற்றும் அவரது சேவைக்கு நாம் தரும் பதிலானது நம்மை மேன்மையடைய செய்யும் . அந்தவகையில் சிறந்த வெற்றியாளனின் பண்புகளில் ஒன்று தமக்கு வரும் விமர்சனங்கள், எழுப்பப்படும் கேள்விக்குகளுக்கு சிறந்த பதிலை தருவது ஆகும்.

வேலைப்பழு என்று பதிலளிப்பதற்கு தவிர்தலானது பிறரிடமிருந்து தொடர்பற்ற நிலையினை உருவாக்கிவிடும், எந்த வேலையினையும் நாம் செய்வதற்கு பிறரின் பின்னூட்டல்களும், வெளிப்படுத்தல்களும் முக்கியபங்கனை வகிக்கின்றது. எனவே மின்னஞ்சல் , தொலைபேசி போன்றவற்றுக்கு உரிய நேரத்தில் பதிலளிப்பதன் மூலம் சிறந்த வெற்றியாளனின் பண்பு வெளிப்படுகின்றது.